Category Archives: கணியம்

ஆண்ட்ராய்டு செயலி கற்க வேண்டுமா? அற்புதமான திறந்த மூல நிரல்களின் இணைப்புகள் இங்கே

ஆண்ட்ராய்டு செயலி எழுதுவது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கேள்வி பதில்கள் படிக்கலாம். ஆனால் ஒரு செயலியை உங்கள் திறன்பேசியில் ஓட்டிப் பார்த்து உடன் அந்த செயலியின் மூல நிரலையும் படித்துப் பார்ப்பது போன்ற கற்றல் அனுபவம் வேறெதிலும் வராது. இந்தக் கட்டுரையில் ஆண்ட்ராய்டு நிரலாளர் அரித்ரா ராய் (Aritra Roy) இருபதுக்கும் மேற்பட்ட திறந்த மூல ஆண்ட்ராய்டு செயலிகளைத் தேர்ந்தெடுத்து திறனாய்வு செய்திருக்கிறார். அவற்றின் கடினத்தையும்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 16. கல்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 16 திறந்த மூலக் கோட்பாடுகள்

பிலடெல்பியாவின் ட்ரெக்சல் (Drexel) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு (2014) மே 28-30 நடந்த “பேராசிரியர்கள் திறந்த மூல கோடை அனுபவம் (Professors’ Open Source Summer Experience – POSSE)” நிகழ்ச்சியில் ஹெய்டி எல்லிஸ் (Heidi Ellis) பேசினார். திறந்த மூல திட்டங்களில் மாணவர்களை உட்படுத்துவது வியத்தகு கல்வி சார் நன்மைகள் செய்யும்  என்பதை தனது சக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.  இந்த நன்மைகளை அவர்கள் உணர்வதற்கு உதவ, திறந்த மூல சமூகங்களின்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 15. ஊழியர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க நிறுவனங்கள் உதவுவது எப்படி

உலகம் முழுவதும் 100,000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் கொண்ட ட்ரூபல் (Drupal) சமூகத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். திறந்த மூலத்துக்கு பங்களிக்க தங்கள் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் வளர்ந்து வரும் ஊழியர்கள் குழுவும் இதன் மத்தியில் உள்ளது. இந்தக் காலத்தில், தன்னுடைய தற்குறிப்பில் ஓரிரண்டு (அதற்கு மேலும் கூட) திறந்த மூலம் பற்றிக் குறிப்பிடாத ஒரு அனுபவசாலியான நிரலாளரைக் காண்பது அரிதே. தலை சிறந்த நிரலாளர்களுக்கு இது முக்கியம் என்பது தெரியும். உங்களுக்கு வேலை கிடைக்கவும் மற்றும்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 14. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லினக்ஸ் கணினி ஒரு ஆண்டு

சுமார் ஒரு வருடம் முன்பு, இங்கிலாந்தின் தென்கிழக்கில் ஒரு பள்ளி, வெஸ்ட்க்லிஃப் (Westcliff) பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கேடிஇ (KDE) பயனர் இடைமுகம் கொண்ட லினக்ஸ்-க்கு அதன் மாணவர்கள் பயன்படுத்தும் கணினிகளை மாற்றத் தொடங்கியது. பள்ளி பிணைய மேலாளர், மால்கம் மூர் (Malcolm Moore), அந்த நேரத்தில் எங்களுடன் தொடர்பு கொண்டார். இப்போது, ஒரு ஆண்டு ஆனபின் விண்டோஸ் இல்லாத ஒரு உலகத்தில் அவருக்கும் மாணவர்களுக்கும் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த, அவர் மீண்டும்… Read More »

Dialog Boxes and Exception Handling

9 Dialog Boxes Javascript-ல் 3 முக்கியமான பெட்டிகள் உள்ளன. அவற்றைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டில் காணலாம். “Alert box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “This is a warning message!” எனும் செய்தி வெளிப்படும் வகையில் ஒரு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை எச்சரிக்க உதவும் alert() பெட்டி ஆகும். “Confirm box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “Do you want to continue?” என்ற ஒரு கேள்வியைக்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 13. ஒரு திறந்த மூல சமூகத்தை உருவாக்குவது எப்படி

