தற்போது புதியதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ChatGPTக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. நாம் இதனிடம் எந்த கேள்வியை கேட்டாலும் உடனடியாக இது அதற்கான பதிலைஒரு திரைகாட்சியாக அளிக்கின்ற திறன்மிக்கது. அதாவது இதனுடைய பதிலானது உரை வடிவில் மட்டுமே திரையில் காட்சியாக வருகிறது. Siri போன்ற குரல் உதவியாளரிடம் பேசுவது போன்று, இதனுடன் உரையாடல் செய்வதற்காக நாம் என்ன செய்வது?
AI இன் உலகில் ChatGPT ஆனது ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது இரகசியமன்று. ஆயினும் இது மற்ற AI போட்களைப் (bots) போன்றில்லாமல், இது உரையாடலின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும் திறன் கொண்டது, மேலும் நாம் அரட்டையடிப்பது ஒரு இயந்திரத்துடன் அன்று ,அதற்கு பதிலாக வழக்கமாக ஒரு உயிருள்ள மனிதனுடன் அரட்டை யடிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது, .
ஆனால் இது இன்னும் ஒரு வகையான chatbot என்பதால், நாம் ஏதேனும் ஒரு கேள்வியை தட்டச்சு செய்ய வேண்டும் உடன் அந்த கேள்விக்கான பதில் உரை வடிவில் கிடைக்கின்றது. ஆயினும் இது ஒரு bot உடன் பேசுவது போன்று உற்சாகமூட்டுவதாக இல்லை.
இந்த எண்ணம் எனக்கு ChatGPT ஐ நிரலாக்க கருத்தினை அளித்தது, இதனால் VoiceGPT எனப்படும் குரல் உதவியாளராகப் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்துகொண்டு. குரலை அடையாளம் காண இயற்கை மொழி செயலாக்கத்தை (NLP) பயன்படுத்தத் தொடங்கினேன், பின்னர் API ஐப் பயன்படுத்தி ஒரு வினவலாக அங்கீகரிக்கப்பட்ட குரலை ChatGPT எனும்பொறிக்கு மாற்றினேன். தொடர்ந்து ChatGPT இலிருந்து அறிவார்ந்த பதிலைப் பெற்ற பிறகு, அதை மனிதக் குரலாக மாற்ற மீண்டும் NLP ஐப் பயன்படுத்தினேன்.
அதற்காக எனக்கு ஒரு நல்ல NLP கருவியும் தானே ஒன்றை வழங்குகின்ற OpenAI ஐயும் தேவைப்பட்டன, அதாவது இதற்காக Whisper தேவையாகும். ஆனால் குறைந்த நேரம் ,இடம் ஆகியவற்றின் காரணமாக, நான் Googleஇன் இயற்கை மொழியான API ஐப் பயன்படுத்தினேன்.
VoiceGPT ஐ உருவாக்குவதற்கான படிப்படியான வழிகாட்டி
ttX சேவைக்கான NLPயை ChatGPT உடன் இணைப்பதன் மூலம் நாம் இதனை தொடங்க வேண்டும். இதற்கான திறமூல APIஐ இயக்கிடுவதற்காகஒரு பொறி தேவையாகும், அதனால் முதலில் NLP இலிருந்து சேகரிக்கப்பட்ட வினவலை மாற்றிடுக, பின்னர்ChatGPT அளித்த பதிலை NLPஐப் பயன்படுத்தி மனிதக் குரலில் மீண்டும் செயலாக்கிடுக .
இதற்காக நாம் எந்தவொரு மடிக்கணினியையும் பயன்படுத்திகொள்ளலாம்,
ஆனால் இதையெல்லாம் இயக்க நான் ராஸ்பெர்ரி பையைத் தேர்ந்தெடுத்தேன். அங்கீகாரத்திற்காக குரலைப் பிடிக்க, நான் குரல் bonnetஐ இணைத்தேன்; ராஸ்பெர்ரி பை உடன் USB மைக்ரோஃபோனையும் பயன்படுத்தலாம். இருப்பினும், VoiceGPT குறிமுறைவரிகளை இயக்க மடிக்கணினியைப் பயன்படுத்தினால், USB மைக்ரோஃபோன் தேவையில்லை;நாம் மடிக்கணினியின் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைப் பயன்படுத்திகொள்ளலாம்.
