Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள்

மின்கல மின்னூர்திகள் (Battery Electric Vehicles – BEV) இவை முற்றிலும் மின்கலத்தில் ஏற்றப்பட்ட திறன் மூலம் இயங்குபவை. ஊர்தியை ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் ஒரு பெரிய மின்கலத் தொகுப்பில் சேமிக்கப்படுகிறது, அதை மின் சாக்கெட்டில் செருகி மின்னேற்றம் செய்யலாம். இந்த மின்கலத் தொகுப்பு மின் மோட்டார்களுக்கு காரை இயக்க சக்தியை வழங்குகிறது. இவற்றை முழுமையான மின்னூர்திகள் (All-Electric Vehicles – AEV) என்றும் சொல்கிறார்கள். கலப்பின மின்னூர்திகள் (Hybrid Electric Vehicle – HEV) இவற்றில்… Read More: எளிய தமிழில் Electric Vehicles 2. மின்னூர்தி வகைகள் »

உள்நுழைவு செய்பவரின் தகவலை PHP இல் காண்பிக்க வேண்டுமா?

இந்தக் கட்டுரையில், PHPயையும், அதன் பல்வேறு உள்கட்டமைப்பு முறைகளையும் பயன்படுத்தி ஒரு இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனாளரின் தகவலைக் காண்பிப்பது எவ்வாறு என்பதை அறிந்துகொள்வோம். உள்நுழைவு செய்பவரின் ஏற்புகை தேவைப்படுகின்ற இணையப் பயன்பாட்டை உருவாக்கும்போது, இணைய பக்கத்தில் உள்நுழைவு செய்த பயனரின் தகவல்களை பல்வேறு பக்கங்களில் காண்பிப்பது அவசியமாகும். e-commerce இணையதளங்கள், வங்கியின் இணையதளங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் இது பயனுள்ளதாக இருக்கும். PHPஉம் அதன் செயலிகளின் உதவியுடனும் இதை எளிதாக செயல்படுத்தலாம்.சில எடுத்துக்காட்டுகளின் உதவியுடன்… Read More: உள்நுழைவு செய்பவரின் தகவலை PHP இல் காண்பிக்க வேண்டுமா? »

கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை

ஒரு இயக்க முறைமையின் மையமும் மையக் கூறும் உருவாக்கமையம்(kernel) என அழைக்கப்படுகிறது. பணி மேலாண்மை ,வட்டு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வன்பொருள் நிலையிலான செயல்பாடுகளும் இயக்க முறைமையின் உருவாக்கமையத்தால் கண்காணிக்கப்படுகின்றன. ஒரு பயனர்-நிலையில் செயல்முறைக்கு வன்பொருள் கூறுகளுக்கு நேரடி அணுகல் தேவைப்படும் போது, அது உருவாக்கமையத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது, இது கணினியின் அழைப்பு என குறிப்பிடப்படுகிறது. உருவாக்கமையம் ஆனது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது, அனுமதிஅளிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே அணுக முடியும். இதன்மூலம் வன்பொருளை… Read More: கற்றுக்கொள்க லின்கஸின்உருவாக்கமைய நிரலாக்கத்தின் அடிப்படைகளை »

எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

சந்தையில் வளர்ந்து வரும் விற்பனை  2023 இல் உலகம் முழுவதிலும் விற்பனையான புதிய கார்களில் 18% கார்கள் மின்சாரக் கார்களாகும். இந்தியாவில் 2023-24 இல் 9 லட்சம் இரு சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் 2023-24 இல் 5.8 லட்சம் மூன்று சக்கர ஊர்திகள் விற்பனை செய்யப்பட்டன. இது மொத்த மூன்று சக்கர ஊர்திகள் விற்பனையில் பாதிக்கு மேல் (54%). இவ்வாறு மின்னூர்திகள் (Electric Vehicles – EV) விற்பனை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.… Read More: எளிய தமிழில் Electric Vehicles 1. உயர் நிலைக் கண்ணோட்டம் »

பைத்தானின் தொகுப்புகள்(Collections)

பைத்தானில், தொகுப்புகள் என்பவை தரவைச் சேமிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்ற கொள்கலன்களாகும். tuples, lists, sets , dictionaries ஆகியன பைத்தானில் உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளின்தொகுப்புகளாகும் இந்த தொகுப்புகளின் இனமானது, உள்ளமைக்கப்பட்ட தரவு கட்டமைப்புகளைத் தவிர கூடுதலான தரவு கட்டமைப்புகளையும் வழங்குகின்றது அவை பின்வருமாறு:. Counter, namedTuple, orderedDict , defaultDict, Deque, chainMap, ஆகியன பைத்தானில்’தொகுப்புகளின்’ தகவமைவில் உள்ள சில தரவு கட்டமைப்பு களாகும் இவைகள் குறித்த விளக்கங்களை இப்போது காண்போம், 1.Counter()எனும்செயலி இது ஒருதொகுப்பு வகையாகும்,… Read More: பைத்தானின் தொகுப்புகள்(Collections) »

