Category Archives: பங்களிப்பாளர்கள்

லினக்ஸில் pwgen எனும் பயன்பாட்டின் உதவியுடன் கட்டளை வரியின் வாயிலாகவே கடவுச்சொற்களை எளிதாக உருவாக்கலாம்

பெரும்பாலான இணையதளங்களும் பயன்பாடுகளும் பயனாளர்களுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை கொண்டு கணக்குகளை உருவாக்கும்படி கோருகின்றன, ஏனெனில் இதனால் இவ்விணையதளங்கள் தங்களுக்கு ஏற்ற பயனாளர் அனுபவங்களை வழங்க முடியும் என கருதுகின்றன. இது இணையதள உருவாக்குநர்களுக்கு ஆதரவான முரண்பாடுகள் இருந்தாலும், கண்டிப்பாக இந்த செயல் பயாளர்களுக்கு தம்முடைய பணியை கடிணமாக ஆக்குகின்றது. சில நேரங்களில் கடவுச்சொற்களை உருவாக்குவதற்கான விதிகள் மிகவும் கண்டிப்பானதாகவும் யூகிக்க கடினமானதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவதுஎன்பது நாம் வாழும் இந்த புவிக்கும் வானத்திற்கும் சாலை… Read More »

மொசில்லா பொதுக்குரல் திட்டம் – இன்று காலை அரைமணிநேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இன்று இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 29.08.2021 ஞாயிறு – காலை… Read More »

எளிய தமிழில் 3D Printing 2. இழையை உருக்கிப் புனைதல்

உலோகம் உட்பட பலவிதமான பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய பலவிதமான தொழில்நுட்பங்கள் பொருள்சேர் உற்பத்திக்குப் புழக்கத்தில் வந்துவிட்டன. இருப்பினும் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வேலைகளுக்கு இழையை உருக்கிப் புனைதல் (Fused Filament Fabrication – FFF) தொழில்நுட்பமே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே உருகிய படிதல் மாதிரியமைத்தல் (fused deposition modeling – FDM) என்றும் சொல்கிறார்கள். இந்த செயல்முறை மூலம் நெகிழி (plastic) பாகங்களை உருவாக்கலாம். இதற்கான எந்திரங்கள் யாவரும் அணுகக்கூடிய வகையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அருங்காட்சியகங்களிலும் வந்துவிட்டதால் இவை… Read More »

பைத்தானின் துனையுடன் கோப்புகளைப் படித்தலும் எழுதுதலும்

கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்கின்ற ஒருசில தரவுகள் தற்காலிகமானவைகளாகும், அதாவது எந்தவொரு பயன்பாடும் கணினியில் செயல்படும்போதும் அவை செயல்படுவற்கு தேவையானதரவுகள் RAM எனும் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன, அக்குறிப்பிட்ட பணிமுடிந்த பின்னர் அவை அப்படியே  கைவிடப்பட்டுவிடுகின்றன. இருப்பினும், ஒருசில தரவுகள்அவ்வாறு கைவிடப்படாமல் தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவேண்டியுள்ளது. அதற்காக அவ்வாறான தரவுகள் பிற்கால பயன்பாட்டிற்காக  வன்வட்டில் சேமிக்கப்படுகின்றன, மேலும் இவையே  பயனாளர் ஒருவர் அதிகம் அக்கறை கொள்ளும் செயலாக அமைகின்றன. நிரலாளர்களைப் பொறுத்தவரை, கோப்புகளைப் படிக்கவும் எழுதவும் தேவையான குறிமுறைவரிகளை… Read More »

எளிய தமிழில் 3D Printing 1. பொருள்சேர் உற்பத்தி

முப்பரிமாண அச்சுருவாக்கம் அல்லது அச்சிடல் (3D Printing) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். எனினும் பொருள்சேர் உற்பத்தி (Additive Manufacturing) என்பதே இதற்கு தொழில்நுட்ப ரீதியாக சரியான பெயர். இதையே மேசைப்புனைவு (desktop fabrication) என்றும் சொல்கிறார்கள். இதை ஏன் பொருள்சேர் உற்பத்தி என்று சொல்கிறோம் என்று முதலில் பார்ப்போம். பொருள்நீக்கு உற்பத்தி (Subtractive manufacturing) ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும் அளவிலும் ஒரு பாகம் தயாரிக்க வேண்டுமென்றால் அதைவிடப் பெரிய மூலப் பொருளை எடுத்து அதைக் கடைசல்… Read More »

 பைதான் எனும் கணினிமொழியில் மறைந்துள்ள வசதிவாய்ப்புகள்

  நிரலாக்க உலகில் பைத்தான் எனும் கணினி மொழியானது தனக்கு என ஒரு சிறப்பான இடத்தினை தக்கவைத்து கொண்டுள்ளது, ஏனெனில் இந்த கணினிமொழியை கற்றுக்கொள்வது  எளிது,. துவக்க நிலையாளர்களுக்கு அதாவது கணினிமொழி பற்றியே அறியாத புதியவர்களும் இதனை கற்றுக்கொள்ள ஒரு எளிய மொழியாகக் காணப்படுகிறது, ஏனெனில் இதில் பொதுவாக நிரலாளர் சார்பாக தரவு வகைகள் போன்ற சிக்கலான கருத்துக்களை எளிதாக தீர்வுசெய்திட முடியும். இது படிக்க எளிதானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் இதனுடைய தொடரியல் எளிமையானது, இது… Read More »

