Category Archives: கணியம்

Selenium Webdriver – 2

Search Results-ஐ வெளிப்படுத்தல் magento-demo.lexiconn.com/ இந்த வலைத்தளத்தின் searchbox-ல் சென்று “Bed & Bath” எனக் கொடுக்கும்போது, அது பின்வருமாறு 12 விடைகளை வெளிப்படுத்துகிறது. இதை automate செய்வதற்கான code பின்வருமாறு அமையும். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode… Read More »

எளிய தமிழில் WordPress- 15

தன்விபரப் பக்கம்: My Profile எனும் தேர்வைத் தேர்ந்தெடுத்தால், கீழ்க்கண்ட சாளரம் தோன்றும். அதில் Visual editor, Dashboard Color scheme குறித்த தேர்வுகள் உள்பட சில அடிப்படையான தேர்வுகள் இருக்கும். தவிர்த்து, உங்கள் பயனர் பெயரைத் தவிர்த்து மற்ற அடிப்படைத் தகவல்களை மாற்றியமைக்கலாம். (உங்கள் பெயர் எப்படி மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். உங்களைப் பற்றிய தன்விபரக் குறிப்புகள், கடவுச்சொல் மாற்றங்கள்.) மாற்றியமைக்கப்பட்ட பின்னர் Update Profile எனும் பட்டனை அழுத்தி சேமிக்க வேண்டும்.

எளிய தமிழில் WordPress- 16

Tools Tools எனும் கருவிகள் மெனுவில் சில சிறிய கருவிகள் உண்டு. Press this என்பது Drag and Drop முறையில் சுட்டியால் இழுத்து, உங்கள் உலவியின் புக்மார்க்ஸ் பட்டியலில் சேர்த்தால் போதும். அதன் பின் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்தில் நீங்கள் உலவுகையில்,  அதை (அப்பக்கத்தை) உடனடியாக நீங்கள் வலைப்பதிவிட இக்கருவி உதவும். Categories and Tags Converter: Categories and Tags Converter என்பது ஏற்கனவே உள்ள வகைகளை வகைச்சொற்களாகவும், வகைச்சொற்களை வகைகளாகவும் மாற்ற உதவும்… Read More »

எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள் Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம். முதலாவது General Settings: தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம். Writing Settings: இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried இருக்கும். மாற்ற வேண்டுமெனில்) மாற்றலாம். தவிர சில எழுதும் வரைவுகளை (Post Standards) மாற்ற இயலும். Reading Settings: இதில்… Read More »

எளிய தமிழில் WordPress- 14

பயனர்கள் (Users) Users எனும் மெனு உங்கள் தளத்தில் உள்ள பயனர்களைக் காட்டும். குழுவாக இயங்கும் தளத்தில் பல்வேறு பயனர்கள் இருப்பின் அவர்கள் வெவ்வேறு விதமான பொறுப்புகளில் இயங்குவர். அவை குறித்து, Administrator (நிர்வாகி): அனைத்துவிதமான கட்டுப்பாட்டு முறைகளையும் கொண்ட பயனர். தளத்தை தொடங்கியவரே admin அதிகாரம் பெறுவார். வேறு பயனர்களுக்கும் இதே அதிகாரத்தை அளிக்கலாம். பொதுவாக ஒரு தளத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட adminகள் இருப்பதை wordpress ஆதரிக்கவில்லை என்றபோதிலும், நமக்குத் தேவையாயிருப்பின் ஏற்படுத்திக் கொள்ளலாம். Editor… Read More »

