Category Archives: பங்களிப்பாளர்கள்

Dayon எனும்கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூரஉதவி-யாளர்

தற்போது பயன்பாட்டில் உள்ள Dayon என்பது கட்டற்ற மேஜைக்கணினியின் தொலைைதூர உதவித்தீர்வாகும் .இது பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது, இதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென பதிவுஎதுவும் செய்யத்தேவையில்லை , தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் கட்டணம்எதுவுமில்லாமல் கிடைக்கின்றது தொலைநிலை உதவி சேவை இது தொலைதூரத்திலிருந்து கணினியின் செயலை காணவும் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கின்ற ஒருதிறமூல, குறுக்கு-தள JAVA தீர்வாகும். இந்த அர்த்தத்தில், இது ஏற்கனவே இருக்கின்ற பல்வேறுதொலைநிலை மேசைக்கணினி தீர்வுகளைப் போன்றே உள்ளது.ஆனால் இது அவைகளைவிட மதிப்புமிக்ககூடுதலான சில வசதிகளையும், கொண்டுள்ளது.… Read More »

மூலக் குறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்கிட Doxygenஎனும் பயன்பாட்டினை பயன்படுத்திகொள்க

Doxygen என்பது இயல்புநிலையில் குறிப்புரை செய்யப்பட்ட C++ எனும் மூலகுறிமுறைவரிகளிலிருந்து ஆவணங்களை உருவாக்குவதற்கான நடைமுறையில் செந்தரமான கருவி ஆகும், ஆனால் இது C, Objective-C, C#, PHP, Java, Python, IDL (Corba, Microsoft, , UNO/OpenOffice flavors போன்ற பிற பிரபலமான நிரலாக்க மொழிகளையும் ஆதரிக்கிறது. ), Fortran, Dஇன் விரிவாக்க வன்பொருள் விளக்க மொழியான VHDLஆகியவற்றினை ஆதரிக்கிறது. இது நமக்கு மூன்று வழிகளில் உதவுகின்றது: 1. இது ஒரு இணையத்தின் ஆவண உலாவியையும் (HTML… Read More »

எளிய தமிழில் Car Electronics 17. ஊர்திப் பிணைய நெறிமுறைகள்

ஒரு உணரி பல ECU க்களுக்குத் தகவல் அனுப்பவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு ECU க்கும் நேரடியாகத் தனித்தனி கம்பி போட்டால் காரில் கம்பிகளின் எண்ணிக்கை அதிகமாகிப் பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கப் பிணையத்தைப் பயன்படுத்துகிறோம்.  பிணையமும் (network) உட்பிணையமும் (bus) பிணையம் (network) என்பது மிகவும் பரவலாக இருப்பது. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் உள்ளத் தனிநபர்க் கணினிகள், வழங்கிகள் (இணையம், தரவு, கோப்பு), அச்சு எந்திரங்கள் ஆகியவற்றை இணைப்பது பிணையம். உட்பிணையம் (bus) என்பது… Read More »

Bun எனும் ஜாவாஉரைநிரல் இயக்க நேரத்தின் ஒருபுதிய சகாப்தம்

ஜாவாஉரைநிரல் மேம்பாட்டிற்கு அதிகசெயல்வேகம் தேவைப்படுகிறது, இந்நிலையில் Bunஎன்பது மின்னல் வேக செயல்திறனையும், சொந்த TypeScript ஆதரவினையும் , நெறிப்படுத்தப்பட்ட பணிப்பாய்வுகளையும் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில்இன்னும் கூடுதலான வசதி வாய்ப்புகளுக்காக மேம்படுத்திடுதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த Bun.ஆனது ஜாவாஉரைநிரல் மேம்பாட்டின் விரைவான , எப்போதும் உருவாகின்ற அகண்மையில், ஒரு புதிய, நம்பிக்கைக்குரிய செயலியாக சமீபத்தில் அறிமுகமாகிவுள்ளது: இந்த Bun.ஆனது ஜாவாஉரைநிரலில் , TypeScript பயன்பாடுகள் கட்டமைக்கப்பட்ட, பரிசோதனை , பயன்படுத்தப்படுகின்ற வழிமுறையை மாற்றுவதற்கு தயாராக இருப்பது… Read More »

