தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா?
ஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா? ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த உயர் கல்விக்கும் அத்தியாவசியம் என்றாகி விட்டது. நிரலாளர் அல்லாத ஆற்றல் மிக்க பயனர்கள் ஒரு வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய… Read More »