Category Archives: scrum

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 5: ஆவணங்களைக் குறைத்து மென்பொருளை தேவைக்குத் தக அமைப்பதை எளிதாக்குங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 5 ஒருவேளை நீங்கள் அரசியல் கட்சிகள் மட்டும்தான் கொள்கை விளக்க அறிக்கைகளை தேர்தல் நேரத்தில் வெளியிடுவார்கள் என்று நினைத்தீர்களா என்ன? 2001-ம் ஆண்டு குளிர்காலத்தில் யூடா மாகாணத்தின் ஸ்னோபேர்ட் பனிச்சறுக்கு மையத்தில் 17 மென்பொருள் உருவாக்குபவர்கள் கூடினர். இவர்கள் யாவரும் வெவ்வேறு மென்பொருள் செயல்முறைகளை (Extreme Programming or XP, Scrum, DSDM, Adaptive Software Development, Crystal, Feature-Driven Development, Pragmatic Programming, and others) உருவாக்கி ஊக்குவித்து… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 4: திட்டம் 40% முடிந்தும் நிரல் ஒரு வரி கூட இல்லை ஆனால் ஆவணங்களோ ஒரு அடுக்கு!

  Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 4   நான் அப்போது அமெரிக்காவில் ஒரு மத்திய அரசாங்கத் துறையில் ஆலோசகராக இருந்தேன். கூடிப்பேச சென்றிருந்த திட்ட இயக்குனர் அப்பொழுதுதான் திரும்பி வந்திருந்தார், அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நடந்தது பற்றி யாரிடமாவது சொல்லா விட்டால் மண்டை வெடித்து விடும் நிலையில் இருந்தார். ஒப்பந்தக்காரர்கள் உருவாக்கிய மென்பொருளைக் காட்டி, விளக்கி, கொண்டு சேர்க்க வந்திருந்தனராம். ஒப்பந்தத்திலுள்ள தேவைப் பட்டியல்படி மூன்று ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து உருவாக்கியதென்று கூறினார்களாம்.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 3: எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 3   என் தந்தை ஒரு நெற்பயிர் விவசாயி. ஏதாவது முழுப் பரிமாணம் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, “எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல” என்று உபமானம் கூறுவார். பெரும்பாலான மென்பொருள் மதிப்பீடும், பேரப் பேச்சும் எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போலத்தான் நடக்கிறது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் அந்த திட்டத்தை மதிப்பீடு செய்தால்தான் நீங்கள் ஒரு விலை சொல்ல முடியும்.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 2: மென்பொருள் தேவைகள் தெரிவது என்பது மூடுபனியில் நடப்பது போன்றது!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 2   பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்கும் திட்டத்தில் பின்வரும் முக்கிய கட்டங்கள் உண்டு: தேவைப்பட்டியல் திரட்டுதல் வடிவமைத்தல் நிரலாக்கல் சோதித்தல் நிறுவுதல்   மென்பொருள் திட்டங்களில் பிரச்சினை முதல் கட்டத்திலேயே தொடங்குகிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி இதற்கு முற்றிலும் பொருந்தும்.   கணினி தகவல் அமைப்புகள் இதழில் வெளியான ஆராய்ச்சியின்படி 90% பெரிய மென்பொருள் திட்டங்களில் தோல்விக்கு மூலகாரணம் மோசமான தேவைகள் பட்டியல் திரட்டுதல்தான்.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 1: மென்பொருள் திட்டங்கள் பாதிக்கு மேல் படுதோல்வி அடைகின்றன!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 1 நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் வந்த பிரச்சினைகள் பற்றி செய்திகள் பார்த்திருக்கக்கூடும். இத்திட்டத்தின்படி அமெரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் HealthCare.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனியார் மருத்துவக் காப்பீடுகளை ஒப்பிட்டு, தேர்வுசெய்து வாங்கவும் மற்றும் அதற்கான அரசாங்க மானியம் பெறவும் இயலும். இந்த திட்டத்துக்கு ஆன மொத்த செலவு ரூபாய் 10,000 கோடி.   பிரச்சினைகள்… Read More »