Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு சூரியனின் தொலைவு போன்று இரண்டு மடங்கு தேவைப்படும்.(நன்றி: செயல்வழிக் கணிதம், அரவிந்த் குப்தா) இதை எப்படி மன்னரால் கொடுக்க முடியும்?… Read More »

Rust எனும் நிரலாக்கமொழி ஒருஅறிமுகம் 

  Rust எனும் திறமூலநிரலாக்க மொழியானது நமக்கு நம்பகமான, திறமையான மென்பொருளை உருவாக்குவதற்கான அதிகாரம் அளிக்கின்ற ஒரு கட்டற்ற கணினிமொழியாகும். இது மிக விரைவாக இயங்குகின்ற திறனுடனும் நினைவகத்தை திறனுடன் கையாளும் தன்மையும் கொண்டது, எனவே இது செயல்திறனுடன் முக்கிய சேவைகளை ஆற்றவும்  உட்பொதிக்கப்பட்ட சாதனங்களில் செயல்படுவதற்காகவும் இது பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இது ஒரு உயர்ந்த(rich)வகை அமைப்பினையும் உரிமையாளர் மாதிரியைக் கொண்டுள்ளது, இது திரி, நினைவகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஒரு நிலையான நூலகம், சிறந்த… Read More »

தரவுத்தள நிர்வாகத்திற்கு NoSQLஆனது எப்போது சிறந்த தேர்வாகஅமையும்? 

NoSQL தரவுத்தளங்களை கொண்டு  கட்டமைக்கப்படாத தரவுகளைக் கையாள முடியும். மற்ற தரவுத்தளங்களிலிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன, எப்போது, எங்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் இந்த கட்டுரையில் கண்டறிந்திடுவோம். கட்டமைக்கப்பட்ட , கட்டமைக்கப்படாத ஆகியதரவுகளை நிர்வகிக்க தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான தரவுத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புடைய தரவுத்தளங்களானவை(Relational databases) கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை வடிவமைக்கப் பட்டதும் நன்கு அறியப்பட்டதுமான வகைகளைக் கொண்டுள்ளன. NoSQL தரவுத் தளங்கள் கட்டமைக்கப்படாத தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தரவுத்தள மேலாண்மை… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 16 – மோகனா? மன்னனா? வென்றது யார்?

பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும் என்றெல்லாம் போன பதிவில் முடித்திருந்தீர்கள். நாங்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம், நீங்கள் வேறு பயணத்திற்குள் நுழைந்து விட்டீர்களா? ஆளையே காணோமே என்று நண்பர்கள் சிலர் செல்லமாகக் கடிந்து கொண்டார்கள். ஆமாம், உண்மை தான்! கல்வெட்டுப் பயிற்சி ஒன்றைத் தமிழ்நாட்டு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. அந்தப் பயிற்சிக்குள் நுழைந்து தமிழியைப் படித்துக் கொண்டிருந்தேன். தமிழியை எடுத்த போது, தமிழ்க் கணினியைக் கொஞ்சம் விட்டு விட்டேன். முன்னைப் பழமைக்கும் தமிழே… Read More »

Sambaஎனும் திறமூல கருவி மூலம் கோப்பு பகிர்வு

Samba என்றால் பகிர்ந்துகொள்ளுதல் என பொருளாகும்.Samba எனும் கருவியானது கோப்புகளை பகிர்ந்துகொள்வதை எளிதாக்குகிறது. பயனாளர்களின் குழுக் களுக்கான பொதுவான கோப்புறைகள், உள்வரும் கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் உள்வருகை பெட்டிகள் நமக்குத் தேவையானவை உட்பட பகிரப்பட்ட இருப்பிடங்களை உருவாக்க, Samba இல் உள்ள பல செயல்திட்டங்களைப் பயன் படுத்திகொள்ளலாம். இந்த திறமூலமான கருவியானது, நெகிழ்வானது, மேலும் இது நம்முடைய நிறுவனத்தில் இயங்கக்கூடிய அனைத்து வெவ்வேறு தளங்களையும் ஒருங்கிணைக்கிறது. இந்த கருவியானது ஜிபிஎல் உரிமத்துடன்வெளியிட பெற்றுள்ளது, இது பெரும்பாலான… Read More »