எளிய தமிழில் Car Electronics 27. ஊர்தித் திரள் மேலாண்மை

நீங்கள் ஒரு நிறுவனத்தின் சரக்கு அல்லது பயணிகள் ஊர்தித் திரளுக்கு (fleet) மேலாளராக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஓட்டுநரின் கவனக்குறைவால் ஒரு விபத்து ஏற்பட்டால் நிறுவனம் தான் பொறுப்பு. மேலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், ஊர்தியின் தேய்மானமும் ஓட்டுநரின் செயல்பாடுகளைப் பொறுத்து உள்ளது. உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டே எங்கெங்கோ ஓடும் உங்கள் ஊர்திகளை எல்லாம் எவ்வாறு நீங்கள் கண்காணிக்க முடியும்? இதற்குத் தொலைக்கண்காணிப்புத் (Telematics) தொழில்நுட்பம் உதவி செய்கிறது. ஓட்டுநர் செலுத்திய பாதை, செயலற்று… Read More: எளிய தமிழில் Car Electronics 27. ஊர்தித் திரள் மேலாண்மை »

உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம்

இயந்திரங்களுடன் மனித படைப்பாற்றலை ஒருங்கிணைப்பதன் மூலம், உருவாக்க எதிரி வலைபின்னல்கள் (Generative Adverserial Networks(GANs)), புத்தாக்க செநு(AI) ஆகியவை ஒருகலைஞரின் வெளிப்பாடுகளை மறுவடிவமைப்பு செய்திடு வதற்காக அதன் எல்லைகளைத் விரிவுபடுத்திடுகின்றன. ஆனால் இவற்றில்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பல ஆபத்துகளும் உள்ளன. உருவாக்கஎதிரி வலைபின்னல்கள் (generative adversarial networks (GANs)) ஆனவை செயற்கை நுண்ணறிவு துறையில், புதியதொரு கண்டுபிடிப்பாக படைப்பாற்றலில் புரட்சியை ஏற்படுத்துகின்ற சாத்தியக்கூறுகளுடன் தனித்து நிற்கின்றன: . இந்த அமைப்புகள் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோரின்… Read More: உருவாக்க எதிரி வலைபின்னல்களும்,புத்தாக்க செயற்கை நுன்னறிவும் (Creative AI) ஒரு அறிமுகம் »

எளிய தமிழில் Car Electronics 26. இணையம் வழியாக ஊர்தி மென்பொருளை மேம்படுத்தல்

கணினிகள், திறன்பேசிகள் ஆகியவை இணையத்தில் தொடர்புடன் இருப்பதால் மென்பொருளை இணையம் வழியாக மேம்பாடு செய்கிறார்கள் என்று முன்னர் பார்த்தோம். ஊர்திகளை விற்றபின் அதன் மென்பொருளில் பாதுகாப்பையோ அல்லது மற்ற அம்சங்களையோ மேம்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது?  முன்னர் நேரடியாகக் கம்பி இணைப்புகள் மூலம் மட்டுமே மென்பொருளை மேம்படுத்த முடியும் ஊர்திகளிலும் மற்ற சாதனங்களிலும் நிரல்கள், தரவுகள் போன்றவை மின் இணைப்பைத் துண்டித்தாலும் அழியாத நினைவகத்தில் (flash memory) எழுதி சேமிக்கப்பட்டிருக்கும். ஆகவே இம்மாதிரி உட்பதித்த சாதனங்களில்… Read More: எளிய தமிழில் Car Electronics 26. இணையம் வழியாக ஊர்தி மென்பொருளை மேம்படுத்தல் »

பொருட்களுக்கான இணைய(IoT) சாதனங்களை இயக்க பைதான் எவ்வாறு உதவுகிறது

IoT எனும் சுருக்கமானபெயரால் அழைக்கப்பெறுகின்ற பொருட்களுக்கான இணையம்(Internet of Things) என்பது நாம் அன்றாடம் சந்திக்கின்ற ஒரு தொழில் நுட்பமாகும். வெளிப்புற தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப நாம் இருக்கு இடத்தில், மின்விசிறியின் வேகம், குளிரூட்டியின் வெப்பநிலை ஆகியவற்றினை சரிசெய்தல், ஓட்டுநர்இல்லாத வாகனங்கள், கண்காணிப்பு , பாதுகாப்பு அமைப்புகள், நம்முடைய மின்னஞ்சலுக்கு நேரடியாக மாதாந்திர பட்டியல் களை அனுப்பும் திறன்மிகு மின்சார அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு பயன் பாடுகளை இது உள்ளடக்கியது. நிகழ்நேர சுகாதார கண்காணிப்பு போன்ற பல… Read More: பொருட்களுக்கான இணைய(IoT) சாதனங்களை இயக்க பைதான் எவ்வாறு உதவுகிறது »

எளிய தமிழில் Car Electronics 25. மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு

ISO 26262 சாலை ஊர்திகள் – செயல்பாட்டுப் பாதுகாப்பு ISO 26262 என்பது மொபெட் போன்ற சிறிய ஊர்திகளைத் தவிர்த்து மற்ற தொடர் உற்பத்தி சாலை ஊர்திகளில் நிறுவப்பட்ட மின் மற்றும் மின்னணு அமைப்புகளின் செயல்பாட்டுப் பாதுகாப்புக்கான பன்னாட்டுத் தரநிலை ஆகும். விபத்துகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஊர்தி பாகங்கள் அவற்றின் நோக்கம் கொண்ட செயல்பாடுகளைச் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்வதை உறுதி செய்யவும் இது வழிகாட்டுதல்களை வரையறுக்கிறது. ISO 26262 போன்ற தரங்களைப் பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பான… Read More: எளிய தமிழில் Car Electronics 25. மின்னணு அமைப்புகளின் பாதுகாப்பான செயல்பாடு »