Autotronics

எளிய தமிழில் Car Electronics 7. நிறுத்தக் கட்டுப்பாடு

சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (Antilock Braking System – ABS)  பழைய கார்களில், அவசர நிலைமையில், பிரேக்கை மிகவும் அழுத்தினால், சக்கரங்கள் சுழலாமல் முற்றிலும் நின்றுவிடும். இதைப் பூட்டுதல் (locking) என்று சொல்கிறோம். சக்கரங்கள் சுழலவில்லை என்றால் வண்டி சறுக்கும். நீங்கள் திருப்பும் பக்கம் போகாது. இதனால் ஊர்தியைத் தடைகளிலிருந்து விலக்கிப் பாதுகாப்பை நோக்கிச் செலுத்த…
Read more

எளிய தமிழில் Car Electronics 6. சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம்

சுழற்செலுத்தி (Transmission) அல்லது பல்லிணைப் பெட்டி (Gear box) என்பது ஒரு இயந்திர சாதனமாகும். இது ஊர்தியின் வேகத்தை மாற்றுவதற்கும் பின்னோக்கிச் செல்லவும் பல்லிணைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் கார்களின் சுழற்செலுத்திகள் 5 முன்னோக்கிய பல்லிணை விகிதங்களும் ஒரு பின்னோக்கிய பல்லிணை விகிதமும் கொண்டவை.  தானியங்கி சுழற்செலுத்தி (Automatic Transmission)  முன்னோக்கிய வேகத்திற்குத்…
Read more

எளிய தமிழில் Car Electronics 5. பொறிக் கட்டுப்பாட்டகம்

பழைய கார்களில் எரிகலப்பியும் (carburetor) நெரிப்பானும் (choke) ECU வருவதற்கு முன் பழைய கார்களில் எரிகலப்பி என்ற சாதனத்தைப் பயன்படுத்தினோம். இது பெட்ரோல் கார்களில் பொறிக்குள் நுழையும் காற்றையும் எரிபொருளையும் கலக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. காற்று-எரிபொருள் கலவை, பற்றவைப்பு நேரம் (ignition timing) மற்றும் செயலற்ற வேகம் (idle speed) போன்றவை இயந்திர (mechanical) வழிமுறையில்…
Read more

எளிய தமிழில் Car Electronics 4. ஊர்தி இயக்கிகள் தொழில்நுட்பம்

ஊர்தி இயக்கிகள் (actuators) எரிபொருளைக் கட்டுப்படுத்துவது முதல் காற்றுக் குளிர்விப்பு அமைப்பில் காற்றோட்டத்தை இயக்குவது மற்றும் திறன் இருக்கைகளை இயக்குவது வரை பல்வேறு செயல்திறன்களையும் பயணிகளின் வசதிக்கான வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் நீங்கள் இயக்கிகளைக் கைமுறையாக இயக்கலாம். ஆனால் பெரும்பாலும் கணினிகள் தேவைக்கேற்ப முடிவெடுத்து இவற்றை இயக்குகின்றன. எடுத்துக்காட்டாக, பழைய எரி கலப்பி (carburetor)…
Read more

எளிய தமிழில் Car Electronics 3. ஊர்தி உணரிகள் தொழில்நுட்பம்

நாம் ஊர்தியை ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு குறுக்கே ஓடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நம் கண் அதைப் பார்த்து, மூளைக்குச் செய்தியை அனுப்பி, மூளை அதை ஆபத்து என்று அறிந்து நம் கால்களுக்கு “பிரேக்கை அழுத்து” என்று கட்டளை அனுப்பி நிறுத்துவதற்குள் சிறிது நேரம் தாமதமாகிவிடும். நம் கண்கள்…
Read more

எளிய தமிழில் Car Electronics 2. மின்னணுக் கட்டுப்பாட்டகம்

ஊர்திகளில் மின்னணுக் கட்டுப்பாட்டகம் (Electronic Control Unit – ECU) முதன் முதலில் ஏன், எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று விவரமாகப் பார்ப்போம். இதை மின்னணுக் கட்டுப்பாட்டுக் கூறு (Electronic Control Module – ECM) என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் நாம் இவற்றின் தேவையையும், திறனையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். பொறிக்குள் பெட்ரோல் காற்றுக்…
Read more

எளிய தமிழில் Car Electronics 1. உயர் நிலைக் கண்ணோட்டம்

தானுந்து மின்னணுவியல் (Automotive Electronics) இரு சக்கர ஊர்திகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்களின் (tractors) உற்பத்தி எண்ணிக்கையில் உலகச் சந்தையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயணிகள் ஊர்திகளிலும், பேருந்து (bus), சரக்குந்து (truck/lorry) போன்ற வணிக ஊர்திகளிலும் நான்காம் இடத்தில் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியால் இவையும் வேகமாக…
Read more