தீம்பொருள்பெட்டிகளின்(MalwareBoxes) வாயிலான தீம்பொருள் பகுப்பாய்வு மிகவும்எளிதாகும்

  ‘நீங்கள் லாட்டரியை வென்றுள்ளீர்கள்’ அல்லது ‘விருது பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்’ போன்ற  செய்திகளை மின்னஞ்சல் மூலம் பெறுவதை கற்பனை செய்து பார்த்திடுக. ஆனால் இவ்வாறான நம்முடைய பேராசையை தூண்டிடும் மின்னஞ்சலை திறந்தவுடன், நம்முடைய முக்கியமான அத்தியாவசியகோப்புகள் அனைத்தும் மறையாக்கம் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்து, அவற்றை மீண்டும் நாம் திரும்பப் பெற 1,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் அதை  மீட்பதற்கான தொகை நம்மிடம் கோரப்படுகிறது. மே 12, 2017 அன்று முதலில் தோன்றிய உலகளாவிய ransomware எனும்… Read More »

இன்றைய கணினியின்கொள்கலண்களை(containers)இயக்கத் தொடங்குவதற்கான மூன்று படிமுறைகள்

நம்முடைய பணியின் ஒரு பகுதியாகவோ, எதிர்கால பணி வாய்ப்பு களுக்காகவோ அல்லது புதிய தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாகவோ, அனுபவம் வாய்ந்த அமைவு நிருவாகிகளுக்குக் கூட இன்றைய கணினியின் கொள்கலண்களின் (containers) பயன்பாடு மிகவும் அதிகமானதாகத் தோன்றலாம். இருந்தபோதிலும் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப் படுகின்றது .எனவே  உண்மையில் இந்த கொள்கலண்களை எவ்வாறு செயல்படுத்திட தொடங்குவது? மேலும், ஏன் கொள்கலணிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதற்கான ஒரு பாதை இருக்கிறது? நாம் எதிர்பார்ப்பது போல், இதனை தொடங்குவதற்கான… Read More »

புதிய நிரலாக்கமொழியைக் கற்றுக்கொள்வதற்கான உதவிக் குறிப்புகள்

பொதுவாக திறமூலங்களின் வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய சூழலில் நாம் அனைவரும் நிரலாக்கத்தினை எளிதாக துவங்கலாம், அதிலும் எந்தவொரு நிரலாக்கத்தினையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எளிதாக தொடங்கலாம் என்பதே தற்போதைய உண்மை நிலவரமாகும். மேலும் தற்போதுகணினி மொழிகளில் குறிமுறைவரிகளை எழுதக் கற்றுக் கொள்வதற்காகவென கணினி அறிவியல் பின்னணியைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதுதான் லினக்ஸ், திறமூலங்கள் ஆகியவற்றின் தற்போதைய திறனாகும் எவரும் சிறிய அளவில் குறிமுறைவரிகளை எளிதாக எழுத கற்றுக்கொள்ளலாம். எவரும் ஏதேனும்ஒரு புதிய நிரலாக்க மொழியைக் கற்றுக் கொள்ள… Read More »

Flatpak உடன் Linux இல் பயன்பாடுகளை நிறுவுகைசெய்தல் 

அனைத்து கணினி பயன்பாடுகளும் பல்வேறு சிறிய கோப்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை தமக்கான பணிகளை ஒன்றிணைந்து  செய்வதற்காக ஒருதொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளன. அவை “பயன்பாடுகள்(apps)”, பட்டியலில் அல்லது மேசைக்கணினியில் வண்ணமயமான உருவப்பொத்தான்களாக வழங்கப்படுவதால், நம்மில் பெரும்பாலானோர் பயன் பாடுகளை ஒற்றையான, கிட்டத்தட்ட உறுதியான செயலாக நினைக்கிறோம். மேலும் ஒரு விதத்தில், அவைகளை அவ்வாறு நினைப்பது ஆறுதலாக இருக்கின்றது, ஏனென்றால் அவைகளை கொண்டு குறிப்பிட்ட பணியை செய்து சமாளிக்க முடியும். ஒரு பயன்பாடு உண்மையில் நூற்றுக்கணக்கான சிறிய நூலகமும்  கணினி முழுவதும்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode characters Show… Read More »