இந்த மூன்று எளிய படிமுறைகளுடன் யார் வேண்டுமானாலும் மூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிமாற்றம் செய்து பயன்பாடாகஆக்கலாம்
பயன்பாட்டிற்கான மூலக்குறிமுறைவரிகளை தொகுக்க, குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது அல்லது படிப்பது என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகைசெய்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன, ஆனால் திறமூலத்துடன் வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்பினை பெறமுடியும்: குறிமுறைவரிகளைநாமே தொகுக்கலாம். மூலக் குறிமுறை வரிகளைத் தொகுப்பதற்கான உன்னதமான மூன்று-படிமுறைகளின் செயல்முறைகள் பின்வருமாறு: $ ./configure $ make $ sudo make install மென்பொருளை உருவாக்க கட்டளைவரிகளை நிறுவுகைசெய்திடுதல் நாம் குறிமுறைவரிகளை தொகுப்பது இதுவே முதல் முறை என்பதால், மென்பொருளை… Read More »