Category Archives: பங்களிப்பாளர்கள்

வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம்

மீப்பெரும்தரவகம் ஆனது தற்போது சில காலமாக அதிகஅளவிலானபயன்பாட்டில் இருந்து வருகின்றது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு முக்கிய தொழில்நுட்பமாக மாறவிருப்பதாக உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் ஏற்கனவே மீப்பெரும்தரவகத்தில் முன்னிலையில் உள்ளன, ஆனாலும் இன்னும் இது சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது. மீப்பெரும்தரவகம் ஆனது தன்னை இன்னும் மேம்படுத்தி கொண்டே வருகிறது.அதாவது மெய்நிகர் பயிற்சி, மெய்நிகர் சேவை முகவர்கள், மெய்நிகர் சுற்றுலா , மெய்நிகர் தொழில்துறை வருகைகள் உள்ளிட்ட புதிய வணிக மாதிரிகளை… Read More: வாருங்கள்மீப்பெரும்தரவகத்தின்(Metaverse): மெய்நிகர் உலகில் மூழ்கிடலாம் »

பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள்

பொதுவான மென்பொருள்-பொறியியல் சிக்கல்களுக்குச் செல்வதற்கு முன், ஃபெட்ச்மெயில் அனுபவத்திலிருந்து இன்னும் சில குறிப்பிட்ட பாடங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இப்பகுதியைத் தவிர்க்கலாம். rc (கட்டுப்பாடு) கோப்பின் தொடரியல் (syntax) விருப்பமைவு செய்யக்கூடிய ‘இரைச்சல்’ குறிச்சொற்களை உள்ளடக்கியது. இவை பாகுபடுத்தியால் (parser) முற்றிலும் புறக்கணிக்கப்படும். இவை அனுமதிக்கும் ஆங்கிலம் போன்ற தொடரியல், பாரம்பரிய சுருக்கமான குறிச்சொல்-மதிப்பு இணைகளை (terse keyword-value pairs) விட, பெரும்பாலும் படிக்கக்கூடியதாக உள்ளது. rc கோப்பு அறிவிப்புகள் எந்த அளவு ஒரு குறுமொழியை… Read More: பேராலயமும் சந்தையும் 10. ஃபெட்ச்மெயில் கற்பித்த மேலும் சில பாடங்கள் »

மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம்

மேககணினியில் தரவு மேலாண்மை தரவுகளின் பாதுகாப்பும் தனியுரிமையும் முக்கியமானவை என்பதால், மேககணினியில் சேமிக்கின்ற தரவை நிர்வகிப்பதற்கான மிகச்சரியான உத்தியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். அதனோடு மிகப்பொருத்தமான மேககணினி சேவை வழங்குநரையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மேககணினியில் தரவு மேலாண்மை என்பது மேககணினியில் தரவை நிர்வகிப்பதற்கான துவக்க முதல் இறுதிவரையிலான செயல்முறை ஆகும், சேகரிப்பிலிருந்து பகுப்பாய்வு வரை. மேககணினியின் சூழலில் தரவின் வகை, தரவின்அளவு .தரவின் தன்மையை நிர்வகிப்பது இதில் அடங்கும். நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன தரவுகளுக்காக பொது… Read More: மேககணினியில் தரவு மேலாண்மை: ஒரு கண்ணோட்டம் »

பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது

இப்படியாக ஃபெட்ச்மெயில் நேர்த்தியான மற்றும் புதுமையான வடிவமைப்புடன் மேம்பட்டு வந்தது. நான் தினமும் பயன்படுத்தியதால் எனக்குத் தெரிந்து நிரல் நன்றாக வேலை செய்தது. மேலும் பீட்டா பட்டியல் வளர்ந்து வந்தது. வேறு ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடிய அற்பமான தனிப்பட்ட நிரல் திட்டத்தில் நான் ஈடுபடவில்லை என்பது படிப்படியாக எனக்குப் புரிந்தது. யூனிக்ஸ் கணினி மற்றும் SLIP/PPP அஞ்சல் இணைப்பு கொண்ட ஒவ்வொரு கொந்தருக்கும் உண்மையில் தேவைப்படும் ஒரு நிரலைத்தான் நான் கையில் எடுத்துள்ளேன். SMTP மேலனுப்புதல்… Read More: பேராலயமும் சந்தையும் 9. ஃபெட்ச்மெயில் முதிர்ச்சி அடைகிறது »

பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது

SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்பும் அம்சம் – ஒரு பயனர் கொடுத்த அற்புதமான யோசனை பயனர் கணினியின் SMTP போர்ட்டுக்கு அஞ்சலை அனுப்புவதற்காக ஹாரி ஹோச்ஹெய்சர் (Harry Hochheiser) தனது துண்டு நிரலை எனக்கு அனுப்பியதுதான் திட்டத்தில் உண்மையான திருப்புமுனையாக அமைந்தது. இந்த அம்சத்தை நம்பகமான முறையில் செயல்படுத்தினால், மற்ற எல்லா அஞ்சல்  கொண்டு சேர்க்கும் முறைகளும் வழக்கற்றுப் போய்விடும் என்பதை நான் உடனடியாக உணர்ந்தேன். பல வாரங்களாக நான் ஃபெட்ச்மெயிலை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பாடு செய்து… Read More: பேராலயமும் சந்தையும் 8. பாப்கிளையன்ட் ஃபெட்ச்மெயில் ஆகிறது »

