எளிய தமிழில் 3D Printing 3. செயல்முறைப் படிகள் (process steps)
வடிவமைப்பு உருவாக்குதல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்க முதலில் ஒரு கணினி வழி வடிவமைப்பு (Computer Aided Design – CAD) மென்பொருள் தேவை. இதற்கு சில திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான வடிவமைப்பை முதல்படியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான கோப்பு வகையில் சேமித்தல் இம்மாதிரி மென்பொருட்களில் பலவிதமான கோப்பு வகைகளில் சேமிக்க முடியும். நாம் பொருள்சேர் உற்பத்திக்குத்… Read More »