Category Archives: பங்களிப்பாளர்கள்

ஜாவாஉரைநிரலில் உருவாக்கிகளை பயன்படுத்துவதுக்குறித்து கற்றுக் கொள்வோம்

ஜாவாஉரைநிரல் ஆர்வலர்களே! 👋 – குறிமுறைவரிகளை எழுதிடுகின்ற திறன்களை மேம்ப்படுத்த தயாராக இருக்கின்றீர்களா ?ஆம்எனில் இன்றே, அதற்கான உருவாக்கிகளில் (Generators) மூழ்கிடுவோம் – ஜாவாஉரைநிரலில் இதுஒரு சிறப்பு வகையான செயலியெனகவலைப்பட வேண்டாம், இதுஒன்றும் ராக்கெட்டை பற்றி அறிந்துகொள்வதற்கான ராக்கெட்அறிவியல் அன்று 🚀 வீணான விவாதங்களை விடுத்த நேரடியாக செயலுக்கு வருவோம். உருவாக்கிகள் (Generators) என்றால் என்ன? 🤔 எளிமையான சொற்களில் கூறுவதெனில், உருவாக்கிகள் (Generators)என்பவை தங்களின் செயலை இடைநிறுத்தம்செய்து மீண்டும் தொடங்கி வழக்கமாக செயல்படக்கூடிய செயலிகளாகும்.. தொடக்கத்தில்… Read More »

சில்லுவின் கதை 10. சொந்தப் புனைவு ஆலை இல்லாதத் தயாரிப்பு நிறுவனங்கள்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லு தயாரிக்கும் செயல்முறை உயர்நிலைக் கண்ணோட்டம்  0:30 ஏன் சொந்தப் புனைவு ஆலை இல்லாத (Fabless) தயாரிப்பு நிறுவனம் அவசியம்? இதற்குப் பதில் கிடைக்க, சில்லுகள் தயாரிக்கப்படும் செயல்முறையை முதலில் பார்ப்போம். IC வடிவமைப்பாளர்கள் கேடன்ஸ் (Cadence), மென்டர் கிராபிக்ஸ் (Mentor Graphics), சினாப்சிஸ் (Synopsis) ஆகியவற்றின் EDA – Electronic… Read More »

மூன்று வழிகளில் குவாண்டம் கணினியானது நம் உலகத்தை மாற்றக்கூடும்

குவாண்டம் கணிணி இறுதியாக தயாரானதும், இவ்வுலகம் எண்ணிம புயலால் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நாள் ஒவ்வொரு வாரமும் மாறிக்கொண்டே இருப்பது போன்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், அது கண்டிப்பாக வரப்போகிறது என்பதுதான், மரபுஇயந்திரங்களின் வேலையைப் பன்மடங்கு வேகத்தில் செய்யக்கூடிய இந்த அடுத்த தலைமுறை கணினிகள், நம் உலகின் சில வசதிகளை அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றிவிடும். 3 மறைகுறியாக்கம்செய்தல் குவாண்டம் கணினியானது மறைகுறியாக்கத்தில் மிகப்பெரிய உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் மறைகுறியாக்கப்பட்ட எதையும் –… Read More »

சில்லுவின் கதை 9. GPS க்கு மாற்றாக இந்திய சில்லுவை வடிவமைக்கிறோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) சில்லுகளின் மிகப்பெரிய ஆற்றலை அமெரிக்க ராணுவ ஆய்வகம் முன்கூட்டியே உணர்ந்தது 0:35 DARPA (Defence Advanced Research Projects Agency) என்பது அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி அமைப்பாகும். சில்லுகளுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் நிதியளித்த முதல் திட்டங்களில் ஒன்று லின் கான்வே (Lynn Conway) தலைமையில் 1981… Read More »

சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) கைவினைஞர் வேலை போலவே அக்காலத்தில் சில்லு வடிவமைப்பும் கையால் செய்யப்பட்டது 0:00 பல்வேறு வகையான தனிப்பயன் வடிவமைப்பு சில்லுகளுக்குப் பதிலாக, தனிப்பயனாக்கக்கூடிய மென்பொருளுடன் கூடிய நிரல்படுத்தக்கூடிய சில்லு என்ற கருத்தை டெட் ஹாஃப் (Ted Hoff) முன்வைத்ததற்காகப் பாராட்டப்படுகிறார். இதைத்தான் நுண்செயலி (microprocessor) என்று சொல்கிறோம். இன்டெல் 4004 தான் முதல்… Read More »

