Category Archives: பங்களிப்பாளர்கள்

எளிய தமிழில் Electric Vehicles 26. ஓட்டுநர்களுக்கு உதவிக் குறிப்புகள்

மின்னூர்திகள் ஓடும்போது சத்தமே இருக்காது பெட்ரோல் டீசல் கார்களில் வரும் எஞ்சின் ஓடும் சத்தமும், அதிர்வும் மின்னூர்தி மோட்டார்களில் மிகக் குறைவு. காரில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் வசதியானது. ஆனால் சாலையில் செல்லும் பாதசாரிகளால் வண்டி மிக அருகில் வந்தாலும் அதை உணர முடியாது. இது விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே ஓட்டுநர் மேலும் கவனமாக ஓட்ட வேண்டும். முக்கியமாகப் பின்னோக்கிச் செல்லும்போது மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். கியர் மாற்றுதல் தானியங்கி கியர்… Read More »

ஒவ்வொரு நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்துதிறமூல கருவிகள்

ஒவ்வொரு நிரலாளருக்கும் குறிமுறைவரிகளை எழுதவும், அதைபரிசோதிக்கவும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சில திறமையான கருவிகள் தேவை. அவ்வாறானவர்களுக்கு உதவிடுவதற்காக சில திறமூலகருவிகளிலும் உள்ளன, அதாவது எவரும் அவற்றை கட்டணமில்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையில், ஒவ்வொரு நிரலாளரும் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான ஐந்து திறந்த மூலக் கருவிகளைப் பற்றி காண்போம். 1. Git 🗂️ உருவப்படத்தை ஒரு whiteboard இல் வரைவதாக கொள்க, திரும்பிச் சென்று முன்பு செய்தபணியை காண விரும்புவதாகவும் மேலும் அதில் திருத்தம்செய்ய விரும்பவதாகவும் கொள்க… Read More »

குறைந்த-குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகள் இல்லாத (LCNC) இயங்கு தளங்களை பயன்படுத்திடுவதற்கேற்ப வருங்காலத்திற்காக தயாராகிடுக

LCNC எனசுருக்கமான பெயரால் அழைக்கப்பெறுகின்ற குறைந்த-குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகள் இல்லாத (low-code/no-code (LCNC)) இயங்குதளங்கள் உருவானதன் மூலம் மென்பொருள் மேம்பாடு ஒருஅதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளது, இது குறிமுறைவரிகளின் வழிமுறையில் செயல்படத்தொடங்காதவர்கள் கூட விரைவாக குறைந்த நேரத்தில் பயன்பாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. அதிலும் திறமூல களப்பெயர்களில் உள்ள சிறந்த LCNC இயங்குதளங்களை இப்போதுகாண்போம். தற்போதை சூழலில் திறமையான மென்பொருள் உருவாக்குநர்கள் போதுமான அளவு கிடைத்திடாமல் பற்றாக்குறையாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களுடைய பணியை விரைவாகச் செய்து முடிக்க செயற்கை நுண்ணறிவு (AI)… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 25. பேருந்து, சரக்குந்து போன்ற வணிக ஊர்திகள்

ஈய-அமில மின்கலத்தைப் பயன்படுத்தும் மின் கவைத்தூக்கி சரக்குந்துகள் (Electric forklift trucks) பல பத்தாண்டுகளாக சந்தையில் உள்ளன. இவை கப்பல்கள், கிடங்குகள் போன்ற இடங்களில் புகை இல்லாமல் உள்வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட இயலாது.  பேருந்துகளும் சரக்குந்துகளும் அடிப்படையில் கார்கள் போன்றவையே. எனினும் அதிக பளுவை சமாளிக்க அதிக முறுக்கு விசையும் (torque) திறனும் (power) தேவைப்படும். ஆகவே அதற்கேற்ற தோதான பெரிய மோட்டாரும் மின்கலமும் இருக்க வேண்டும். இன்றைய சந்தையில் மின் பேருந்துகளே… Read More »

நிரலாளர்களுக்கான குறிமுறைவரிகளின் முதன்மையான சவால்கள்

நிரலாளர்கள் தங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், குறிமுறைவரிகளில் எதிர்கொள்கின்ற சவால்கள் நிரலாக்கத்தின் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்தவும், புதிய வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளவும், தொழில்நுட்ப நேர்காணல்களுக்குத் தயாராகவும் ஒரு கட்டமைக்கப்பட்ட , ஈர்க்கக்கூடிய வழிமுறையை வழங்குகின்றன. தம்முடைய அடிப்படை திறன்களை வலுப்படுத்த விரும்பும் ஒரு தொடக்க நிலையாளராக இருந்தாலும் அல்லது கூர்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனுபவம் வாய்ந்த நிரலாளராக இருந்தாலும், குறிமுறைவரிகளின் சவால்களில் பங்கேற்பது ஒரு நிரலாளராக வளர உதவும். 2024 இல் நிரலாளர்களுக்கு… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 24. சக்கரத்திலேயே மோட்டார்

