செயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1
இதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன் அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம் நினைத்ததைவிட கடினமானதாகவே இருந்தது. மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அக்கம்பக்கத்து தெருக்களில் சுற்றித்திரிந்து பழகுகிறோம். பலமுறை விழுந்தெழுந்து, முட்டிமோதி சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டுவிட்டோம்.… Read More »