Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் படிக்கலாம் வாங்க! 14 – while

இது வரை if elif else பார்த்திருக்கிறோம். இந்தப் பதிவில் while பார்க்கப் போகிறோம். while என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் என்ன? எப்போது என்பது! இதை எதற்கு நிரல் மொழிகளில் பயன்படுத்துகிறார்கள்? ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன் பாருங்களேன். 1 என்று ஐந்து முறை அச்சிட வேண்டும் எப்படி நிரல் எழுதுவது? இந்த நிரல் சரியா என்று கேட்டால் மிகச் சரி என்று சொல்ல வேண்டும். இந்த நிரல் தவறா என்று கேட்டால் அப்போதும் ஆமாம் என்று… Read More »

ஜாவாஸ்கிரிப்ட்டில் முதன்முதலாக குறிமுறைவரிகளை எழுதுதல்

ஜாவாஸ்கிரிப்ட் என்பது இனிமையான பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த நிரலாக்க மொழியாகும். பொதுவாக பலர் முதலில் இந்த ஜாவாஸ் கிரிப்டை இணையத் திற்கான மொழியாக எதிர்கொள்கின்றனர். ஆயினும் அனைத்து முக்கிய இணைய உலாவிகளிலும் ஜாவாஸ்கிரிப்ட் செயலி உள்ளது, மிகமுக்கியமாக இணைய வடிவமைப்பை எளிதாக்க உதவும் JQuery, Cash, Bootstrap போன்ற பிரபலமான கட்டமைப்புகள் இதில் உள்ளன, மேலும் ஜாவாஸ்கிரிப்டில் எழுதப்பட்ட நிரலாக்க சூழல்களும் உள்ளன. இது இணையத்தில் எல்லா இடங்களிலும் இருப்பதாகத் தெரிகிறது, ஆனாலும் இந்தஜாவாஸ்கிரிப்டுடன் குறுக்கு-தள மேசைக்கணினி… Read More »

ADP எனும்நிரலாக்க மொழி

ADP என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மற்றொரு தரவுகளின் செயலி(Another Data Processor) ஆனது இணையதளத்தின் தரவுதள நிரலாக்கததிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழியாகும் இது ஒரு உரைநில் மொழியாகும் மேலும் இலகுரக நிரலாக்க கணினிமொழியாக இருப்பதால் இதனை எளிதாக SQL உடன் கலந்து பயன்படுத்த முடியும் .இது Prolog அடிப்படையிலானதாக இருப்பதால் இதனை நிறுவுகை செய்வது எளிது. ஆனால் ADP பின்னடைவு , ஒருங்கிணைப்பை மட்டுமே பயன்படுத்துகிறது. தொடரியலின் உண்மையான மற்றொரு உரைநிரல் மொழியை போன்று, வழிமுறை… Read More »

திறமூலக் கருவி மூலம் எந்தவொரு இணையதளத்தையும் லினக்ஸின் மேசைக்கணினி பயன்பாடாக மாற்றலாம்

Nativefier, Electron ஆகியவை எந்தவொரு இணையதளத்திலிருந்தும் மேசைக்கணினியின் பயன்பாடுகளை உருவாக்குகிறது. Mastodonஎன்பதுபரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னலிற்கான ஒரு சிறந்த திற மூலகருவியாகும், .தற்போது பெரும்பாலானவர்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக Mastodon ஐப் பயன்படுத்துகின்றனர், மேலும் Mastodon ஐ அதன் இணைய இடைமுக வசதியின் மூலம் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும் (திற மூலமாக இருந்தாலும், முனைமத்தின் அடிப்படையிலான பயன்பாடுகள் கைபேசிபயன்பாடுகள் உட்பட அதனுடன் தொடர்புகொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன), ஆனால் சிலர்தனிப் பயன்பாட்டு சாளரங்களை விரும்புவார்கள் . அவ்வாறானவர்களுக்கும் பொருத்தமானதாக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 13 – if elif else

“நீங்கள் மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிக்க ஒரு பாய்படம் வரைந்திருந்தீர்கள். ஆனால், நான் வேறொரு படம் வரைந்திருந்தேன். இந்தப் படம் சரியென எனக்குப் படுகிறது. இதற்குப் பைத்தான் நிரல் எழுத முடியுமா?” என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். உறுதியாக முடியும். பைத்தான் படிக்க வேண்டும் என்னும் அவருடைய முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவர் வரைந்த பாய்படம்(Flowchart), இது தான்! அந்தப் படத்திற்கு உரிய படிகளை முதலில் எழுதுவோம். பிறகு, பைத்தான் நிரலாக அதை மாற்றலாம். 1. முதலில்… Read More »

