எளிய தமிழில் VR/AR/MR 11. வீடு பார்க்கவும் உட்புற வடிவமைப்புக்கும் VR
உட்புற வடிவமைப்பைக் (interior design) கற்பனை செய்து பார்ப்பது மிகக் கடினம் செயற்குறிப்பில் (proposal) கொடுத்துள்ள கட்டடத்தின் நீள அகல வரைபடம் (plan) மற்றும் முகப்புப் படம் (elevation) ஆகியவற்றை வைத்து அதன் அளவுகளை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியியலாளர்களால் உருவகிக்க முடியும். ஆனால் சாதாரண வாடிக்கையாளர்களுக்குக் கட்டடத்தின் அளவுகளைக் கற்பனை செய்து பார்ப்பதே மிகக்கடினம். மேலும் அறைகலன்கள், திரைச்சீலைகள், சுவர் அலங்காரம் ஆகியவற்றையும் சேர்த்து உருவகிப்பது குழப்பமான வேலையாகிறது. ஆகவே வாக்குறுதி கொடுத்தபடி வேலையை செய்து முடிக்கவில்லை… Read More »