AWS

அமேசான் இணையச்சேவைகள் – தரவத்தள மாற்றச்சேவை

வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன.  தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி…
Read more

எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் – அறிமுகம்

ஒரு நிரலரின் கணினியில் உருவாகிற மென்பொருளைப் பயனருக்குக் கொண்டுபோய் சேர்ப்பதற்கிடையே பல்வேறு படிநிலைகள் உள்ளன. பின்வரும் படங்களின் உதவியுடன் அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம். ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒரு பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு  (Version control system) இருக்கவேண்டும். நிரலர்கள், ஒவ்வொரு நாளூம், பலமுறை தமது நிரலை பதிப்புக் கட்டுபாட்டுக்கு அனுப்பியவண்ணம் இருப்பர். நிரலர்கள் அனுப்புகிற, இந்த…
Read more

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update),…
Read more

லாம்டா – AWS Lambda

மறைசேவையக கணிமை – Serverless Computing மேகக்கணிமையிலுள்ள மூன்று முக்கிய சேவைகள் உள்ளன என முன்னமே அறிந்தோம். கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas) செயற்றளச்சேவை (Platform as a Service – PaaS) மென்பொருள்சேவை (Software as a Service – SaaS) இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக செயற்சேவை (Function…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – தனிப்பயன் விபிசி

இதுவரையில் நாம் விபிசியின் கூறுகளைப் பற்றியும், ஒவ்வொரு கணக்கிற்கும் அமேசான் உருவாக்கிக் கொடுக்கிற இயல்நிலை விபிசி பற்றியும் அறிந்தோம். அமேசான் இணையச்சேவைகளை முதன்முதலாகப் பயன்படுத்துவோருக்கு, விபிசி பற்றிய எந்தவொரு சிக்கலும் நேராதவண்ணம் இயல்நிலை விபிசிக்கள் பார்த்துக்கொள்கின்றன. முன்னதாக நாம் ஒரு மேகக்கணினியை உருவாக்கியபோதும், அதிலிருந்து ஒரு வலைத்தளத்தை இயக்கியபோதும், விபிசியின் இருப்பைக் கூட நாம் அறிந்திருக்கவில்லை….
Read more

அமேசான் இணையச்சேவைகள் – அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள்

பாதுகாப்புக்குழுக்கள் என்பவை மேகக்கணினிகளின் தீச்சுவர்களாகச் (Firewalls) செயல்படுகின்றன என முந்தைய பதிவில் அறிந்தோம். அதைப்போலவே, ஒரு துணைஇணையத்தின் தீச்சுவராக, அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள் (Access Control Lists) செயல்படுகின்றன. மேகக்கணினிகளைப் பொருத்தவரையில், பாதுகாப்புக்குழுக்களும், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்களும் இணைந்து இரண்டடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது. தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில், அணுக்கக் கட்டுப்பாட்டுப் பட்டியல்கள், துணைஇணையத்தின் உள்வருகிற…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – பகுதி 2

நுழைவாயில்கள் பெரும்பாலான சமயங்களில், நமது மேகக்கணினிகளுக்கு இணையத்தொடர்பு தேவைப்படுகிறது. இது உலகளாவிய இணைய இணைப்பாகவோ (Internet), பயனரின் மெய்நிகர் தனிப்பயன் இணைய இணைப்பாகவோ (Virtual Private Network – VPN) இருக்கலாம். இவற்றில் எந்தவகை இணையத்தொடர்பாக இருந்தாலும், அவை, நுழைவாயில்கள் வழியாகவே நடைபெற முடியும். தன்வழியே நிகழும் இணையப்பரிமாற்றங்களுக்கான, இணையமுகவரிகளைப் கண்டறிவது (Network Address Translation…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் – VPC

EC2, S3 ஆகியவற்றிலிருந்தே, பலர் அமேசான் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இணையச்சேவையகங்கள் (Web servers), பொருள் சேமிப்பகம் (Object Storage) குறித்த அடிப்படைகள் தெரிந்திருந்தாலே, இவற்றைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இதற்கடுத்த படியாக, நமது மேகக்கணினிகளின் பாதுகாப்பு பற்றி பார்க்கும்போது, அடையாள அணுக்க மேலாண்மை (IAM), பாதுகாப்புக்குழுக்கள் (Security Groups), மெய்நிகர் தனிப்பயன் குழுமங்கள் (Virtual Private…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நிரல்வழிச் செயல்முறை – பகுதி 3

கோப்பினை அழித்தல் கடந்த பதிவுகளில் ஒரு கொள்கலனை உருவாக்கி, அதில் கோப்பினைப் பதிவேற்றி, சரிபார்த்தோம். இப்பதிவில், கொள்கலனிலிருந்து பொருள்களை நீக்குவதற்கு DeleteObjectRequest என்ற கோரிக்கையைப் பயன்படுத்தலாம். [code lang=”csharp”] public async Task<bool> DeleteKey(string bucketName, string key) { using (var client = ClientFactory.CreateS3Client()) { var request = new DeleteObjectRequest…
Read more