இரு சக்கர ஊர்திகளில், கார்கள் போன்று, இரண்டு சக்கரங்களை வேறுபாட்டுப் பல்லிணை (differential) வைத்து ஓட்டவேண்டிய பிரச்சினை கிடையாது. அப்படியிருக்க மோட்டாரிலிருந்து வார்ப்பட்டை (belt) அல்லது பல்லிணை (gear) மூலம்தான் சக்கரத்தைச் சுழற்றவேண்டுமா என்ன? உள்ளேயே மோட்டாரை வைத்து நேரடியாகச் சக்கரத்தைச் சுழற்றலாம் அல்லவா? அதுதான் சக்கர மோட்டார் (wheel or hub motor). சுற்றகம் (rotor) வெளிப்புறம் இருக்கும் வழக்கமாக மோட்டார்களில் நிலையகம் (stator) வெளிப்புறம் இருக்கும், சுற்றகம் உட்புறம் இருக்கும். ஆனால் நாம் வெளிப்புறத்திலுள்ள… Read More »

ஏன் ஒவ்வொருவரும் கணினியை துவக்குவதற்கான தயார்நிலையிலுள்ள லினக்ஸ் USBஐ வைத்திருக்க வேண்டும்

மிகவும் அனுபவமுள்ள பயனாளர்களுக்குகூட இந்த சிக்கல்நிகழலாம். அதாவது ஏதேனும் முக்கியமான பணியில் ஆழ்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென கணினியின் இயக்கம் நின்றுவிடலாம் அதை மீண்டும் இயக்கி செயல்படுத்திடுவது முந்தைய நிலைக்கு கொண்டுவருவது எவ்வளவு வெறுப்பாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியே. இந்த மீட்பு இயக்கமானது மீண்டும் தொடங்குவதற்கான தூண்டுதலாக இருந்தாலும், இதுவரை பணிசெய்த நேரத்தை இந்த மீட்பு இயக்கத்தின் மூலம் சேமிக்க முடியும். லினக்ஸின் துவக்கக்கூடிய விரலியின்(USB) மீட்டெடுப்பு வட்டு என்பது லினக்ஸின்… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 23. மின்-ரிக்‌ஷா

மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) பகிர்ந்து கொள்ளும் வாடகை ஆட்டோவாக (share auto) வட, கிழக்கு மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மணிக்கு சுமார் 20 கிமீ வேகம்தான் செல்ல முடியும், வசதிகளும் குறைவு. ஆனால் கட்டணம் மிகக்குறைவு. ஆகவே மக்கள் இவற்றை உள்ளூர் வேலைகளுக்குப் பெருவாரியாகப் பயன்படுத்துகின்றனர். தொடக்கத்தில் சீனாவில் இருந்து பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்து இங்கே தொகுத்து விற்பனை செய்தனர். தற்போது மற்ற பாகங்கள் யாவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன. மோட்டாரும் அதன் கட்டுப்பாட்டகமும் (inverter) ஓரளவு… Read More »

குறிமுறைவரிகளை எழுதிடாமலேயே நிரலாக்கம் செய்வதற்கான சிறந்த திறமூல தளங்கள்

நிரலாக்கத் திறன்கள் எதுவும் நம்மிடம் இல்லை, ஆனால் இணையப் பயன் பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஆர்வமும் சிறந்த கருத்தமைவுமட்டுமே உள்ளது என்னசெய்வது என தத்தளிக்கவேண்டாம் குறிமுறைவரிகளை எழுதிடும்திறன் இல்லாதவர்களும் மென்பொருள் உருவாக்கிடுவதற்கான உதவி தற்போது தயாராக உள்ளது. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கத்திற்கு(No-code Development) உதவியை, தேர்வு செய்யக்கூடிய ஏராளமான திறமூல தளங்களும் உள்ளன. அவைகளுள் சிறந்தவை பின்வருமாறு. குறிமுறைவரிகளற்ற நிரலாக்கம்(No-code Development) என்பது பொதுமக்கள் நிரலாளர்கள் போன்று எந்தவொரு குறிமுறைவரிகளையும் எழுதிடவேண்டியத் தேவையில்லாமல் மென்பொருளை தாமே சுயமாக உருவாக்குவதற்கான ஒரு… Read More »

எளிய தமிழில் Electric Vehicles 22. மூன்று சக்கர மின்னூர்திகள்

மூன்று சக்கர மின்னூர்திகள் இரண்டு வகை. குறைந்தத் திறன் கொண்ட மின்-ரிக்‌ஷாக்கள் (E-Rickshaw) ஈய அமில மின்கலம் வைத்து வருகின்றன. இவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். ஈய அமில மின்கலத்தைவிட லித்தியம் அயனி மின்கலம் அதிக ஆற்றல் கொண்டது. ஆகவே எடை குறைவு. துரிதமாக மின்னேற்றம் செய்யவும் முடியும். ஆனால் விலை அதிகம். இங்கு லித்தியம் அயனி மின்கலம் பொருத்திய அதிகத் திறன் கொண்ட மின்-ஆட்டோக்கள் (E-Auto) பற்றிப் பார்ப்போம்.  மோட்டார்  இவற்றில் பெரும்பாலும் தொடியற்ற… Read More »