Category Archives: Java

இலவச இணைய வழி Advanced ஜாவா பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து இணையவழியே இலவச advanced ஜாவா பயிற்சிகளை முன்னெடுக்கின்றன. இப்பயிற்சியில் ஜாவாவின் புதிய கூறுகளை(Features)ப் பயிற்றுவிக்க உள்ளார்கள். பயிற்சி வரும் வியாழன் அன்று இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் இப்பயிற்சி இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இங்கே பதிந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கெடுக்க விரும்புவோர்க்கு ஜாவா நிரல் அடிப்படைகள் தெரிந்திருப்பது கட்டாயம். பயிற்சி நேரம்: காலை 7 மணி இந்திய நேரம். பயிற்றுநர்:… Read More »

ஜாவாஎனும் கணினிமொழியின் நேர்காணலிற்கான கேள்விகளும் நிரலாக்க பயிற்சிகளும்

ஜாவாமேம்படுத்துநர் பதவிக்கான நேர்காணலின் போது மிகவும் கடினமான கேள்விகளால் எப்போதாவது தடுமாறினீர்களா? ஆம் எனில் இது நம்மில் பலருக்கும் நடக்கின்ற வழக்கமான செயலாகும். இரகசியம் என்னவென்றால், மிகவும் பொதுவான சில கேள்விகளுக்கு மட்டும் நாம் முன்னதாகவே அவை ஒவ்வொன்றிற்கும் பதிலுடன் தயாராக இருக்கின்றோம். ஆனால் நேர்காணல் செய்பவர்கள் மிகவும் பொதுவான சில கேள்விகள்மட்டுமல்லாமல் மிகவும் பரந்த தலைப்புகளுடன் தொடங்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்க, அந்த காரணத்திற்காக, இந்த பயிற்சி மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதிகளுக்கு செல்லும் முன்… Read More »

ஜாவாஉரைநிரல் மூலம் ஆவணங்களை மேம்படுத்திடுக

திறமூல மென்பொருள் செயல்திட்டங்கள் பெரும்பாலும் மிகவும் மாறுபட்ட பயனாளர்களின் குழுவைக் கொண்டுள்ளன. சில பயனர்கள் கணினியைப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிற்கு மட்டும் வழிகாட்டிடும் ஆவணங்கள் தேவைப் படலாம். இந்த திறன்மிகு பயனர்களுக்கு, அவ்வாறான ஆவணங்கள் நினைவூட்டல்கள் , குறிப்புகளாக மட்டுமே இருக்க வேண்டும், மேலும் உறைபொதியில்(shell) இயங்குவதற்கான கட்டளைகள் போன்ற கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களையும் சேர்க்கலாம். ஆனால் வேறுசில பயனர்கள் தொடக்க நிலையாளர்களாக இருக்கலாம். அதனால் இவ்வாறானப் பயனர்களுக்கு அமைவினை… Read More »

ஜாவா -2 இல் hashmapஎனும்வசதியைப் பயன்படுத்திகொள்க

ஜாவாவில் கட்டமைக்கப்பட்ட தரவைச் சேமிக்க hashmap ஆனதுஒரு பயனுள்ள வழியாகும். ஜாவா நிரலாக்க மொழியில், hashmap என்பது தொடர்புடைய மதிப்புகளின் பட்டியலாகும். தரவுகளைச் சேமிக்க ஜாவா ஆனது hashmapsஐ பயன்படுத்தி கொள்கிறது. நாம் நிறைய கட்டமைக்கப்பட்ட தரவுகளை வைத்தி ருந்தால், இதன்மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு மீட்டெடுப்பு வழிமுறைகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கின்ற. இந்த hashmapஐ உருவாக்கிடுக அதாவது இந்த hashmapஇன் இனத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் ஜாவாவில் hashmapஐ உருவாக்கிடுக. இந்த hashmapஐ உருவாக்கும்போது,… Read More »

ஜாவா எனும் கணினிமொழி வழக்கொழி்ந்துவிட்டதா?

ஏறத்தாழ20 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி நிரலாளர்களால் மிக அத்தியாவ சியமான கணினி மொழிகளில் ஒன்றாக ஜாவா எனும் கணினிமொழியானது பயன் படுத்தி கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கணினி மொழியானது தொழில்துறை முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுவருகிறது மிகமுக்கியமாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான கணினி அறிவியல் படிப்புகளில் பாடத்திட்டத்தின் கட்டாயப் பகுதியாகஇந்த ஜாவா எனும் கணினிமொழி இருந்து வருகின்றது. ஆனால் தற்போது பல மேம்படுத்துநர்கள் இதை ஒரு மிகவும் வயதானதும் மிகப்பழமையானதுமான நிரலாக்க மொழியாகப் பார்க்கத் தொடங்கி யுள்ளனர்,… Read More »

