Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் VR/AR/MR 21. கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

ஊடாடும் மிகை மெய்ம்மை (AR) கலந்த மெய்ம்மை (MR) தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஊடாட (interact) இயலும் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு மாறாக மிகை மெய்ம்மை (AR) தொழில்நுட்பத்தில் இம்மாதிரி ஊடாடல் இயலாது. ஆகவே கலந்த மெய்ம்மையை ஊடாடும் மிகை மெய்ம்மை என்றும் கூறலாம். மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined) மெய்யுலகில் மெய்நிகர் பொருட்களை மேலடுக்காக (overlays) மிகை… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்? மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம் என்று முன்னர் பார்த்தோம். அதேபோல இடஞ்சார்ந்த ஒலி அமைவும் மிக அவசியம். இது நம்முடைய VR/AR காட்சிகளில் மூழ்கவைக்கும் அனுபவத்தை… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 19. கல்வி மற்றும் பயிற்சியில் AR

வகுப்பறையில் ஈர்க்கும் அனுபவத்துக்கு மிகை மெய்ம்மை (AR) தோற்ற மெய்ம்மையின் (VR) மூழ்க வைக்கும் அனுபவங்கள் (immersive experiences) மூலம் கற்றல் ஆழமாகப் பதிகிறது என்றும் பயில்வோர் ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துகின்றனர் என்றும் முன்னர் பார்த்தோம். VR காட்சிகளில் நாம் மெய்நிகர் உலகத்திலேயேதான் இருக்கமுடியும். ஆனால் AR தொழில்நுட்பம் காட்சிகளை நம்முடைய வகுப்பறைக்கே கொண்டுவருகிறது. இதன் விளைவாக, வகுப்புகள் மிகவும் ஊடாடும் அனுபவமாக ஆகின்றன. மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட தகவல்களை சிறப்பாக நினைவில் வைக்க AR உதவுகிறது.… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 18. தொழில்துறை மற்றும் உற்பத்தியில் AR

தொழிற்சாலை திட்டமிட (factory planning) மிகை மெய்ம்மை (AR)  தற்போது இருக்கும் தொழிற்சாலையின் காணொளிக் காட்சியை எடுத்து அதன்மேல் நாம் புதிதாக வாங்கி நிறுவவிருக்கும் இயந்திரங்களின் எண்ணிம வடிவத்தை (digital shape) மெய்நிகர் மேலடுக்காக (overlay) வைத்துப் பார்க்கலாம். பிரச்சனைகள் தெரியவந்தால் உடன் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இது நம்முடைய திட்டமிடலின் நம்பகத்தன்மையை அதிகமாக்க வழிவகுக்கிறது. இதன் விளைவாக நேரம் மற்றும் செலவு குறைகிறது. அங்கீகரித்த மாதிரியுடன் ஒப்பிடுதல் நீங்கள் தயாரிப்புகள் மற்றும் பாகங்களை உங்கள் வாடிக்கையாளருக்கு… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 17. AR சாதன வகைகள்

காட்சித்திரைகள் விமானி முன்னால் நிமிர்ந்து பார்க்குமிடத்தில் உள்ள கண்ணாடியிலேயே (Head Up Displays – HUD) முக்கியமான (Critical) தகவல்கள் காட்டப்படும். விமானத்தை செலுத்தும்போது விமானியறைக்குள்ளேயே (cockpit) பார்த்துக்கொண்டிராமல் வெளியே விமானம் செல்லும் திசையில் பார்க்க உதவுகிறது. இதில் ஒரு மாற்றமாகத் தலைக்கவசத்தில் பொருத்திய காட்சித்திரைகளும் உண்டு. இவை வான்பறப்பியல் (aviation) போன்ற சில தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. முப்பரிமாண ஒளியுருவக் காட்சிகள் (Holographic displays) சமீப காலங்களில் ஸ்டார் வார்ஸ் (Star wars) மற்றும் அயர்ன் மேன்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 16. AR உருவாக்கும் திறந்தமூலக் கருவிகள்

பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் (viewpoint tracking) மிகை மெய்ம்மையில் ஒரு முக்கியப் பிரச்சனை பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல். நாம் நம்முடைய வரவேற்பறையிலுள்ள மேசையின் மேலுள்ள பொருட்களின் நடுவில் ஒரு கோவில் கோபுரத்தின் மெய்நிகர் வடிவத்தை வைத்துவிட்டோம். நாம் இப்போது அந்த மேசையைச் சுற்றிவந்தால் அந்த கோபுரத்தின் வெவ்வேறு பக்கங்கள் தெரியவேண்டுமல்லவா? இதைத்தான் பார்வைக்கோணத்தைப் பின்தொடர்தல் என்று சொல்கிறோம். இதற்கு நம் கருவிகள் வழிசெய்யவேண்டும். AR.js ஸ்டுடியோ எந்த இணைய உலாவியிலும் ஓடக்கூடிய மிகை மெய்ம்மை (AR) உருவாக்கும் எளிய வழி… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 15. விடுநிலைகள் (Degrees of freedom – DoF)

மூழ்கவைக்கும் அனுபவமும் விடுநிலைகளும் மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய பார்வைப் புலம் (Field of View – FoV) என்ற கருத்துருவை முன்னர் பார்த்தோம். நாம் நகர்ந்தாலும், திரும்பினாலும் நாம் பார்க்கும் காட்சி அதற்கேற்றாற்போல் நகரவேண்டும் மற்றும் திரும்பவேண்டும். அதாவது பெயர்ச்சிக்கான (translation) இடநிலை பின்தொடர்தல் (positional tracking) மற்றும் சுழற்சிக்கான (rotation) நோக்குநிலை பின்தொடர்தல் (orientation tracking) இரண்டுமே மூழ்கவைக்கும் அனுபவத்தை அடைய அவசியம் தேவை. இவற்றைப் புரிந்துகொள்ள நாம் விடுநிலைகள் என்ற கருத்துருவைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 14. மிகை மெய்ம்மை (AR) வகைகள்

குறிப்பி (marker) அடிப்படையிலான மிகை மெய்ம்மை (AR) குறிப்பி அடிப்படையிலான (Marker-based) மிகை மெய்ம்மை அனுபவங்களுக்கு ஒரு தொடக்கல் (triggering) படம் தேவைப்படுகிறது. குறிப்பி என்பது QR குறியீடு போலவேதான், ஆனால் இன்னும் எளிமையாக இருக்கும். இதை ஒருவர் தங்கள் திறன்பேசியைப் பயன்படுத்தி AR செயலியின் மூலம் வருடலாம் (scan). படம் ஒத்திருந்தால் முன்கூட்டியே தயாரித்த AR காணொளி அல்லது அசைவூட்டத்தைக் காட்டலாம். குறிப்பி அடையாளம் காணல் வேலையை சாதனத்திலேயே செய்யலாம். அல்லது இணைய வழியாக மேகக்கணிமைக்கும்… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 13. மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

VR இல் நாம் முழுவதும் மெய்நிகர் உலகத்திலேயே சஞ்சரித்தோம். அது கல்விக்கும், பயிற்சிக்கும், உட்புற வடிவமைப்புக்கும் மற்றும் பல வேலைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்று பார்த்தோம். இருப்பினும் நம்மைச் சுற்றியுள்ள மெய்யான உலகை எடுத்து அதன்மேல் தேவையைப் பொருத்து சில மெய்நிகர் உருவங்களையும், வரைபடங்களையும், உரைகளையும் காட்ட இயன்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மிகைப்படுத்திய அல்லது மிகை மெய்ம்மை. இது மேலும் பல வேலைகளுக்குப் பயன்படுமல்லவா? போக்கிமான் கோ (Pokemon Go) என்ற… Read More »

எளிய தமிழில் VR/AR/MR 12. VR மற்ற சில பயன்பாடுகள்

உற்பத்தி (Manufacturing) வானூர்தியில் இருக்கும் இடத்தைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும். பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் இடத்தையும் வீணாக்கக் கூடாது. ஆகவே இருக்கும் தளவமைப்பில் (layout) சிறு மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினம். இந்த வேலைக்கு VR காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயணிகள் இருக்கை தளவமைப்பு தோற்ற மெய்ம்மை (VR) மாதிரியில் (model) தேவையான மாற்றங்களை செய்து பல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து பார்க்கலாம். மூச்சுக்குழாய் முகவணி (oxygen mask) கீழே தொங்கினால் எட்டிப்… Read More »