முத்து

லேங்க்ஸ்கேப், பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் வெப் டிசைனிங் இலவச இணையவழிப் பயிற்சிகள்

மொழிபெயர்ப்புத் துறை முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து வெப் டிசைனிங் (HTML, CSS,JS, Canvas) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழியே ஆறு (கூடினால் எட்டு) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சி ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் வரை இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள:…
Read more

லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்!

எதிர்பார்த்த படி, லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் இணையவழி ஹேக்கத்தானுக்கு ஆர்வத்துடன் பலர் குவியத் தொடங்கினார்கள். சரியாகப் பதினொன்றரைக்கு உள்ளே நுழைந்தார் இல்மாரி. அவர் உள்ளே நுழையும் போதே இருபதுக்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். சில மணித்துளிகளில் நிகழ்வை இல்மாரி தொடங்கும் போது இணைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டிருந்தது. மிக இயல்பாக, லிப்ரெஆபிஸ் தொகுப்பில் எப்படி வேலை செய்ய வேண்டும்?…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 18 – யார், எத்தனை தோசை சாப்பிட்டார்கள்??

முந்தைய பதிவில் வியனின் அப்பா, அவனுடைய அறிவைப் பார்த்து வியந்தார் என்று சொன்னேன் அல்லவா! அதற்குக் காரணம் இருக்கிறது. முதலில் வியன் என்ன கேட்கிறான்? இன்னும் பத்து நாட்கள் பள்ளிக்கூடம் போக வேண்டும்; ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் எனப் பத்து நாளும் தாருங்கள் எனக் கேட்கிறான். இப்படிக் கொடுத்தால் கடைசியில் 50 ரூபாய் செலவாகியிருக்கும்….
Read more

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம்….
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 17 – வென்றது வியனா? அப்பாவா?

மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள். முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 16 – மோகனா? மன்னனா? வென்றது யார்?

பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும் என்றெல்லாம் போன பதிவில் முடித்திருந்தீர்கள். நாங்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறோம், நீங்கள் வேறு பயணத்திற்குள் நுழைந்து விட்டீர்களா? ஆளையே காணோமே என்று நண்பர்கள் சிலர் செல்லமாகக் கடிந்து கொண்டார்கள். ஆமாம், உண்மை தான்! கல்வெட்டுப் பயிற்சி ஒன்றைத் தமிழ்நாட்டு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. அந்தப் பயிற்சிக்குள்…
Read more

பைத்தான் படிக்கலாம் வாங்க – 15 – while 2

முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது. முதல் நிரல்: This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an…
Read more