Category Archives: செய்திகள்

செநு(AI)கணினி(PC) என்றால் என்ன, அதை 2024 இல் வாங்க வேண்டுமா?

2024 ஆம் ஆண்டில், டெல், ஹெச்பி, லெனோவா, ஆசஸ், சாம்சங் ,போன்ற பிற முக்கிய வணிகமுத்திரைகள் போன்று பல்வேறு புதியசெநு(AI)கணினிகளின்(PC) வெளியீட்டை இப்போது நாம் கண்டுவருகிறோம். இவையனைத்தும் “செநு(AI)கணினி(PC)” இன் moniker மூலம் தங்கள் புதிய சலுகைகளை சந்தைப்படுத்த முனைகின்றன. எனவே, இந்த புதிய செநு(AI)கணினிகள்(PC)எவ்வாறு வேறுபடுகின்றன? AI அல்லாத கணினிகளை விடசெநு(AI)கணினிகள்(PC) என்னென்ன புதிய வசதிகளையும் நன்மைகளையும் வழங்குகின்றன? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவும், செயல்திறனையும் , செயல்திறன் போன்ற வசதிவாய்ப்புகளை காணும் புதிய தலைமுறை… Read More »

பல நல்லுள்ளங்களின் உதவியால் VGLUG அலுவலகத்திற்கு பாரி, கபிலன், ஆதினி வந்து சேர்ந்தனர்

எழுதியவர் மணிமாறான்.   அனைவருக்கும் வணக்கம், வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்களும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கணினிகள் வாங்க நண்பர்களிடம் நன்கொடை கேட்டோம். பல்வேறு நண்பர்களிடமிருந்து ரூபாய் 50, ரூபாய் 100 முதல் அவர்களால் முடிந்த பல்வேறு நன்கொடைகள் கிடைக்கப்பெற்றது. இடைப்பட்ட கொரோனா காலங்களில் வாங்க இயலாத காரணத்தினால் கணினிகள் வாங்க தாமதமாகியது. இறுதியாக இந்த… Read More »

மூடுபனி கணினி(fog computing)

மூடுபனி கணினி( fog computing) என்றால் என்ன? என்ற கேள்வி நம்மனைவர் மனதிலும் எழும் நிற்க.ஆரம்ப நாட்களில், கணினிகள் மிகப்பெரியதாகவும் அதிகவிலை உயர்ந்ததாகவும் இருந்தன. அதனால் நாம் வாழும் இவ்வுலகில் ஒரு சிலரே அவற்றினை பயன்படுத்தி கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் அவ்வாறானதொரு கணினியை செயல்படுத்திடு வதற்காக வென அதிக நேரத்தை ஒதுக்கி துளையிடப்பட்ட அட்டைகளை( punch cards) பயன்படுத்த வேண்டியிருந்தது (நேரடியாக காண்பிக்க வேண்டியிருந்தது). இதுவே mainframes எனஅழைக்கப்பட்டது. இவ்வமைப்புகள் பல்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்தன மேலும் முனைமங்களில்… Read More »

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு – மாநாட்டுக் குறிப்புகள்

இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டுக் குறிப்புகள்: 1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள். 2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில் கவனித்த தமிழ் மக்களுக்குத் திகட்டத் திகட்ட தொழில்நுட்பப் பகிர்வுகள் இருந்தன. 3) தமிழிலேயே நிரல் எழுதும் எழில் பற்றிய அமர்வு,… Read More »

மீப்பெரும் தரவுகள் ஒரு அறிமுகம்

நுண்ணறிவு, போக்குகள், தொடர்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் குறிப்பாக மனித நடத்தையையும் அவர்களுடனான இடைமுகப்பு தொடர்பாகவும் இந்தமீப்பெரும் தரவுத் தொகுப்புகளின் வாயிலாக மிகஎளிதாக கணிப்பாய்வு செய்யலாம், தொழில்துறை ஆய்வாளரான Doug Laney என்பவர் Gartner என்பவருடன் சேர்ந்து தொகுதி(volume) , வேகம் (velocity) , வகைகள் (variety) ஆகிய மூன்று பெரிய Vs சேர்ந்ததே இன்றைய முக்கிய மீப்பெரும் தரவுகளின் வலிமையாகும் என்ற வரையறையை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் மாறிலியாகவும்(Variability),சிக்கலானதாகவும்(Complexity) இருக்கும்என்று கூறுகின்றார் , ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக… Read More »

மென்பொருள் சுதந்திர தினம் 2018 – காஞ்சிபுரம் – செப் 29 2018 – அழைப்பிதழ்

வணக்கம், காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு, இந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. தேதி – செப் 29, 2018 சனி நேரம் – காலை 10 முதல் மாலை 5 வரை இடம். ஏ.கே. தங்கவேல் உயர் நிலைப்பள்ளி, தும்பவனம் தெரு, கீரை மண்டபம் அருகில், காஞ்சிபுரம் வரைபடம்  – www.openstreetmap.org/note/1541256#map=17/12.82289/79.70818&layers=N   நிகழ்ச்சி நிரல் ====== 1. கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் உரை –… Read More »

ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்!

சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது. ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் டிசைனிங், சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகிய 24க்கும் அதிகமான பயிற்சிகள் பயிலகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளைப் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்லாண்டுகள் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் வழங்கி வருகிறார்கள். வரும் ஆண்டு முதல் ஏழை பட்டதாரிகளும் பெற்று பயன் பெறும் வகையில் முற்றிலும் இலவசமாக இப்பயிற்சிகளைக் கொடுக்கப் பயிலகம்… Read More »