தனிப்பட்ட செய்திகளை வெளிப்புற சேவையகங்கள் மூலம் அனுப்புவதில் சோர்வடைகிறீர்களா? நம்முடைய நண்பர்களுடன் பல கோப்புகளைப் பகிர வேண்டுமா? நம்முடைய அலுவலகத்திற்கு வெளியேஉள்ள மேககணினி சேவைகளை நம்பவில்லையா? கவலையேபடவேண்டாம் இவையனைத்திற்கும் சரியான தீர்வு BeeBEEPஎன்பதுதான்
இந்த BeeBEEP என்பது peer to peerஎனும் பயனாளர்களுக்கு இடையேயான ஒரு பாதுகாப்பான அலுவலக செய்தியாளராகும் .இந்த BeeBEEP செயல்படுவதற்குஎன தனியாக ஒரு சேவையகம் எதுவும் தேவையில்லை.
அதாவது இது செயல்படுவதற்காகவென தனியாக சேவையாளர் கணினிஎன்ற ஒன்று எதுவும் இல்லாமலேயே நம்முடைய அலுவலகம், வீடு அல்லது இணைய கஃபே போன்ற உள்ளூர் பகுதி வலைபின்னல்களில் நம்முடைய சக ஊழியர்களுடனும் அலுவலக நண்பர்களுடனும் பேசலாம் கோப்புகளை பரிமாறிக்கொள்ளலாம். இதுVPNகளுடன் செயல்படுகின்ற, தனியுரிமையுடன் , பாதுகாப்பு அவசியமான எல்லா இடங்களிலும் இந்த சேவையகமற்ற பயன்பாடு இன்றியமையாததாக திகழ்கின்றது .
இதன்வசதி வாய்ப்புகள் பின்வருமாறு பயன்படுத்த எளிதானது (செயல்படுவதற்காகவென தனியாக சேவையகம்எதுவும் தேவையில்லை) பாதுகாப்பாக நேருக்குநேர்அரட்டை அடிக்கசிறந்தபயன்பாடாக விளங்குகின்றது அதைவிட இதில் குழுக்களாக அரட்டை அடிக்கமுடியும் , கோப்புகளையும் கோப்புறைகளையும் நன்பர்களுடன் எளிதாக பரிமாற்றம்செய்து கொள்ளமுடியும் கிடைக்கின்ற எல்லா செய்திகளையும் செய்தி வரலாறாக இதில் சேமித்து கொள்ள முடியும் நம்முடைய கணினியில் கோப்புறைகளை DropBox ஆக பகிர்ந்து கொள்ளமுடியும் நம்முடையகோப்புகளையும் கோப்புறைகளையும் பயனாளர்களுக்கு இடையே p2p ஆக பகிர்ந்து கொள்ளமுடியும்
அதைவிட நம்முடைய கணினியை கூட இதன் வாயிலாக நம்முடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும்
BeeBEEP என்பது இலவச உடனடி செய்தியிடல் பயன்பாடாகும், இது ஒவ்வொரு நாளும்
பல்வேறு நிபுணர்களாலும்பயன்படுத்தபடுகின்ற உலகில் நம்பர் 1 ஆக வெற்றிபெற்றுள்ளது. இந்த மிகவும் எளிமையாக, உயர் மட்ட தனியுரிமையைப் பராமரிக்க விரும்பும் அலுவலகங்களுக்கு உலகில் கிடைக்கக்கூடிய சிறந்த தீர்வாக அமைகிறது. நம்முடைய அலுவலகத்தில், ஆய்வகத்தில், பள்ளியில், வீட்டில், மருத்துவமனையில் அல்லது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைப்படும் வேறு எந்த செயலிலும்,நம்முடைய தனிப்பட்ட செய்திகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த வழிமுறையாக இந்த பீபீப் எனும் பயன்பாடுஅமைந்துள்ளது. அலுவலகத்தில் வெவ்வேறு இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகிறீர்களாஎந்த பிரச்சினையும் இல்லை! . விண்டோஸ், லினக்ஸ், மேக், ராஸ்பெர்ரி , ஓஎஸ் / 2 ஆகிய எந்தவொரு இயக்கமுறைமையிலும் இதனை நிறுவுகை செய்து பயன்படுத்திகொள்ளலாம் தனியுரிமையின் எல்லைக்கு அப்பால் செல்ல முயற்சிப்பவர்களுக்கு விஷயங்களை முடிந்தவரை கடினமாக்குவதே இந்த BeeBEEP அடிப்படைசெயலாகும் உலகில் பாதுகாப்பான தொகுதி குறியாக்க வழிமுறைகளில் ஒன்றின் மூலம், இடைத்தரகர்கள் இல்லாமல், செய்திகள் குறியாக்கம் செய்யப்பட்டு நேரடியாக பெறுநருக்குஇதன் வாயிலாக வழங்கப்படுகின்றன உலகளாவிய பிணையத்தில் உள்ள கைபேசிகளை விடஉள்ளூர் பிணையத்தில் உள்ள மேஜைக் கணினிகள் மிகவும் பாதுகாப்பானவை; ஒரு தொலைபேசி அழைப்பை விடஇந்த உடனடிசெய்தியாளர்மிகப் பாதுகாப்பானது: இன்று சுற்றுச்சூழல் இடைமறிப்பு கணினி ஒன்றை விட மிகஎளிமையானது. "ஒழுங்காக உள்ளமைக்கப்பட்ட பீபீப் நெட்வொர்க் செய்திகளை இடைமறிக்க விரும்புவோருக்கு விஷயங்களை மிகவும் சிக்கலாக்குகிறது." இதற்கெல்லாம் சான்றாக, உலகெங்கிலும் உள்ள ஒரு சில காவல்துறைகள் இராணுவத் துறைகள், சட்ட நிறுவனங்கள், வங்கிகள் , பாதுகாப்பு முகவர் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தகவல்தொடர்புகளுக்கு பல ஆண்டுகளாக இந்த பீபீப் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ..., இது கட்டணமற்றது விளம்பரங்கள் இல்லாதது. இந்த BeeBEEP எனும்பயன்பாடானது பயன்படுத்த மிகவும் எளிதானது. இப்போது இதனை நம்முடைய கணினியில் உடனடியாகஇன்றே நிறுவுகைசெய்து, நம்முடைய நண்பர்களுடன் செய்திகளையும் கோப்புகளையும் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட முறையில் பரிமாறத் தொடங்குக