நடப்பு2021 ஆண்டில் ஜாவா எனும் கணினிமொழியை கற்பதற்கான காரணங்கள்

காரணம்.1.குறிமுறைவரிகளை ஒரு முறை மட்டும்எழுதுக, எல்லா இடங்களிலும் செயல்படுத்தி பயன்பெறுக பொதுவாக கணினிமொழிகளில் எழுதப்படுகின்ற குறிமுறைவரிகள் ஆச்சரியப்படத்தக்கதாக அமைந்திருக்கின்றன, ஆயினும்  அவை குறிப்பிட்ட  இயக்கமுறைமைக்கும்(OS) , கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு பொருத்தமாக இல்லையெனில் நமக்கு ஏமாற்றமளிக்ககூடியதாக மாறிவிடுகின்றன  .மேலும்  அவ்வாறான குறிமுறைவரிகள் ஒரு மனிதனால் படிக்ககூடிய நிரலாக்க மொழியிலிருந்து இயந்திர மொழியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு  தொகுக்கப்படுகின்றன, இவை ஒரு CPU க்கு பதிலளிக்ககூடிய வகையில்  வடிவமைக்கப்பட்டு  பெறப்பட்ட இருமநிலை அறிவுறுத்தல்களின் தொடர்களாகஇருக்கின்றன. மேம்பட்ட கணினிகளின் உலகில் இது கமுக்கமானதாக… Read More »

ஜாவாவுடன் தரவுகளைஉள்ளிடுதலும் வெளியிடுதலும்

இந்த கட்டுரையில் ஜாவா எனும் கணினிமொழியானது தரவுகளை எவ்வாறுபடிப்பதையும் எழுதுவதையும் கையாளுகின்றது என்பதை அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக எந்தவொரு நிரலாளரும் தாம் உருவாக்கிடுகின்ற எந்தவொருபுதியபயன்பாட்டிற்கான நிரலாக்கத்தினை எழுதும்போதும், அந்த பயன்பாடானது பயனாளரின் கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புகளிலிருந்து தரவுகளை எவ்வாறு படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் செயல்படச்செய்யவேண்டும் என்பதே அடிப்படை தேவையாகும். உள்ளமைவு விருப்பங்களை பதிவேற்ற அல்லது சேமிக்க விரும்பும் சூழ்நிலைகளில் இது பொதுவான செயலாகும், ஆயினும் தரவுகளை பதிவுசெய்திடும் கோப்புகளை உருவாக்குதல் அல்லது பின்னர் பயனாளர் ஒருவர் தாம் செய்த… Read More »

பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதாகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத் தேர்வு செய்ய முடியும். அதனால் ஒருவர் கணினிமொழியின் நிரலாக்கத்திற்குள் குதிப்பதற்கு முன், தன்னுடைய தேவைக்கு பொருத்தமான நிரலாக்க மொழியை புத்திசாலித்தனமாக… Read More »

அனைவருக்குமான ஜாவா பதிப்பாளர் (பதிப்பு 2.9)

EJE எனும் சுருக்கமானபெயரால் அழைக்கபெறும் அனைவருக்குமான ஜாவா பதிப்பாளாரானது(Everyone’s Java Editor) ஒரு எளிய ஜாவா எனும் கணினிமொழியின் பதிப்பாளராகும், இது புதியவர்கள் எவரும் மிகவும் சிக்கலான பல்வேறு மேம்பாட்டுக் கருவிகள் எதையும் கற்றுக்கொள்ளாமலேயே எளிதாக , ஜாவாஎனும் கணினிமொழியைக் கற்றுக்கொள்ள உதவிடும் மிகவும் எளிமையான மிகச்சரியானகருவியாகும். இந்த EJE என்பது பல தளங்கள் (ஜாவாவில் எழுதப் பட்டுள்ளது), குறைந்த எடை, பயனாளர் நட்பு என்பன போன்ற பல்வேறு பயனுள்ள அடிப்படை வசதி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. நம்முடைய… Read More »

கோட்லினிற்கும் ஜாவாவிற்கும் என்ன வேறுபாடு?

தற்போதைய கைபேசி சந்தையில் 74% ஆண்ட்ராய்டு சாதனமாகும். எனவே, நல்ல ஆண்ட்ராய்டு பயன்பாடு மேம்படுத்துநர்களின் தேவையானது தற்போது மேலும் மேலும் அதிகரித்து கொண்டேவருகின்றது. அதனால், ஆண்ட்ராய்டு பன்பாடுகளின் மேம்பாட்டிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ கணினிமொழியாக கோட்லின் என்பது கோளோச்சுகின்றது, இந்த தகவலை கூகுள் நிறுவனமானது கடந்த 7 மே 2019 அன்று அறிவித்தது. இந்த கோட்லின்ஆனது ஒரு வலுவான நிலையான நிரலாக்க மொழியாகும். இது JetBrains எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது ஜாவா மெய்நிகர் இயந்திரம் சார்ந்த மொழியாகும்.… Read More »