Category Archives: ச.குப்பன்

செநு(AI) நம்முடைய அன்றாட வாழ்க்கையைஎவ்வாறு மாற்றக்கூடும்

செநு(AI) ஏற்கனவே நம் வாழ்க்கையை பல்வேறு வழிகளில் பாதித்து வருகிறது, மேலும் இதுஎதிர்காலத்தில் எங்கும் பரவக்கூடும் என்று உறுதியளிக்கிறது. ஆனால் இதிலுள்ள சவால்கள் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக இது நெறிமுறையும், எந்தவிதமான சார்புகளும் இல்லாத முடிவுகளை எடுக்க உதவுகிறது. கார்ட்னரின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு (AI) உலகளவில் 30% க்கும் அதிகமான CIO களுக்கு முதல் ஐந்து முதலீட்டு முன்னுரிமையாக இருக்கும் எனக்கூறுகின்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் செநு(AI) வடிவமைக்கும் சில… Read More: செநு(AI) நம்முடைய அன்றாட வாழ்க்கையைஎவ்வாறு மாற்றக்கூடும் »

விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள்

விண்டோவை பயன்படுத்துவதில் சோர்வடைந்துவிட்டோம், ஆனால் லினக்ஸை பயன்படுத்துவது பயம் ஏற்படுகின்றது எனில் சில லினக்ஸ் வெளியீடுகள் விண்டோவைப் போல தோற்றமளித்து, பயனாளரின் நட்புடன் கூடிய முனைம–கட்டணமற்ற பயனர் அனுபவத்தை வழங்குகின்றன.எனவே எளிதாக இந்த லினக்ஸ் வெளியீட்டினை பயன்படுத்தி கொள்க. விண்டோவை போன்ற அனுபவத்தை வழங்கும் ஐந்து லினக்ஸ் விநியோகங்கள் பின்வருமாறு, ! 1 Q4OS: லினக்ஸ்வெளியீடுகளில் ஒரு மறைக்கப்பட்ட இரத்தினம் போன்றது Q4OS என்பது டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் வெளியீடு ஆகும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை ,ஆகியவற்றுடன்… Read More: விண்டோவைபோன்றதோற்றமளித்திடுகின்ற ஐந்துலினக்ஸ் வெளியீடுகள் »

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்துதிறமூல கருவிகள்

ஒவ்வொரு நிரலாளருக்கும் குறிமுறைவரிகளை எழுதவும், அதைபரிசோதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சில திறமையான கருவிகள் தேவை. அவ்வாறானவர்களுக்கு உதவிடுவதற்காக சில திறமூலகருவிகளிலும் உள்ளன, அதாவது எவரும் அவற்றை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு நிரலாளரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான ஐந்து திறந்த மூலக் கருவிகளைப் பற்றி காண்போம். 1. Git 🗂️ உருவப்படத்தை ஒரு whiteboard இல் வரைவதாக கொள்க, திரும்பிச் சென்று முன்பு செய்தபணியை காண விரும்புவதாகவும் மேலும் அதில் திருத்தம்செய்ய விரும்பவதாகவும் கொள்க… Read More: ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்துதிறமூல கருவிகள் »

குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம். தற்போதை சூழலில் திறமையான மென்பொருள் உருவாக்குநர்கள் போதுமான அளவு கிடைத்திடாமல் பற்றாக்குறையாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களுடைய பணியை விரைவாகச் செய்து முடிக்க செயற்கை நுண்ணறிவு (AI)… Read More: குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக »

நிரலாளர்களுக்கான குறிமுறைவரிகளின் முதன்மையான சவால்கள்

நிரலாளர்கள் தங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், குறிமுறைவரிகளில் எதிர்கொள்கின்ற சவால்கள் நிரலாக்கத்தின் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும், புதிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளவும், தொழில்நுட்ப நேர்காணல்களுக்குத் தயாராகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட , ஈர்க்கக்கூடிய வழிமுறையை வழங்குகின்றன. தம்முடைய அடிப்படை திறன்களை வலுப்படுத்த விரும்பும் ஒரு தொடக்க நிலையாளராக இருந்தாலும் அல்லது கூர்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனுபவம் வாய்ந்த நிரலாளராக இருந்தாலும், குறிமுறைவரிகளின் சவால்களில் பங்கேற்பது ஒரு நிரலாளராக வளர உதவும். 2024 இல் நிரலாளர்களுக்கு… Read More: நிரலாளர்களுக்கான குறிமுறைவரிகளின் முதன்மையான சவால்கள் »

ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை பணிசெய்த நேரத்தை இந்த மீட்பு இயக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். லினக்ஸின் துவக்கக்கூடிய விரலியின்(USB) மீட்டெடுப்பு வட்டு என்பது லினக்ஸின்… Read More: ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும் »

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்பது பொதுமக்கள் நிரலாளர்கள் போன்று எந்தவொரு குறிமுறைவரிகளையும் எழுதிடவேண்டியத் தேவையில்லாமல் மென்பொருளை தாமே சுயமாக உருவாக்குவதற்கான ஒரு… Read More: குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள் »

தரவு அறிவியலுக்கான ஐந்து மறைக்கப்பட்ட இரத்தினம் போன்ற பைதானின் நூலகங்கள்

தரவு அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது, பணிச்சுமையை குறைத்து செயல்திறனை மேம்படுத்த பைதான் சூழல் அமைப்பை நம்புவது கிட்டத்தட்ட அவசியமாகும். அதனால்தான் தரவு அறிவியல் பணிகளுக்கு இடமளிக்கின்ற வகையில் பல்வேறு பைதான் நூலகங்களும் உருவாக்கப்பட்டுவெளியிடுகின்றன. இருப்பினும், Pandas, Scikit-learn, Seaborn போன்ற பிற பிரபலமான நூலகங்களால் மறைக்கப்படும் போது பிரபலமாகாத வேறபல பெரிய நூலகங்கள் யாருக்கும் பயன்படமுடியாமல் தத்தளிக்கலாம். உண்மையில், பிரபலமான நூலகங்களை விட பல மறைக்கப்பட்ட நூலகங்கள் வேறுசில சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்படுகின்றன என்பதே உண்மையான களநிலவரமாகும்.… Read More: தரவு அறிவியலுக்கான ஐந்து மறைக்கப்பட்ட இரத்தினம் போன்ற பைதானின் நூலகங்கள் »

செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா?

சில மாதங்களுக்கு முன்பு, DeepLearning.AI இன் நிறுவனர் Andrew Ngஎன்பவர் , LangChAIn.js உடன் இணைந்து LLM பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு பாடத்திட்டத்தை கொண்டு வந்தார். இது LLM இல் சூழல்–விழிப்புணர்வு பயன் பாடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தியது, மேலும் இணைய அபிவிருத்தி சந்தையை ஆளும் திறன்மிக்க ஒருநிரலாக்க மொழி செநு(AI) பயன்பாடுகளை உருவாக்குகின்ற திறனையும் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. சில வாரங்களுக்கு முன்பு, இரண்டு மூத்த மேம்படுத்துநர்களான, தேஜஸ் குமார் , கெவின்… Read More: செநு(AI) பயன்பாடுகளை உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நமக்கு உதவுமா? »

நமக்கு இந்த ஆறு முக்கிய வேறுபாடுகள் மட்டும் தெரிந்தால் போதும் விண்டோவிற்கு பதிலாக லினக்ஸைப் பயன்படுத்துவது எளிதாகும்

எந்தவொரு இயக்க முறைமையையும் புதியதாக பயன்படுத்திட துவங்குவது என்றால் நமக்கு அதிகபயமாகவும் வெறுப்பாகவும் இருக்கும், ஏனென்றால் புதிய சூழலில் செயலிகளும், பயன்பாடுகளும் நாம் இதுவரை பழகிய விதத்தில் செயல்படா. அவ்வாறான நிலையில் விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறவிரும்புவோர் விண்டோவிற்கும் லினக்ஸுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் கற்றுக்கொள்வது அவ்வாறான வெறுப்பை விருப்பமாக மாற்றிவிடும். பொதுவாக நாம் புதியதான ஒரு பகுதிக்கு செல்லும் போது, ​​தண்ணீரிலிருந்து தரையில் வீசிய மீன் போன்று மிகவும் போராட்டமாக இருக்குமோ என்ற கவலை எழுவது இயல்புதான். அவ்வாறு… Read More: நமக்கு இந்த ஆறு முக்கிய வேறுபாடுகள் மட்டும் தெரிந்தால் போதும் விண்டோவிற்கு பதிலாக… »