Category Archives: கணியம்

எளிய தமிழில் 3D Printing 18. வாகனத் தொழில்துறைப் பயன்பாடுகள்

வாகனத் துறை முப்பரிமாண அச்சிடலின் திறனைப் பல பத்தாண்டுகளாகப் பயன்படுத்துகிறது. முப்பரிமாண அச்சிடல் விரைவான முன்மாதிரிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மற்றும் புதிய வாகன மாதிரிகளில் வடிவமைப்பு நேரத்தையும் முன்னீடு நேரத்தையும் (lead time) கணிசமாகக் குறைக்கும் திறனை நிரூபித்துள்ளது. வாகன பாகங்களுக்குப் பல தனிப்பயன் வழியுறுதிகள் (jigs) மற்றும் நிலைப்பொருத்திகள் (fixtures) தேவை தொழில்துறையில் உற்பத்திப் பணிப்பாய்வுகளை (workflow) 3D அச்சிடல்  திறன்படுத்தியுள்ளது. முன் காலத்தில் வாகன பாகங்கள் தயாரிக்க தனிப்பயன் வழியுறுதிகள், நிலைப்பொருத்திகள் மற்றும்… Read More »

எளிய தமிழில் 3D Printing 17. கலைப்பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தி

மெழுகு வார்ப்பு (lost wax process) கைவினை (handcrafting) மற்றும் மெழுகு வார்ப்பு ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் வரலாற்று ரீதியாக ஆபரணங்களை உருவாக்குவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஒரு பூ வடிவில் ஆபரணம் செய்யவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். மெழுகு வார்ப்பு முறையில் முதலில் அதே வடிவில் மெழுகில் பூ தயாரித்துக் கொள்வோம். பிறகு அந்த மெழுகுப் பூவை உள்ளே வைத்து அச்சு தயாரிப்போம். அதன்பின் மெழுகை உருக்கிவிட்டு அந்த அச்சுக்குள் தங்கம் அல்லது வெள்ளியை உருக்கி ஊத்துவோம். அது இருகியபின்… Read More »

எளிய தமிழில் 3D Printing 16. துரித முன்மாதிரி மற்றும் பெருந்திரள் தனிப்பயனாக்குதல்

3D அச்சிடுதல் முதன்முதலில் துரித முன்மாதிரிக்கான (prototyping) வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது பாரம்பரிய உட்செலுத்து அச்சு (injection moulding) மூலம் வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியைத் தயாரிக்க, பல லட்சங்கள் செலவாகும் மற்றும் பல வாரங்கள் எடுக்கும்.  ஒவ்வொரு புதிய மறு செய்கையிலும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் அது ஒருக்காலும் நடைமுறைக்கு ஒத்தே வராது. 3D அச்சிடுதல் தொழில்நுட்பம் பாரம்பரிய உற்பத்தியில் தேவைப்படும் முன்னீடு (lead times) நேரங்களை வெகுவாகக் குறைக்கிறது. ஒரு முன்மாதிரிக்குப் பல வாரங்கள் எடுக்காமல் சில… Read More »

பாடப்பொருளாக “எளிய தமிழில் Robotics” நூல்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா. நடமாடும் எந்திரனியல் ஆய்வகம்   அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்திரனியல் (Robotics), பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை அணுகும்… Read More »

எளிய தமிழில் 3D Printing 15. கல்வி மற்றும் பயிற்சியில் 3D அச்சிடல்

இனிவரும் கட்டுரைகளில் முப்பரிமாண அச்சிடல் எம்மாதிரி வேலைகளுக்குப்  பயன்படுகிறது என்பது பற்றி விவரமாகப் பார்ப்போம். பல பள்ளிகள் தங்கள் பாடத்திட்டங்களில் 3D அச்சு முறைகளை இணைத்து வருகின்றன.  கல்விக்கான 3D அச்சின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாமல் மாணவர்கள் முன்மாதிரிகளை உருவாக்க முடியும். இதன் மூலம் மாணவர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாகத் தயார்படுத்த உதவுகிறது.  சித்திரமும் கைப்பழக்கம் என்பது பழமொழி. ஆகவே மாணவர்கள் கைமுறையாக மாதிரிகளை வடிவமைத்துத் தயாரிப்பதன் மூலம் 3D வடிவியல் பற்றியும்… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் – மே 07 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, மே 07 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

எளிய தமிழில் 3D Printing 14. பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல்

பாகத்தின் வரைபடம் இருந்தால் பொருள் சேர் உற்பத்தி மூலம் நம்மால் அந்த பாகத்தைத் தயாரிக்க முடியும். ஆனால் நம்மிடம் பாகத்தின் வரைபடம் இல்லை, அதற்கு பதிலாக தேய்ந்த அல்லது உடைந்த பாகம் மட்டுமே உள்ளது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வது? இம்மாதிரி தருணங்களில் பாகத்தை வருடி வரைபடம் தயாரித்தல் நமக்குக் கை கொடுக்கும். மீள்நோக்குப் பொறியியல் (Reverse engineering) வழக்கமாக முதலில் வரைபடம் வரைந்து அதன் பின்னர் அந்தப் படத்தில் உள்ளபடி பாகம் உருவாக்குவோம். இதை… Read More »

எளிய தமிழில் 3D Printing 12. அச்சடித்த பின் வரும் வேலைகள் (Post-processing)

தாங்கும் பொருட்களை நீக்குதல் (Support Removal) மற்றும் பிசினை சுத்தம் செய்தல் இழையை உருக்கிப் புனைதல் (FDM) முறையில் அச்சு எந்திரத்தின் அடித்தட்டிலிருந்து எடுத்து ஆறியபின் முதலில்  பாகங்களின் தாங்கும் பொருட்களை அகற்றவேண்டும். ஒளித் திண்மமாக்கல் (stereo lithography) முறையில் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்களைப் பயன்படுத்துவோம் என்று பார்த்தோம். ஆகவே இம்முறையில் உருவாக்கிய பாகங்களில் தாங்கும் பொருட்களை அகற்றும் முன்னர் தேவையற்று ஒட்டியிருக்கும் திரவப் பிசினை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.  தூய்மை… Read More »

Kanchi Linux Users Group வாராந்திர கலந்துரையாடல் – ஏப்ரல் 02 , 2023 – மாலை 4-5

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல்  02 , 2023 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான… Read More »

i3 window manager

சமீபத்தில் KDE ல் இருந்து i3 window manager க்கு மாறி உள்ளேன். எனது பழைய கணினியில் 8 GB RAM இருந்தாலும், linux mint cinnamon மெதுவாக வேலை செய்கிறது. அலுவலக கணினியில் 16 GB RAM இருப்பதால் KDE வேகமாகப் பறக்கிறது. இரு கணினிகளிலும் மாறி மாறி வேலை செய்வதால், இரண்டின் வேக மாறுபாடு காரணமாக, சோர்வு நேரிடுகிறது. இதனை தீர்க்க வழி தேடியபோது, i3 window manager பற்றி அறிந்தேன். இது மிகவும்… Read More »