திற மூல கருவிகளின் மூலம் செய்யறிவில்(AI) சாதாரணமானவனாக இருந்து தலைவனாக உயர்ந்திடலாம்

எப்போதாவது, செய்யறிவு(AI) பற்றி அறிய விரும்புகின்றோமா, ஆனால் எங்கு தொடங்குவது என்பது பற்றி தெரியவில்லையா? கவலையேப்பட வேண்டாம் – நம்மைபோன்ற பலர் இந்த செய்யறிவு(AI) கருவிகளைப் பற்றி அறிய விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எங்கு,எவ்வாறு தொடங்குவது என்பதுதான் தெரியவில்லை. இந்த வழிகாட்டியில் குறிப்பிடுகின்ற ஐந்து பயனுள்ள திறமூலக்கருவிகளை பயன்படுத்தி செய்யறிவை(AI) கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளம் செய்திடுக ஏன் திறமூலபயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்? நாம் முதன்முதல் பைக் ஓட்ட கற்றுக்கொண்டது குறித்து சிந்தித்திடுக அதற்காக. பைக்குகளைப் பற்றிய புத்தகத்தைப்… Read More »

சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது 0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி  (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக… Read More »

மடிக்கணினியில் தேவையில்லாத வசதிகளை தவிர்த்திடுக

தற்போது நம்முடைய வாழ்க்கையை மாற்றுகின்ற வகையிலான வசதிகளுடன் சமீபத்திய சாதனங்களைக் காண்பிக்கின்ற மடிக்கணினி உற்பத்தியாளர்களின் மிகஅதிக அளவிலான விளம்பரங்களின் வெள்ளத்தை காணலாம். அவ்வாறான விளம்பரங்களின் வாயிலாக நமக்கு சிறந்த காட்சி, அதிக சேமிப்பு ,பல்வேறு மென்பொருள் துணை நிரல்கள் தேவை என மிகைப்படுத்தலில் நம்பி நம்மை சிக்கவைப்பது மிகஎளிது. ஆனால் அவையனைத்தும் உண்மையாகவே இருக்கட்டும்: மின்னஞ்சல்களைச் சரிபார்க்கவும், இணையத்தில் உலாவரவும், புதிய ஆவணங்கள் விளக்கக்காட்சிகளை உருவாக்கவும் நம்மில் பெரும்பாலோனருக்கு அவ்வாறான மிகையான வசதிகளுடனான மடிக்கணினி தேவையேயில்லை. அவ்வாறான… Read More »

சில்லுவின் கதை 6. நம் நாட்டின் ஜுகாடு மனநிலையை மாற்ற வேண்டும்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay) ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிட 10 மடங்கு நம்பகமானவை 0:00 பில் ஹியூலெட் (Bill Hewlett), டேவ் பேக்கார்ட் (Dave Packard) சேர்ந்து 1930 களில் கலிபோர்னியாவில் தங்கள் கார் கொட்டகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அவர்கள் மின் மற்றும் மின்னணு கருவிகளை உருவாக்கினர். இந்த நிறுவனம் பின்னர் HP எனப்… Read More »

ஆவணங்களை எழுத எம்எஸ்வேர்டுக்கு பதிலாக LaTeX ஐப் பயன்படுத்திகொள்க

அழகான ஆவணங்களை எழுத விரும்பினால், அதற்கு LaTeXதான் சிறந்த கருவியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இது அடிப்படையில் ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு நிரலாக்க மொழியாகும், பயன்படுத்த எளிதான தொடரியல், இது கொண்டுள்ளதால் நாம் விரும்பும் அளவிற்கு எளிதாக அல்லது மேம்பட்டதாக உருவாக்கலாம். மேலும் இதனுடன் Overleaf போன்ற கருவிகள் இணைந்து இருப்பதால் இது Google Docsஐப்போன்றே அருமையாக செயல்படுகின்றது, தற்போது நாம் எழுதுவதற்காகவென நம்முடைய சொந்த LaTeX சூழலை அமைக்க வேண்டியதில்லை, ஆனால் தொகுப்புகளுக்கான (packages)… Read More »