எளிய தமிழில் Car Electronics 16. மின்னணு இயக்கத் தடுப்பி

கம்பிகளை நேரடியாக இணைத்துப் பழைய கார்கள் திருட்டு எரியூட்ட சுவிட்சின் (Ignition switch) பின்னால் மின்கலத்திலிருந்து ஒரு கம்பி வரும், மற்றொரு கம்பி  ஓட்டத்துவக்கும் மோட்டாருக்குச் (Starter motor) செல்லும். அந்தக் காரின் சாவியை வைத்துக் காரின் பொறியை (Engine) ஓட்டத்துவக்கினால் இந்தக் கம்பிகள் இரண்டையும் மின் சுற்று (circuit) உள்ளுக்குள் இணைக்கும். உடன் பொறி ஓடத் துவங்கும். சாவியில்லாமல் காரைத் திருட முயல்பவர்கள் இந்த இரண்டு கம்பிகளையும் மானிப்பலகையின் (dashboard) பின்புறமாகக் கழற்றி நேரடியாக இணைக்க… Read More »

பைதான் ஒரு இணையதுணுக்காக செயல்படுத்தி பயனடைக

பைதானின் இணையதுணுக்கு(web scraper) என்பது பல்வேறு இணையதளப் பக்கங்களின் உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கின்ற ஒரு பயன்பாட்டுமென்பொருள் அல்லது உரைநிரல் ஆகும்.இதனை துவக்கிபயன்படுத்திகொள்வதற்கான படிமுறைபின்வருமாறு.               படம் 1: இணையஉரைநிரலின் வெவ்வேறு நிலைகளின் திட்ட வரைபடம் படிமுறை1:இணையதளத்திலிருந்து உள்ளடக்கங்களைப் பதிவிறக்கம்செய்தல் இந்தப் படிநிலையில், URL இலிருந்து கோரப்பட்ட இணையதளபக்கத்தை ஒரு இணைய துணுக்கு ஆனது படிக்கிறது. படிமுறை 2: தரவைப் பிரித்தெடுத்தல் பின்னர் இவ்விணைய துணுக்கு… Read More »

எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்

இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை… Read More »

இயந்திர கற்றல் (ML) மாதிரிகளை எளிதாக உருவாக்க Weka எனும் கருவியை பயன்படுத்திகொள்க

Weka எனும் கட்டற்ற கருவியின்மூலம், எவரும் இயந்திரக் கற்றலின் திறனைப் பயன்படுத்தி, அதன் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கணிப்புகளைச் செய்யலாம். Weka ஐ நிறுவுகைசெய்வதுகுறித்தும் அதனை பயன்படுத்திடுவதன் மூலம் இயந்திர கற்றல் மாதிரிகளை சிரமமின்றி உருவாக்க பரிசோதிக்க இந்தக் கட்டுரை வழிகாட்டிடும். இன்று, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML) எவ்வளவு பிரபலமாகவும் முக்கியமானதாகவும் மாறியுள்ளது என்பதை நாம் அறிவோம்.எதிர்காலத்தில் செநு(AI)ஐ ஒவ்வொரு துறையிலும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைநிலை ஏற்படவிருக்கின்றது , மேலும் பல்வேறு தொழில்களின்… Read More »

பொருட்களுக்கான இணைய(IoT)சாதனங்களுக்காக CircuitPython என்பதன் சக்தியை மேம்படுத்துதல்-4

CircuitPython , Raspberry Pi Pico ஆகியவை இணைந்து நாம் அன்றாடம் பயன்படுத்திகொள்கின்ற சாதனங்களை அதிசய திறன்மிகுசாதனங்களாக மாற்றுகின்றவாறு. CircuitPython ஐப் பயன்படுத்திகொள்வதற்கான எளிய நிரலை எழுதிடுவதற்கும், அந்நிரலை Raspberry Pi Pico இல் பதிவேற்றம் செய்திடுவதற்கு இந்த சிறிய பயிற்சி கையேடு உதவும். பொருட்களுக்கான இணை.ய(IoT) என்பது தனிப்பட்ட அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்தி பொருட்களானவை ஒன்றுக்கொன்றுடனும் இணையத்துடனும் தொடர்பு கொள்கின்ற திறன் கொண்ட சாதனங்களின் வலையமைப்பைக் குறிக்கின்றது. இந்தச் சாதனங்களில் செயலாக்கத் திறன்கள், உயர்திறன்ஆற்றல் கணினி ,… Read More »

எளிய தமிழில் Car Electronics 14. அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள்

ஓட்டுநரின் கண்களுக்கு எளிதில் புலப்படாத பிரச்சினைகளை உணரிகள் மூலம் கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும் அதிநவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் கார்களில் வரத் தொடங்கியிருக்கிறது. எச்சரிப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடும். இதுதவிர ஓட்டுநர் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய சோர்வு தரும் வேலைகளைத் தானியங்கியாகச் செய்யும் அம்சங்களும் வந்துள்ளன. இவற்றைப் பொதுவாக அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்புகள் (Advanced Driver Assistance Systems – ADAS) என்று சொல்கிறார்கள். இவற்றைப் பற்றி விரிவாகக் கீழே… Read More »