திறந்த மூல திட்டத்துக்கு சமூகம் மிக முக்கியமானது. சுறுசுறுப்பான மற்றும் ஆதரவான சமூகம்தான் அந்தத் திட்டத்துக்கு இதயம் போன்றது. எனினும், உங்கள் திட்டத்துக்குப் பயனர்களையும் மற்றும் நிரலாளர்களையும் ஈர்த்து ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு திறந்த மூல உரிமம் மட்டும் வழி செய்யாது. ஆகவே, ஒரு வெற்றிகரமான திறந்த மூல சமூகம் அமைப்பது எப்படியென்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. திறந்த மூல திட்டங்கள் ஏன் தொடங்குகின்றன? திறந்த மூல மென்பொருள் திட்டங்களுக்கும் மற்ற வகையான மென்பொருள் திட்டங்களுக்கும் அவை ஆரம்பிக்கும்போது உண்மையில் வேறுபாடு… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 12. துளிர் நிறுவனத்தைக் குறைந்த செலவில் விரைவாக உருவாக்க

ஜனவரி 2013 ல், என் வணிக யோசனையை செயல்படுத்த உதவக்கூடிய திறந்த மூலத் தீர்வுகளை நான் ஆய்வு செய்யத்தொடங்கினேன். ஃபிலிம் பாக்ஸ் ஃபெஸ்டிவெல் (FilmBoxFestival) என்ற பெயரில் ஆவணப்படங்களை (documentary films) இணையத்தில் தாரை ஒளிக்காட்சியாக (streaming video) வெளியிடும் இயக்குதளம் உருவாக்குவதே என் நோக்கம். இந்த தளத்தை உருவாக்க திறந்த மூலத் தீர்வுகளான வேர்ட்பிரஸ் (WordPress), ஜூம்லா (Joomla), மற்றும் ஓபன்ஷிஃப்ட் (OpenShift) பயன்படுத்தினேன். என்னுடைய ஆக்க எண்ணத்தை உருவாக்கி, செல்லத்தக்கதாக்கி, விரைவாக வாடிக்கையாளர்கள் நாட்டம் கொள்ளவும்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 11. சிறுவர்களுக்கான நான்கு லினக்ஸ் வினியோகங்கள்

ஒரு அலைப்பேசியை ஆராயும்போதும் அல்லது தொலைக்காட்சியை அதன் தொலை இயக்கி மூலம் கையாளும்போதும் அல்லது வேறு எந்த மின்னணு சாதனத்தையும் ஆக்கபூர்வமாக அழிக்கும் வகையில் கழட்டிப் பார்க்கும்போதும் என் ஆறு வயது மருமகள் ஷுச்சி (Shuchi)-யின் கண்களில் ஆர்வத்தின் ஒளிர்வை என்னால் காண முடிகிறது. அவள் வயதுடைய பல குழந்தைகள் போல, அவளுக்கு பரிசோதனை செய்வது மிகவும் பிடிக்கும். எனது மடிக்கணினி அல்லது தனது தந்தையின் மடிக்கணினி முன் அமரும்போது அவளுடைய இந்த ஆர்வம் அதன் உச்ச… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 10. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 2

திறந்த மூல திட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது எப்படி என்று கற்றுத்தரும் ஒரு வார இறுதி பயிற்சியைப் பற்றிய கட்டுரையின் பகுதி 1 இங்கே படியுங்கள். சனிக்கிழமை அன்று வகுப்பறை பாணியில் படித்த பிறகு, ஞாயிறை நாங்கள் ஒரு திறந்த திட்டங்கள் நாளாகப் பயன்படுத்தினோம். மாணவர்கள் அங்கு வந்து ஒரு திட்டத்துக்கு எப்படி பங்களிப்பது என்று உதவி கேட்டுப் பெற முடியும். நாங்கள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதால், சுமார் இருபது மாணவர்கள் மட்டுமே வந்தனர். மாணவர்கள் வர… Read More »

Functions & Events in JavaScript

7 Functions & Events Functions என்பது மறுபயன்பாட்டிற்கு உதவும் வகையில் எழுதப்படுகின்ற நிரல்கள் ஆகும். ஒரு மிகப்பெரிய program- ஐ நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒருசில குறிப்பிட்ட நிரல்களை மட்டும் நமது தேவைக்கேற்ப நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிரல்களை ஒரு பொதுவான பெயர் வைத்து சேமித்துக்கொள்ள functions பயன்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், ஒரு மிகப்பெரிய program-ஐ சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கையாளுவதற்கு functions பயன்படுகிறது. இதை parameters ஏற்றுக்கொண்டு செயல்படுபவை, parameters இல்லாமல்… Read More »