கணியம் – இதழ் 6
வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஃபெடொரா 17 மற்றும் உபுண்டு 12.04 போன்ற க்னு/லினக்ஸ் வெளியீடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றை மேலும் பரப்ப உங்கள் ஊரில் பொது நிகழ்ச்சிகளை நடத்தலாமே. வீட்டில் இருந்தபடியே, அவற்றை கற்க, வீடியோ பாடங்கள் spoken-tutorial.org தளத்தில் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. நீங்களும் உருவாக்கி பங்கேற்கலாம். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும், உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.… Read More »