தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 24. இயல்மொழி ஆய்வு கருவித் தொடரி
இயல்மொழி ஆய்வில் எந்தவொரு வேலையை நிறைவேற்றவும் பல பணிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும். எந்தவொரு சிறிய வேலைக்குக் கூட பெரும்பாலும் கீழ்க்கண்ட பணிகள் இன்றியமையாதவை: வாக்கியங்களைப் பிரித்தல் சொற்களைப் (நிறுத்தற் குறிகளையும் சேர்த்து) பிரித்தல் சொல்வகைக் குறியீடு செய்தல் அடிச்சொல்லையோ, தண்டுச்சொல்லையோ பிரித்தெடுத்தல் இதன் பின்னர், தேவையைப் பொருத்து, சார்புநிலைப் பிரிப்பியை வைத்து கிளைப்பட வங்கிகளாகவோ அல்லது சொற்பகுப்பியல் ஆய்வியை வைத்து உருபன்களாகவோ பிரிப்போம். ஆக, குறைந்த பட்சம் ஐந்தாறு பணிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்படுத்துவோம்.… Read More »