Category Archives: பங்களிப்பாளர்கள்

பைத்தான் படிக்கலாம் வாங்க! 8 பைத்தான் உங்களை வரவேற்கட்டும்!

இதுவரை பார்த்த பதிவுகள் வழியே விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் எப்படிப் பைத்தான் நிரலை எழுதி, இயக்கி, வெளியீட்டையும் பார்க்கத் தெரிந்து கொண்டோம். அந்தப் படியை இன்னும் ஏறாதவர்கள் ஒரு முறைக்கு இருமுறை அந்தப் படியை ஏறப் பழகிக் கொள்ளுங்கள். அந்தப் படியில் முறையாக ஏறியவர்களுக்கு இனி நிரல் எழுதுவது என்பது எட்டாக்கனி இல்லை, முழுமையாக எட்டும் கனி தான்! இப்போது ஒரு நிரல் எழுதப் போகிறோம். பைத்தான் நிரல், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கப்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம். லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன என்பதால் இவற்றைப் பயன்படுத்தச் சொல்கிறேன், அவ்வளவே! நோட்பேட்கியூகியூ தரவிறக்கம்: லினக்ஸ் மின்டின் சாப்ட்வேர் மேனேஜரைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 6 – முதல் முதலாய் நிரல்!

பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால் 1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்? 2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்? 3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா? இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்! விண்டோசில் பைத்தான்: விண்டோசில்… Read More »

மிகவும் பிரபலமான பத்து நிரலாக்க மொழிகள்

மைக்ரோசாப்ட்எனும் நிறுவனத்திற்கு சொந்தமான GitHub இனுடைய மிகப்பெரிய திறமூல தளங்களுடனான தொடர்புகளை யும் இணைய அணுகலையும் கருத்தில் கொண்டு இணையவெளியில் திறமூல தளங்கள் தொடர்பான இதனுடைய (GitHub) வருடாந்திர அறிக்கையானது நிரலாளர்கள் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள்ஆகியகுழுக்களின் போக்குகளைபற்றி அறிந்து கொள்வது மிகவும் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களிடையே எந்தெந்த நிரலாக்க மொழிகள் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதைக் கண்காணிக்கவும், காலப்போக்கில் குறிப்பிட்ட நிரலாக்க மொழியின் புகழ் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும், 12,000 இற்குமேற்பட்ட மேம்படுத்துநர்களை கொண்ட கணக்கெடுப்பில்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 5 – விண்டோசில் பைத்தான் நிறுவல்

) முதலில் www.python.org/downloads/ தளத்திற்குப் போய் அண்மைய பதிப்பைச் சொடுக்கித் தரவிறக்கிக் கொள்ளுங்கள். (இப்போதைக்கு 3.10.1) 2) தரவிறக்கிய கோப்பைச் சொடுக்கி, “Install Now” என்பதைக் கொடுப்பதற்கு முன், கடைசியில் இருக்கும் “Add Python 3.10 to Path” என்பதைத் தேர்ந்து கொள்ளுங்கள். (குறிப்பு: மேல் உள்ள படத்தில் Add Python 3.10 to Path” தேர்ந்திருக்க வேண்டும்.  விடுபட்டிருக்கிறது) 3) பிறகு, “Install Now” என்பதைச் சொடுக்கினால் போதும். 4) இப்படியாகப் பைத்தான் நிறுவல் தொடங்கி… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க! 4 – லினக்சில் பைத்தான் நிறுவல்

பைத்தானின் எளிமையையும் இனிமையையும் எவ்வளவு நாள் தான் எட்ட நின்றே சுவைத்துக் கொண்டிருப்பது? நம்முடைய கணினியில் பைத்தானை நிறுவினால் தானே, “கண்ணே கலைமானே” என்று பைத்தானைப் பார்த்துப் பாட முடியும்! பைத்தான் நிறுவலை லினக்சில் இருந்து தொடங்குவோம். “எடுத்த எடுப்பிலேயே லினக்ஸ் இயங்குதளத்திற்குப் போய் விட்டீர்கள். நாங்கள் எல்லோரும் விண்டோஸ் அல்லவா வைத்திருக்கிறோம்” என்கிறீர்களா? நிரலர் (டெவலப்பர்)க்குரிய ஒரு பால பாடம் சொல்லி விடுகிறேன் – நல்ல கணினியாளராக மாற விரும்பும் ஒவ்வொருவரும் கட்டற்ற மென்பொருளாகிய லினக்ஸ்… Read More »

மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் எனும் பயன்பாட்டிற்கு மாற்றானதிறமூல பயன்பாடுகள்

பல தசாப்தங்களாக, மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்ஆனது மின்னஞ்சல், குழுவான மின்னஞ்சல் ஆகிய சேவைகளுக்கான சந்தையை ஆட்சி செய்து வருகிறது. இது மிகஉயர்நந்த கார்ப்பரேட் உலகில் தன்னிகரற்ற பயன்பாடாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது, மேலும் அவுட்லுக் மின்னஞ்சல் வாடிக்கையாளர் குழு விற்க்கான உண்மையான தரநிலையாக மாறியுள்ளது. மிகமுக்கியமாகஇந்த பயன்பாடு மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பயன்பாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால், பயனாளர்கள் மேசைக்கணினி அல்லது கைபேசி வாடிக்கையாளரைப் பயன்படுத்தினாலும், பல்வேறு வகையிலும் உதவிடுகின்ற திறன்மிக்க மென்பொருளாகவும் தன்னுடைய வசதிகளை அணுகிடுமாறு அமைந்துள்ளது. இருப்பினும்,… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 3 – எளிமையே இனிமை!

“பைத்தானைப் பற்றிய உங்களுடைய முந்தைய இரண்டு பதிவுகளைப் பார்த்தேன். உண்மையில் பைத்தான் அவ்வளவு எளிதான மொழியா? புதியவர்களைப் பைத்தான் பக்கம் இழுக்க நீங்கள் செய்யும் விளம்பர உத்தி தானே அது?” என்று ஒரு நண்பர் கேட்டார். “விளம்பரங்களைக் கண்டு அப்படியே நம்பும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு நண்பரே! நம்முடைய காலத்தில் ஒரு நடிகர் நடித்தாலே படத்திற்குப் போவோம். இப்போதுள்ள இளைஞர்கள் அப்படியா? நடிகர் யார்? இயக்குநர் யார்? ஒளிப்பதிவு யார்? என்று அக்கு வேறு ஆணிவேறாக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட்… Read More »

Pandoc எனும் உலகளாவிய ஆவண மாற்றி

இது ஒரு உலகளாவிய குறியீட்டு (markup) மாற்றியாகும் அதாவது இந்தPandoc என்பது ஒரு உலகளாவிய ஆவண மாற்றியாகும், இது பல குறியீட்டு வடிவங்களிலிருந்து கோப்புகளை மற்றொன்றாக மாற்றுகின்ற திறன்மிக்கது. இது(Pandoc)நம்முடன் இருந்தால், நம்மிடம் சுவிஸ்-இராணுவ கத்தி போன்ற ஒரு குறியீடுமாற்றி நம்மிடம் உள்ளது என நாம் எதற்காகவும் பயப்புடாமல் இருக்கலாம், நடைமுறையில் இதன்வாயிலாக நாம் எந்த குறியீட்டு வடிவமைப்பையும் வேறு எந்த வடிவத்திலும் மாற்ற முடியும். Pandoc ஆனது அவ்வாறான மாற்றங்களுக்கான Haskell நூலகத்தையும் இந்த நூலகத்தைப்… Read More »