Category Archives: விக்கிப்பீடியா

அறிவியல் எழுத்தாளர்களுக்கான விக்கிப் பயிலரங்கு – திண்டுக்கல்

பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, அறிவியல் தமிழ் சார்ந்த தரவுகளை இணையத்தில் அதிகரிக்கவும் விக்கிப்பீடியத் திட்டங்களில் அறிவியல் கருத்துக்களை மேம்படுத்தவும் அறிவியல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒருநாள் பயிலரங்கு நடைபெறுகிறது திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் செப்டம்பர் 27 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 வரை நடைபெறுகிறது. கணினியில் தமிழ் எழுதத் தெரிந்து அறிவியல் ஆர்வம் கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்து கொள்ள இந்தப் படிவத்தை… Read More »

மதுரையில் தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு

பெண்ணியம் நாட்டார் மரபு 2025 போட்டியை ஒட்டி தமிழ் விக்கித்திட்டப் பயிலரங்கு பெண்ணியம் நாட்டார் மரபு போட்டியை ஒட்டி, விக்கிப்பீடியத் தகவல்களில் பாலினப் பாகுபாட்டைக் குறைக்கவும், மதுரை சார்ந்த பண்பாட்டுத் தரவுகளை அதிகரிக்கவும், தமிழ் விக்கிப்பீடியா வழங்கும் ஒருநாள் பயிலரங்கு. நாள்:பிப்ரவரி 22, 2025 (காலை 9:30 முதல் 5:30 வரை) இடம்:Blaze Web Services, கண்மாய் கரை சாலை, காளவாசல், மதுரை 625016 கட்டணமில்லை ஆனால் முன்பதிவு அவசியம்  ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ளலாம்.… Read More »

தமிழ் விக்கிப்பீடியா: அடிப்படை நிலை பயிற்சி

அனைவருக்கும் வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான ‘அடிப்படை நிலை’ பயிற்சி ஒன்றினை இணையம் வழியே வழங்குவதென முடிவெடுத்துள்ளோம். தமிழில் எழுதும் ஆர்வமுள்ள, தாய்மொழிக்கு பங்களிப்புத் தரும் விருப்பமுள்ள உங்கள் உறவினர்கள் / நண்பர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும் அழைப்புகளை அனுப்பிவையுங்கள்! நன்றி 💐 இவ்வாரத்திற்குரிய நிகழ்வில் கலந்துகொள்வோரின் ஆர்வத்தின் அடிப்படையில், கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில், அடுத்தடுத்து நிகழ்வுகளை நடத்துவோம்.… Read More »

விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

கணித்தமிழ் மாநாடு – விக்கிப்பீடியா அரங்கு

வணக்கம், கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு நீண்ட திட்டமிடலுடன் ஒரு பரப்புரை செய்ய தமிழ் விக்கிப்பீடியா களமிறங்குகிறது. எப்படிப் பயன்படுத்தலாம் எனத் தொடங்கி எப்படிப் பங்களிக்கலாம் வரை அறிந்து கொள்ளமுடியும். எழுதலாம், படங்களைப் பகிரலாம், கலைச்சொல்லாக்கம் செய்யலாம், மென்பொருள் உருவாக்கலாம் என விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கட்டற்ற இணையத் தமிழை வளர்க்க விக்கிமீடியா அரங்கு 18 இற்கு அனைவரும் வாருங்கள்.