வெவ்வேறு நிரலாக்க (கணினி)மொழிகள் ஒரே செயலை எவ்வாறு செய்கின்றன

நாம் ஒரு புதிய நிரலாக்க(கணினி) மொழியைக் கற்கத் தொடங்கும் போதெல்லாம், மாறிகளை வரையறுத்தல், ஒரு statementஐ எழுதுதல், வெளியீடுகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்திடுவோம். அந்தக் கருத்துகளைப் பற்றி பொதுவான புரிதல் கிடைத்தவுடன், மீதமுள்ளவற்றை நாம் சொந்தமாகக் கண்டுபிடித்து தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான நிரலாக்க மொழிகளில் சில ஒற்றுமைகள் உள்ளன, எனவே நாம் ஏதேனும் ஒரு நிரலாக்க மொழியை நன்கு ஐயமற அறிந்தவுடன், அடுத்ததைக் கற்றுக்கொள்வதற்காக அந்தக்கணினி மொழியின் தனித்துவமான விவரங்களை மட்டும்… Read More »

வெவ்வேறு கணினி மொழிகளால் ஒரேமாதிரியான தரவுகளை எவ்வாறு படிப்பது எழுதுவது

வெவ்வேறு கணினி மொழிகள் வெவ்வேறுவகைகளிலான தொடரியலில் இருந்தாலும் குறிப்பிட்டஎந்தவொரு பணியையும் துல்லியமாக செய்கின்றன. ஏனெனில், நிரலாக்க மொழிகள் அனைத்தும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் ஒரு நிரலாக்க மொழியை நாம் அறிந்துகொண்டவுடன், அதன் இலக்கணத்தையும் கட்டமைப்பையும் கண்டுபிடித்து அறிந்துகொள்வதன் மூலம் மற்றொரு கணினிமொழியை மிகஎளிதாகக் கற்றுக்கொள்ளலாம். அதே மனப்பான்மையில், வெவ்வேறு நிரலாக்க மொழிகள் தரவுகளை எவ்வாறு படிக்கின்றன, எழுதுகின்றன என்பதை இப்போது காண்போம். அவ்வாறான தரவுகளானவை உள்ளமைவு கோப்பிலிருந்து வந்ததாகஇருந்தாலும் அல்லது பயனாளர் ஒருவர் உருவாக்குகின்ற கோப்பிலிருந்து… Read More »

Groovyஉடன் JSON உள்ளமைவு கோப்புகளை பாகுபடுத்திடுக

பொதுவாக பயன்பாடுகளின் வகைகளில் சிலஇயல்புநிலை அல்லது பயன்பாட்டிற்கு வெளியிலான நிலை அல்லது உள்ளமைவு, அத்துடன் பயனாளர்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்பஅந்த உள்ளமைவைத் தனிப்பயனாக்கம் செய்வதற்கான வழிகள் ஆகியவை அடங்கும். எடுத்துக்காட்டாக, விபர் ஆபிஸ் ரைட்டரின் கட்டளை பட்டியில் Tools > Optionsஎன்றவாறு வாய்ப்புகளை தெரிவுசெய்வதன் மூலம் பயனாளர் தரவுகள், எழுத்துருக்கள், மொழி அமைப்புகள் , போன்றவற்றிற்கான அணுகலை லிபர் ஆஃபிஸ் ரைட்டர் வழங்குகிறது. இந்த அமைப்புகளை நிர்வகிக்க சில பயன்பாடுகள் (லிபர் ஆபிஸ் போன்றவை) குறிப்பிட்ட பகுதியை… Read More »

.புதிய சிப் கட்டமைப்புகளுக்கான தள இயக்க முறைமைகள்

கணினியானது எண்களை கணக்கிடும் கணிப்பானைவிட அதிவேகமாக செயல்படும்நிலையில் இவைகளை(கணினிகளை) அதிவேக கணிப்பான்கள் என அழைக்காமல் ஏன் “கணினிகள்” என்று அழைக்கப்படுகின்றன என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழும் நிற்க. ஒரு நவீன கணினியானது இணையத்தில் உலாவரஉதவுகிறது, இசை,கானொளி காட்சி ஆகியவற்றை இயக்குகிறது, கானொளிகாட்சி விளையாட்டுகளையும் திரைப்படங்களுக்கான அழகான வரைகலையையும் உருவாக்குகிறது, சிக்கலான வானிலை முன்னறிவிப்புகளை செய்கின்றது, தொற்றுநோய்களின் அபாயங்களை உருவகப் படுத்துகிறது , அவை எப்போது நம்மை தாக்கக்கூடும் என கணிக்கிறது, அதுமட்டுமல்லாது கட்டடக்கலை ,… Read More »