நம்மில் பலரும் ப்ளூடூத் அடிப்படையில் ஆன கருவிகளை(bluetooth devices) பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் இத்தகைய ஊடலை(bluetooth )அடிப்படையிலான கருவிகளில், உள்ள மின்கல அளவை(battery percentage ) கண்டறிவது குழப்பமான ஒன்றுதான்.
உதாரணமாக நம்மில் பலருக்கும், தேவைப்படும் நேரத்தில்! சுட்டியில்( mouse) மின்னாற்றல் தீர்ந்து போய் தவித்து இருப்போம்.
இதற்கான ஒரு எளிய தீர்வை உபூண்டு 24. 04 வெளியிட்டில் காண முடிகிறது.
ஆம்! உங்களுடைய ப்ளூடூத் கருவிகளில் இருக்கக்கூடிய ஆற்றல் அளவை, உங்கள் இயங்கு தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
சரி! அதற்கான வழிமுறைதான் என்ன வாருங்கள் இந்த காணொளியில் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
ஆற்றல் அளவை அறிந்து கொள்ளும் வழிமுறை:-
GNOME கணினிகளில் மட்டுமே இந்த முறை வேலை செய்கிறது. எனவே உங்களுடைய கணினி சூழலை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் அமைப்புகளை திறக்கவும்.
அதன் உள்ளாக ஆற்றல் அமைப்புகள்(power) என்பதை திறக்கவும். அப்பொழுது உங்களுக்கு கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள படி, வலது புறத்தில் இணைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் கருவிகளின் ஆற்றல் அளவு காண கிடைக்கும்.
எளிமையாக அறிந்து கொள்ளும் முறை:-
ஒவ்வொரு முறையும் அமைப்புகளை திறக்க கஷ்டமாக இருக்கிறதா! அதற்காகவும் ஒரு எளிய வழிமுறை உள்ளது.
கீழ்காணும் இரண்டு துணைக் கருவிகளை உங்களுடைய ஏங்குதலத்தில் நிறுவுங்கள் அவ்வளவுதான் வேலை எளிமையாகி விட்டது!
1.ப்ளூடூத் மின்னாற்றல் அறிவிப்பான் – உங்கள் முகப்பு பக்கத்தின் மேல் புறத்தில், மின்னாற்றல் அளவுகளை அறிந்து கொள்ள முடியும்
2. ப்ளூடூத் மின் ஆற்றல் அளவுகோல் – உங்கள் அமைப்புத் தட்டில் (system tray) தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
அவ்வளவுதான் எளிமையாக உங்களுடைய ப்ளூடூத் கருவிகளின் மின்னாற்றல் அளவீடுகளை அறிந்து கொள்ள முடியும்.
எப்படி இந்த கட்டுரையானது itsfoss வலைதளத்தில் அபிஷேக் பிரகாஷ் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காதே என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,
நாகர்கோவில் – 02,
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை
மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com