Category Archives: Curated

இலவசம்: கார்ல் ஃபோகல் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல்” புத்தகம்

அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் – ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவது எப்படி” என்ற புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம். இது திறந்த மூல மென்பொருள்… Read More »

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது!

பல்வேறு துறைகளில் ‘திறந்த மூலம், பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு’ தத்துவத்தை ஊக்குவிக்க இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய அரசாங்கம் ஓபன்ஃபோர்ஜ் என்ற அதிகார பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியது. உள்நாட்டிலேயே பராமரிக்கப்படும் இந்த கிட்ஹப் (GitHub) போன்ற புதிய தளத்துக்கு, நாட்டில் உள்ள மின்னாளுகை செயலிகளின் மென்பொருள் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மீண்டும் பயன்படுத்துவதும் குறிக்கோளாகும். இதற்கான களஞ்சியம் உருவாக்க இதன் குழு திறந்த மூல ஒத்துழைப்பு தளம் டுலீப் (Tuleap) பயன்படுத்தியுள்ளது. மேலிருக்கும் மூடியை எடுத்துப் பார்த்தால் லினக்ஸ், அப்பாச்சி, மைஎஸ்கியூஎல்… Read More »

டெவோபீடியா: நிரல் பயிலுநர்களுக்கான விக்கிபீடியா இந்தியாவில் உருவாகிறது

தொலைத் தொடர்புத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள அரவிந்த் பத்மநாபன் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருட்களின் இணையத்துக்கு (Internet of Things, IoT) ஒரு திறன்பேசி செயலியை உருவாக்க விரும்பினார். 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொண்ட அவர் இணையத்தில் நிரலாக்க மொழியில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயத் தொடங்கினார். இது செயலியை உருவாக்க அவசியமாக இருந்தது. ரியாக்ட் நேட்டிவ் (React Native) என்னும் தன்னக செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.… Read More »

கிட்ஹப் இல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக விளக்கும் பயிற்சி

கிட்ஹப் (GitHub) இல் திறந்த மூல திட்டத்துக்கு பங்களிப்பது இழு கோரிக்கை (pull request) மூலம் நடைபெறுகிறது. இழு கோரிக்கை என்பது அடிப்படையில் ஒரு குறுநிரல்தான். இது மேலும் தகவலை உள்ளடக்குகிறது மற்றும் உறுப்பினர்கள் அதை வலைத்தளத்தில் விவாதிக்க வழி செய்கிறது. டேவிட் கப்போலா (Davide Coppola) எவ்வாறு பங்களிப்பது என்பதை படிப்படியாக இந்தப் பயிற்சியில் விளக்குகிறார்.  நீங்கள் பங்களிக்க விரும்பும் திட்டத்தை தேர்வு செய்யவும் புதிய பங்களிப்பாளர்களை திட்டத்தில் சேர ஊக்குவிக்க சில நேரங்களில் திட்ட பராமரிப்பாளர்கள்… Read More »

ஐக்கிய நாடுகள் திறந்த மூலக் கருவி போட்டியில் இந்தியர் முதல் பரிசு

ஐ.நா. பொதுச்சபை தீர்மானங்களை பயனர்கள் எளிதாகத் தேடிப் பார்க்கவும் உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் வகைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கூடிய ஒரு திறந்த மூலக் கருவியை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் ஒரு இந்திய மென்பொருள் பொறியாளர் முதல் பரிசு வென்றுள்ளார். ஒரு தொழில்முனைவரான அப்துல்காதிர் ராஷிக் (Abdulqadir Rashik) உருவாக்கிய ‘உலகளாவிய கொள்கை (Global Policy)’ என்ற திறந்த மூலக் கருவியின்  முன்மாதிரி பொது மக்கள், ஐக்கிய நாடுகள் துறைகள் மற்றும் உறுப்பு நாடுகளுடன் பகிரப்படும். இது… Read More »

ஆண்ட்ராய்டு செயலி கற்க வேண்டுமா? அற்புதமான திறந்த மூல நிரல்களின் இணைப்புகள் இங்கே

ஆண்ட்ராய்டு செயலி எழுதுவது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கேள்வி பதில்கள் படிக்கலாம். ஆனால் ஒரு செயலியை உங்கள் திறன்பேசியில் ஓட்டிப் பார்த்து உடன் அந்த செயலியின் மூல நிரலையும் படித்துப் பார்ப்பது போன்ற கற்றல் அனுபவம் வேறெதிலும் வராது. இந்தக் கட்டுரையில் ஆண்ட்ராய்டு நிரலாளர் அரித்ரா ராய் (Aritra Roy) இருபதுக்கும் மேற்பட்ட திறந்த மூல ஆண்ட்ராய்டு செயலிகளைத் தேர்ந்தெடுத்து திறனாய்வு செய்திருக்கிறார். அவற்றின் கடினத்தையும்… Read More »

கூகிள் திறந்த மூலமாக வெளியிட்ட குறியாக்கியை வைத்து உங்கள் இணையதளத்தில் படங்களை சுருக்கலாம்

நீங்கள் சமீபத்தில் JPEG படங்களை மேலும் திறம்பட சுருக்குவதற்கான குறியாக்கியை (encoder) கூகிள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிட்டதைப் பற்றிய செய்தியைப் படித்திருக்கக் கூடும். அதை உங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தினால் சேமிப்பிடம் மற்றும் பட்டையகலத்துக்காகும் (bandwidth) செலவைக் குறைக்கலாம். பயனர்களும் பக்கங்களை விரைவில் பார்க்க இயலும். ஆனால் பயன்படுத்துவது எப்படி? பிரச்சினைகள் ஏதாவது வருமா? உமேஷ் குமார் எழுதிய இந்தக் கட்டுரையில் உபுண்டு-வில் நிறுவுவது எப்படி என்று விவரமாக செய்படிகள் தருகிறார். மூன்று பிரச்சினைகளை விவரிக்கிறார்: ஒளிபுகு… Read More »