ஜாவாஎனும் கணினிமொழியின் நேர்காணலிற்கான கேள்விகளும் நிரலாக்க பயிற்சிகளும்

ஜாவாமேம்படுத்துநர் பதவிக்கான நேர்காணலின் போது மிகவும் கடினமான கேள்விகளால் எப்போதாவது தடுமாறினீர்களா? ஆம் எனில் இது நம்மில் பலருக்கும் நடக்கின்ற வழக்கமான செயலாகும். இரகசியம் என்னவென்றால், மிகவும் பொதுவான சில கேள்விகளுக்கு மட்டும் நாம் முன்னதாகவே அவை ஒவ்வொன்றிற்கும் பதிலுடன் தயாராக இருக்கின்றோம். ஆனால் நேர்காணல் செய்பவர்கள் மிகவும் பொதுவான சில கேள்விகள்மட்டுமல்லாமல் மிகவும் பரந்த தலைப்புகளுடன் தொடங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்க, அந்த காரணத்திற்காக, இந்த பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் முன்… Read More: ஜாவாஎனும் கணினிமொழியின் நேர்காணலிற்கான கேள்விகளும் நிரலாக்க பயிற்சிகளும் »

சரியான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதெவ்வாறு

நாம் நம்முடைய வழக்கமான பணிகளுக்கு சரியான தரவுத்தளத்தினை பயன்படுத்தி கொள்வதே பயன்பாட்டின் வெற்றிக்கு தேவையானதும் அடிப்படை யானதுமாகும். அவ்வாறான முக்கிய தரவுத்தள வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் அவைகளில் என்னென்ன சரிபார்க்க வேண்டும் என்பதை இப்போதுகாண்போம். இன்றைய தரவுமயமான உலகில், வணிக நிறுவனங்கள் தங்கள் தரவு சேமிப்பு , தரவு மேலாண்மை ஆகிய தேவைகளைக் கையாள தரவுத்தள அமைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது பல்வேறுவகைகளிலான வாய்ப்புகளை எதிர் கொள்கின்றன. மிகச்சரியான தரவுத்தளத்தினை தேர்வு செய்வது என்பதே மிகமுக்கியமானதாகும்,… Read More: சரியான தரவுத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதெவ்வாறு »

பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல?

லினஸின் செயல்முறையை நுட்பமாக ஆய்வு செய்து, அது ஏன் வெற்றிகரமாக இருந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினேன். பிறகு, எனது புதிய திட்டத்தில் (லினக்ஸ் அளவுக்குச் சிக்கலானதோ அல்லது பெரிய அளவிலானதோ இல்லை என்றாலும் கூட) இக்கோட்பாட்டைச் சோதிக்கத் தெரிந்தே ஒரு முடிவை எடுத்தேன். நிரலை மையமாகவும், தரவுக் கட்டமைப்புகளை நிரலுக்கு ஆதரவாகவும் கருதினார் ஆனால் நான் செய்த முதல் வேலை, பாப்கிளையன்டை மறுசீரமைத்து எளிமைப்படுத்துவதுதான். கார்ல் ஹாரிஸின் செயலாக்கம் மிகவும் நன்றாக இருந்தது, ஆனால்… Read More: பேராலயமும் சந்தையும் 7. ரோஜா எப்போது ரோஜா அல்ல? »

MentDB எனும் கட்டற்றஇயங்குதளம்

MentDB என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற (Mentalese Database) எனும் இயங்குதளமானது AI, SOA, ETL, ESB, தரவுத்தளம், இணைய பயன்பாடு, தரவுத் தரம், முன்கணிப்பு பகுப்பாய்வு, chatbot ஆகியவற்றிற்கு, ஒரு புரட்சிகர தரவு மொழியில் (MQL) கருவிகளை வழங்குகிறது. இந்த சேவையகமானது புதிய தலைமுறை AI தருக்கபடிமுறை ,WWD ஐ அடைய ஒரு புதுமையான SOA எனும் அடுக்கினை அடிப்படையாகக் கொண்டது. Mentalese என்பது மனித மூளையை கட்டமைக்கின்ற சிந்தனையின் மொழி யாகும். இந்த மொழி பல்வேறு… Read More: MentDB எனும் கட்டற்றஇயங்குதளம் »

பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும்

வழுத்திருத்தம் மற்றும் நிரல் வளர்ச்சியை சந்தை பாணி பெரிதும் துரிதப்படுத்துகிறது என்பதை மேம்போக்காக கவனிப்பது ஒன்று. தினசரி நிரலாளர் மற்றும் சோதனையாளர் நடத்தையின் நுண்மட்டத்தில் அது எப்படி, ஏன் வேலை செய்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மற்றொரு சங்கதி. இக்கட்டுரையில் (முதல் ஆய்வுக் கட்டுரைக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. அதைப் படித்து, தங்களின் சொந்த நடத்தையை மறுபரிசீலனை செய்த நிரலாளர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தி) உண்மையான இயங்குமுறைகளை நாம் மிகக்கவனமாக ஆராய்வோம். தொழில்நுட்பத்தில் நாட்டமற்ற வாசகர்கள் இதை… Read More: பேராலயமும் சந்தையும் 6. எத்தனை பேர் கவனம் வைத்தால் சிக்கலை அடக்கியாள முடியும் »