Category Archives: பங்களிப்பாளர்கள்

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. என்னுடைய அணிகளில் இரண்டில் யாவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரத்தில் பல நாட்கள் தொலைவேலை… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 10: ஒருக்கால் தேவைப்படலாம் என்று எவ்வளவு தேவையற்ற வேலைகள் செய்கிறோம்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 10 “செய்யாத வேலையை முடிந்த அளவுக்கு அதிகப்படுத்தும் கலை, இன்றியமையாதது.” மென்பொருள் உருவாக்குவதற்கான கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிட்ட 12 கோட்பாடுகளில் ஒன்று இது. இது விநோதமாக இல்லை? இவர்கள் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கிறார்கள் போல் அல்லவா தோன்றுகிறது! ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல. பின்னால் தேவைப்படலாம் என்று வேலையை இழுத்துப் போட்டுகொண்டு செய்யாதீர்கள். அது தேவைப்படாமல் போகலாம். எடுத்துக்காட்டாக You Aren’t Gonna Need It (Yagni)… Read More »

பைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு

புதியவர்கள்கூட விண்டோவில் இயங்கும் இணையப் பயன்பாடுகளை பைத்தானும் டிஜாங்கோவும் இணைந்தசூழலில் எளிதாக உருவாக்கமுடியும். இங்கு டிஜாங்கோஎன்பது பைத்தான் மொழியால் உருவாக்கபட்ட தொரு கட்டற்ற இணையப்பயன்பாடுகளின்வரைச்சட்டமொழியாகும் இந்த இணைய பயன்பாடுகளின் வரைச்சட்டமொழியானது மாதிரி காட்சிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைவை பின்பற்றுகின்றது. அதாவது இங்குக் காட்சி என்பது வரைகலை கட்டமைவை பயன்படுத்தவதைபோன்று பயனாளர் ஒருவர் தான் திரையில் காணும் காட்சியை இடைமுகம்செய்து பயன்படுத்திக் கொள்வதாகும்.. பொதுவாக புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக IDE சூழல் தேவையாகும். இங்கு Eclips என்பது அதற்காகப்… Read More »

Telegram எனும் சமூக செய்தியாளர்

Telegramஎன்பது மிகவிரைவாகவும், பாதுகாப்பாகவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான தகவல்தொடர்பிற்கான கட்டணமற்ற, விளம்பரங்களற்ற, சமூகச் செய்தியாளர் சேவையாகும்.. இது செல்லிடத்துப் பேசி, மடிக்கணினி கைக்கணினி, மேஜைக்கணினி போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும் செயல்படும் திறன்கொண்டது. இந்தச் செய்தியாளர் சேவையின் வாயிலாக உரைச்செய்திகள், உருவப்படங்கள், கானொளிகாட்சிகள் ஆகியவற்றின் doc, zip, mp3போன்ற எந்தவொரு வகையான கோப்பாக இருந்தாலும், அனுப்பவும் பெறவும் முடியும்… மேலும், தனிநபர் முதல் குழுவானநபர்கள்வரை மட்டுமல்லாது வரையறையற்ற வகையில் எத்தனை நபர்கள் வேண்டுமானலும் குழுவாக ஒன்றுசேர்ந்து தங்களுக்குள்… Read More »

கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 13 : டெஸ்ட் கேஸ் உத்திகள் – 2

அலைபேசி, கணினி, தொலைக்காட்சி, குளிரூட்டி என ஏராளமான மின்னணுக் கருவிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இரசீது கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய உருவாக்குநர்கள் உருவாக்கிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கும் நேரத்தில் சோதனையாளர்கள் டெஸ்ட் கேஸ்கள் எழுதத் தொடங்கியிருப்பார்கள். இங்கு நம்முடைய மென்பொருள் இரசீது கொடுக்கும் மென்பொருள் என்பதால், பல்வேறு வகைகளில் இரசீதுகளைச் சோதிக்க டெஸ்ட் கேஸ்கள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது, 10000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் தள்ளுபடி கடன் அட்டை (கிரெடிட் கார்டு)… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 12 – டெஸ்ட் கேஸ் உத்திகள் – 1

தோழர், அடுத்த பதிவில் ‘பிழை வாழ்க்கை வட்டம்‘ பற்றிப் பார்ப்போம் என்று சென்ற பதிவில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் – டெஸ்ட் கேஸ் எழுதுவது பற்றிப் (www.kaniyam.com/software-testing-8-write-test-case/) படித்து விட்டு, ஜிமெயிலில் பயனர் உருவாக்கும் பக்கத்திற்கு டெஸ்ட் கேஸ்களை எழுதலாம் என நினைத்து ஆர்வத்தில் டெஸ்ட் கேஸ் எழுதத் தொடங்கினேன். இன்னும் முடிக்க முடியவில்லை. எழுத எழுத டெஸ்ட் கேஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன; நானும் பக்கம் பக்கமாக டெஸ்ட் கேஸ்கள்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 9: லேத் பட்டறையில் வேலையை மாற்றி மாற்றி ஏற்றி இறக்குவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 9 நான் தகவல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு முன் ஒரு இயந்திர பொறியாளராக என் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன். நடுத்தர அளவிலான தொழிற்சாலையில் வேலை திட்டமிடல் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லேத் பட்டறை இயக்குபவரிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார், “காலைல கிருஷ்ணன் சார் சொல்ற வேலையை ஏத்துவோம் சார். அதைக் கஷ்டப்பட்டு அலைன் பண்ணி முடிச்சு டூல் செட் பண்ணி கடைசல ஆரம்பிக்கலாம்னு இருப்போம். அப்பதான் சக்திவேல்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்! !

அலகுச்(தனி உருப்படி) சோதனையை உருவாக்குநர் முடித்து, இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் முடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் உருப்படியையும் உருவாக்கி அந்த உருப்படிகளை மற்ற உருப்படிகளுடன் சரிவர இணைந்து இயங்குகின்றனவா என்று இது வரை பார்த்திருக்கிறோம். ஜிமெயில், யாஹூ மெயில் போல, மின்னஞ்சல் சேவை கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு, மின்னஞ்சல் நுழைவுப் பக்கம் (லாகின் பக்கம்) உள்பெட்டி (இன்பாக்ஸ்) வெளிப்பெட்டி (சென்ட் ஐடெம்) தொடர்புகள் என ஒவ்வோர் உருப்படியையும் மற்ற… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும்

டெஸ்டர்கள் மென்பொருள் சோதனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் (அதாவது, டெஸ்டர்கள் டெஸ்ட் கேஸ் எழுதிய போதும் அதற்கு முன்பும்) உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே! ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து விடுவதில்லை! மென்பொருளை முதல் நிலையில் சோதிப்பதும் அவர்கள் வேலை தான்! என்ன குழப்புகிறீர்கள்? மென்பொருளை உருவாக்குவதால் ‘உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்)’ என்கிறீர்கள்.… Read More »