Category Archives: tamil software

அவலோகிதம்: புதிய வசதிகளுடன் புதிய வடிவில்

வணக்கம். www.avalokitam.com அவலோகிதம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், அம்மென்பொருள் பலகாலமாக மேம்படுத்தப்படாமல் இருந்தது. உதாரணமாக, கையடக்கப்பேசிக்கு உகந்ததாக இல்லை. இதை தீர்க்கும் பொருட்டு பல புதிய வசதிகளுடன் தற்காலத்திற்கு ஏற்றார்ப்போல் அவலோகிதம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கம் போல, செய்யுளை உள்ளிட்டால் பாவகையை கண்டுகொள்ள முயன்று அதனுடன் யாப்புறுப்புக்களை காட்டும். ஆனால், இப்போது நீங்கள் எழுத எழுத தானாக உடனடியாக பகுப்பாய்வினை காட்டிவிடும். எந்த பொத்தானையும் அழுத்தத் தேவையில்லை.  அதைவிட, எந்தப்பா பொருந்துகிறது என்று மட்டுமில்லாமல்… Read More »

சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் – தமிழ் இணைய மாநாடு 2019 உரை – காணொளி

Algorithms for certain classes of tamil spelling correction   சொற்பிழைத்திருத்தி – சில வழிகள் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழ் இணைய மாநாடு 2019 ல் நிகழ்த்திய உரை.   ஆய்வுக் கட்டுரை இங்கே – Click to access algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-final.pdf   உரையின் போது பயன்படுத்திய வழங்கல் – www.slideshare.net/tshrinivasan/algorithms-for-certain-classes-of-tamil-spelling-correction-174649552 Open-Tamil திட்டப் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் !   நிகழ்வின் அனைத்து காணொளிகளைகளையும் இங்கே காணலாம் liveibc.com/tic2019/

தமிழின் அனைத்து பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம்

வணக்கம், சொற்பிழைத்திருத்தி, இலக்கணப் பிழைத்திருத்தி, வேர்ச்சொல் காணல் போன்ற பலவகை இயல்மொழி ஆய்வுகளுக்கு அடிப்படையான தேவையாக இருப்பது பெயர்ச்சொற்கள் தொகுப்பு. தமிழில் அனைத்து பெயர்ச்சொற்களையும் ஓரிடத்தில் தொகுத்தல் மிகவும் பயன்தரும். இதுவரை தமிழின் பெயர்ச்சொற்கள் பொதுப் பயன்பாட்டு உரிமையில் எங்கும் பகிரப்படவில்லை. ஆங்காங்கே சில தனியுரிம தொகுப்புகள் மட்டுமே உண்டு. எனவே பெயர்ச்சொற்களைத் தொகுப்பதை செய்ய வேண்டிய பெரும் தேவை உள்ளது. github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/18 இங்கு ஏற்கெனவே கிடைக்கும் பெயர்ச்சொற்களின் இணைப்புகளை எழுதி வருகிறோம். அங்குள்ள பெயர்களை எடுத்து… Read More »

இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றி – வெளியீடு

  வணக்கம். இன்று tts.kaniyam.com என்ற இணைய வழி தமிழ் உரை ஒலி மாற்றியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூலநிரல் – github.com/KaniyamFoundation/tts-web Ubuntu/Linux, Python, Django, Celery, MySQL, ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்டது. அறிமுகம் இந்த மென்பொருள் உங்கள் தமிழ் உரைக்கோப்புகளை (text file) ஒலிக்கோப்புகளாக (MP3) மாற்ற உதவுகிறது. (TTS Text-To-Speech) எப்படி மாற்றுவது? இதில், நீங்கள் ஒரு கணக்கு உருவாக்கவும். tts.kaniyam.com/signup/ உங்கள் மின்னஞ்சலுக்கு, புது கணக்கை… Read More »

எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்

எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதை ஒரு கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டார். அதைக்கண்ட பல கட்டற்ற மென்பொருள் நிரலாளர்கள், இணைந்து பங்களிக்கத்… Read More »

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல் நிலையே. இதுவே எழுத்துணரி (OCR), பேச்சு உணரி (Speech to Text), எழுத்து ஒலி மாற்றம் (Text to Speech),… Read More »

தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் பட்டியல்

தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின் ஒரு பட்டியல் இது. முழு விவரங்கள் இங்கே. tshrinivasan.blogspot.in/2014/06/blog-post.html இவற்றை உருவாக்க மென்பொருளாளர்களை அழைக்கிறோம்.   உங்கள் விருப்பங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அல்லது tshrinivasan@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.   நன்றி   எழுத்துரு மாற்றம் 25 வகையான தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(unicode) மாற்றும் நிரல் இங்கே உள்ளது. இது python ல் எழுதப் பட்டது. tuxcoder.wordpress.com/2014/08/15/release-txt2unicode-converter-v4-0-velli/ github.com/arulalant/txt2unicode github.com/arcturusannamalai/open-tamil   1. எழுத்துரு மாற்றம் – இணையப் பயன்பாடு மேற்கண்ட… Read More »