Category Archives: videos

இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் – காணொளி

  இயந்திர வழிக் கற்றல் – ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கணியம் இதழில் எழுதும் கட்டுரைத்தொகுப்பின் அறிமுகக் காணொளி இது. இம்முறை வெளிப்புறப் படப்பிடிப்பை முயற்சி செய்துள்ளோம். ஒலி சில இடங்களில் குறையலாம். அடுத்த முறை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முயல்வோம். இதற்கான ஒலி வாங்கி கருவிகள் பற்றிய பரிந்துரைகள் இருந்தால் இங்கே பதிலுரையில் எழுதுங்கள்.   மிக்க நன்றி.   து. நித்யா

ஆதாரமா? சேதாரமா? நிகழ்ச்சி – FSFTN உறுப்பினர்களின் கருத்து – காணொளி

தந்தி தொலைக்காட்சியின் “ஆதாரமா? சேதாரமா?” நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஆதார் அட்டையின் பிரச்சனைகளையும், அதன் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் எடுத்துரைத்தனர். #FSFTN #ThanthiTV #Media #AadhaarFails #News #… -https://peertube.mastodon.host/videos/watch/1357e9ea-5108-4163-a98e-ee6693895d87

கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி

OpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும்.  OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற உரிமத்துடனே வழங்கப் படுவதால், வணிக ரீதியான செயலிகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். புதுவையைச் சேர்ந்த நண்பர் பிரசன்னா, ( prasmailme@gmail.com )… Read More: கட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி »

நிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்

ElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே.   உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/     நீங்களும்  இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.