இந்த மூன்று எளிய படிமுறைகளுடன் யார் வேண்டுமானாலும் மூலக்குறிமுறைவரிகளை இயந்திரமொழிமாற்றம் செய்து பயன்பாடாகஆக்கலாம்

பயன்பாட்டிற்கான மூலக்குறிமுறைவரிகளை தொகுக்க, குறிமுறைவரிகளை எவ்வாறு எழுதுவது அல்லது படிப்பது என்று நமக்குத் தெரிய வேண்டியதில்லை. பயன்பாட்டு மென்பொருளை நிறுவுகைசெய்திடுவதற்காக பல்வேறு வழிமுறைகள் உள்ளன, ஆனால் திறமூலத்துடன் வேறு எங்கும் கிடைக்காத வாய்ப்பினை பெறமுடியும்: குறிமுறைவரிகளைநாமே தொகுக்கலாம். மூலக் குறிமுறை வரிகளைத் தொகுப்பதற்கான உன்னதமான மூன்று-படிமுறைகளின் செயல்முறைகள் பின்வருமாறு: $ ./configure $ make $ sudo make install மென்பொருளை உருவாக்க கட்டளைவரிகளை நிறுவுகைசெய்திடுதல் நாம் குறிமுறைவரிகளை தொகுப்பது இதுவே முதல் முறை என்பதால், மென்பொருளை… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 12 – மூன்று எண்களில் பெரிய எண் எது?

மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை(flowchart) வரைந்து வரக் கேட்டிருந்தேன். வரைந்து விட்டீர்களா? நானும் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கிறேன். நீங்கள் இது போலவும் செய்திருக்கலாம். மாற்று வழியிலும் செய்திருக்கலாம். உங்கள் பாய்படத்தை github.com தளத்தில் பதிவேற்றி, இணைப்பைக் கருத்துகளில் பதியுங்கள். சரி, இப்போது மேல் உள்ள பாய்படத்திற்குப் பைத்தான் நிரல் எழுதுவோமா? 1. மூன்று எண்களை வாங்க வேண்டும். no1 = 100 no2 = 200 no3 = 300 2. மூன்று எண்களில்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 11 – வாங்க பழகலாம்!

இது வரை பார்த்த பதிவுகளில் பைத்தான் நிரலை எப்படி எழுதுவது? உள்ளீடு எப்படிக் கொடுப்பது? அச்சிடுவது எப்படி? என்று பார்த்திருக்கிறோம். ஆனாலும் பைத்தானின் எளிமையை, இனிமையை இன்னும் முழுமையாக நாம் சுவைக்கவில்லை. அதைத் தான் இந்தப் பதிவில் சுவைக்கப் போகிறோம். இரண்டு எண்களில் பெரிய எண் எது? இரண்டு எண்களில் பெரிய எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. முதல் எண்ணை வாங்குங்கள். 2. இரண்டாவது எண்ணை வாங்குங்கள். 3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியது… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 10 – செயல்கூற்றின் வெளியீடு, மாறிகள்

input() என்பதன் முன்பு name = என்று கொடுத்து இருந்திருக்கிறீர்கள். ஆனால், print() என்பதன் முன் எதையுமே கொடுக்கவில்லை ஏன்? என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தேன். இந்தப் பதிவு புரிய முந்தைய பதிவின் முன்னோட்டம் தேவையான ஒன்று. இன்னும் நீங்கள் அதைப் படிக்கவில்லை என்றால், கொஞ்சம் படித்து விட்டு இந்தப் பதிவைத் தொடருங்களேன். கேள்வி இது தான்! name = input(“What is your name? “) print(“Welcome”, name, “Vanakkam”) என்பதில் name =… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 9 – செயல்கூறு ஆராய்வோம்!

செயல்கூறு என்றால் என்னவென்று பார்ப்போம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா? செயல் என்றால் என்ன? ஏதாவது ஒரு வேலையைச் செய்வது! அதே தான் செயல்கூறும்! ஒருவரைக் கூப்பிட்டு, சாப்பிடு என்று சொல்கிறோம். சாப்பிட அவர் என்னென்ன செய்வார்? சாப்பிடுதல்: 1. தட்டு / இலை எடுப்பார். 2. சோற்றை அதில் வைப்பார். 3. கறி / குழம்பு சேர்ப்பார். 4. குழப்பி உண்பார். 5. கையைக் கழுவுவார். இவ்வளவு செயல்களும் சாப்பிடுதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள்… Read More »