எளிய தமிழில் WordPress- 13

தலைப்பு (Header)  சில தீம்களில் இவ்வசதி இருக்காது. இவ்வசதி உங்கள் தீமில் இருந்தால், உங்கள் தளத்தின் தலைப்பு குறித்த அமைப்புகளை (settings) மாற்றலாம். அதாவது தலைப்புப் படங்கள் (Header Images), தலைப்பு, tagline ஆகியவற்றை மாற்றலாம். பின்புலம் (Background) தளத்தின் பின்புலத்தை மாற்றியமைக்க (பின்னணி நிறம் / படம்) இவ்வசதி உதவும். எடிட்டர் (Editor): எடிட்டர் என்பது நாம் CSS PHP முதலான கணினி மொழிகளைப் பயன்படுத்தி தளத்தின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கலாம். அதற்கு அம்மொழிகள்… Read More »

எளிய தமிழில் WordPress- 12

Widgets: கூடுதலாக விஷயங்கள் சேர்ப்பதற்காக ஒரு தளத்தில் இடம்பெறும் பிரிவுகளே widgets. பெரும்பாலான தீம்களில் பக்கவாட்டில் அமைந்த sidebarகளே widgets. அதே நேரம், சில தீம்களில் widgets என்பன தளத்தின் கீழேயோ, அல்லது இல்லாமலோ இருக்கும். என்ன மாதிரியான widgets இருக்கின்றன? சமீபத்திய பின்னூட்டங்கள், தேடல், தொகுப்புகள், பதிவின் வகைகள் முதலானவற்றை துவக்க நிலை widgets ஆக சொல்லலாம். மின்னஞ்சல் சந்தா, ட்விட்டர் பேட்ஜ்களைக் கூட widgets ஆக பயன்படுத்தலாம். Widgets மெனுவில் Available Widgets எனும்… Read More »

எளிய தமிழில் WordPress- 11

வெளித்தோற்றம் (Appearance): உங்கள் தளம் பிறருக்கு எப்படி காட்சியளிக்க வேண்டும் என்பதை இந்த மெனுவின் மூலம் தீர்மானிக்கலாம். ஆள் பாதி ஆடை பாதி எனும் பழமொழி போல உங்கள் தளத்தின் வெளித்தோற்றமும் உங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க உந்தும். தீம்கள்: தீம்கள் விலைக்கும் உண்டு இலவசமாக பலரும் தீம்களை வெளியிடுவதும் உண்டு. வேர்ட்ப்ரஸ் நிறுவனம் கூட ஆண்டுக்கு ஒரு தீம் வெளியிடும். இப்போது twenty fifteen (2015). அவற்றை பயன்படுத்தலாம். தவிர்த்து third party தீம்களை upload… Read More »

எளிய தமிழில் WordPress- 10

கருத்துக்கள் (Comments): எழுதுவதன் நோக்கம் அதன் பரவலான விவாதத்தில் இன்னும் சிறப்புறும். அவ்வகையில் WordPress-ல் பதிவுகளில் கமெண்ட் செய்வதும் எளிதான ஒன்றுதான். அவ்வாறு வாசகர்கள் பதிவிட்ட கருத்துக்களை நிர்வகிக்கும் மெனுவே Comments menu. இந்த கமெண்ட் நல்ல விதமாக பாராட்டாகவும் இருக்கலாம். மாறாக (அல்ல விதமாக!)வும் இருக்கலாம். அதை அனுமதிப்பது குறித்து இப்பக்கத்தில் முடிவெடுக்கலாம். இப்பக்கத்தில்  Pending, Approved, Spam ,Trash எனும் நான்கு இணைப்புகள் இருக்கும். WordPress இலவசமாக அளிக்கும் Akismet எனும் செருகுநிரல் (Plugin)… Read More »

எளிய இனிய கணினி மொழி – ரூபி – மின்னூல்

  “எளிய இனிய கணினி மொழி” – ரூபிக்கு இதை விட பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணைய பயன்பாடுகள் ரூபியில் எழுதப்படுகின்றன. நிரலை சுருக்கமாக எழுதுவதே ரூபியின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒன்றாகும். மென்பொருட்களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ரூபியில் உருவாக்க முடியும். ரூபியின் அடிப்படையையும், பரவலாக பயன்படுத்தப்படும் அம்சங்களையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ரூபியின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் வியாபித்திருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய… Read More »