Category Archives: கணியம்

Variables & Operators in Javascript

3 Variables Javascript-ல் உள்ள variable-ஆனது முதல் நிலைத் தரவு வகைகளான(primitive data types) எண்கள், எழுத்துக்கள் மற்றும் ‘true’ , ‘false’ என்பது போன்ற Boolean மதிப்புகளை சேமிக்கும் வல்லமை கொண்டது. மேலும் Null மற்றும் undefined என்பது போன்ற பிற நிலைத் தரவு வகைகளையும் இது ஆதரிக்கும். Variable Declaration & Initialization Javascript-ல் உள்ள ஒரு variable-ஆனது எழுத்துக்கள், எண்கள் மற்றும் தசம எண்கள் போன்ற அனைத்து விதமான தரவுகளையும் தானாகவே அடையாளம்… Read More »

JavaScript

1 JavaScript  – அறிமுகம் JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் ‘எளிய தமிழில் HTML’ எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு Client side scripting language ஆகும். அதாவது… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 7. நீங்கள் ஒரு அற்புதமான நிரல் பங்களிப்பாளராக ஆகலாம்

இங்கு நியூயார்க் நகரில் ஒரு சுறுசுறுப்பான காலை நேரம். என் மின்னஞ்சல் அகப்பெட்டியில் பார்த்தால் இனிமையான ஆச்சரியங்கள் பல உள்ளன. முதலில் என்னுடைய திறந்த மூல திட்டங்களில் ஒன்றுக்கு ஒரு நிரல் ஒட்டு (patch) வந்துள்ளது. இரண்டாவது ஒட்டு இன்று பிற்பகல் வரும். மூன்றாவது ஒருவேளை இன்றிரவோ அல்லது நாளையோ ஒரு புதிய பங்களிப்பாளரிடமிருந்து வர வேண்டும். என் வேலை நேரம் போக, நான் சில திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிக்கிறேன் மற்றும் அவற்றை நிர்வகிக்கிறேன். நான்… Read More »

Selenium Webdriver – 2

Search Results-ஐ வெளிப்படுத்தல் magento-demo.lexiconn.com/ இந்த வலைத்தளத்தின் searchbox-ல் சென்று “Bed & Bath” எனக் கொடுக்கும்போது, அது பின்வருமாறு 12 விடைகளை வெளிப்படுத்துகிறது. இதை automate செய்வதற்கான code பின்வருமாறு அமையும். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode… Read More »

எளிய தமிழில் WordPress- 15

தன்விபரப் பக்கம்: My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும். அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும். தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம். (உங்கள் பெயர் எப்படி மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய தன்விபரக் குறிப்புகள், கடவுச்சொல் மாற்றங்கள்.) மாற்றியமைக்கப்பட்ட பின்னர் Update Profile எனும் பட்டனை அழுத்தி சேமிக்க வேண்டும்.

எளிய தமிழில் WordPress- 16

Tools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில்,  அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and Tags Converter: Categories and Tags Converter என்பது ஏற்கனவே உள்ள வகைகளை வகைச்சொற்களாகவும், வகைச்சொற்களை வகைகளாகவும் மாற்ற உதவும்… Read More »

எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள் Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம். முதலாவது General Settings: தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம். Writing Settings: இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried இருக்கும். மாற்ற வேண்டுமெனில்) மாற்றலாம். தவிர சில எழுதும் வரைவுகளை (Post Standards) மாற்ற இயலும். Reading Settings: இதில்… Read More »

எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users) Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர். அவை குறித்து, Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம். பொதுவாக ஒரு தளத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட adminகள் இருப்பதை wordpress ஆதரிக்கவில்லை என்றபோதிலும், நமக்குத் தேவையாயிருப்பின் ஏற்படுத்திக் கொள்ளலாம். Editor… Read More »

எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header)  சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம். பின்புலம் (Background) தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும். எடிட்டர் (Editor): எடிட்டர் என்பது நாம் CSS PHP முதலான கணினி மொழிகளைப் பயன்படுத்தி தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். அதற்கு அம்மொழிகள்… Read More »

எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets ஆக சொல்லலாம். மின்னஞ்சல் சந்தா, ட்விட்டர் பேட்ஜ்களைக் கூட widgets ஆக பயன்படுத்தலாம். Widgets மெனுவில் Available Widgets எனும்… Read More »