நாம் இப்போது ஒரு கணக்கை உருவாக்கி ChatGPT இல் உள்நுழைய வேண்டும்
(படம் 2).
அடுத்து, படம் 3 இல் காட்டப்பட்டுள்ளபடி, ChatGPT குறிமுறைவரிகளைக் கொண்டு ஆய்வு செய்வதற்கும் பரிசோதனை செய்வதற்கும் API விசையைப் பெற வேண்டும்.
படம் 3
OpenAI கணக்கில் APIக்கான வலதுபக்க மூலையிலுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி API விசையை உருவாக்கலாம் (படம் 4).
படம் 4
OpenAI இல்API விசையை உருவாக்கிய பிறகு, அதை நகலெடுத்து சேமித்திடுக. VoiceGPTயை உருவாக்குவதற்கான நமது குறிமுறைவரிகளில் இது பின்னர் தேவைப்படும்.
படம் 5
இப்போது நாம் VoiceGPT ஐ இயக்கப் போகும் கணினியில் திறமூலAI ஐ நிறுவுகை செய்திட வேண்டும். இங்கு நாம் எந்த லினக்ஸ் பதிப்பையும் நிறுவுகை செய்தகணினியைப் பயன்படுத்திகொள்ளலாம். நான் ராஸ்பெர்ரி பை பயன்படுத்தினேன்.
படம் 6
அடுத்து, முனைமத்தினை திறந்து, இயற்கை மொழி செயலாக்கத்தில் நமக்கு உதவும் திறமூலAI , பிற பைதான் கூறுகளை (modules) நிறுவுகைசெய்திடுக. இங்கு நாம் OpenAI அல்லது வேறு ஏதேனும் NLP தொகுதியிலிருந்து விஸ்பரைப் பயன்படுத்தலாம். நான் Google NLP ஐப் பயன்படுத்தினேன், அதை ChatGPT உடன் இணைத்தேன்.
பின்வரும் கட்டளைவரிகளைப் பயன்படுத்தி இந்த கூறுகளை(modules) நிறுவுகை செய்திடலாம். அதன் பிறகு, OpenAI இல் நம்முடைய திறமூல விருப்பப் பேசும் உள்ளடக்கத்தை உருவாக்கலாம் அல்லது எளிய அரட்டையைப் பயன் படுத்திகொள்ளலாம். இங்கே, VoiceGPT உதவியாளருக்கான வெப்பநிலை அதிர்வெண்ணையும் பிற அளவுருக்களையும் அமைக்கலாம்.
sudo pip3 install openai
sudo pip3 install SpeechRecognition
sudo pip3 install gTTS
OpenAI ChatGPT ஐ எவ்வாறு குளோன் செய்வது , அமைப்பைசரி செய்வது என்பதற்காக படங்கள் 5 , 6 ஆகியவற்றைப் பார்வையிடுக.
அடுத்து, படம் 7 இல் காட்டப்பட்டுள்ளபடி வெப்பநிலை, அலைவரிசை , அரட்டை மாதிரியை அமைத்திடுக.
ChatGPT ஆனது VoiceGPT ஆகப் பயன்படுத்தப்படும்
முதலில், OpenAI உடன் விளையாடவும் ChatGPT உடன் பரிசோதனையை மேற்கொள்ளவும் OpenAI பைதான் கூறின் (module)குறிமுறைவரிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து, NLPக்கான கூறுகளை (modules) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, NLP மாதிரியைப் பயன்படுத்தி மனிதக் குரலில் பதிலைச் செயலாக்கிய கோப்பை இயக்க pygameஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அடுத்து, நாம் ChatGPT மாதிரியை அமைக்க வேண்டும். இங்கே, Davinci, Ada, போன்ற மாதிரி பெயர்களில் இருந்து நாம் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு மாதிரிக்கும் அதன் சொந்த தொழில்நுட்பம் உள்ளது, மேலும் இந்த மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள்கூட அதற்கேற்ப மாறுபடும். ஆனால் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் மேம்படுத்துநர்கள் OpenAI ஐ உருவாக்கவும் பரிசோதனை செய்யவும் US$ 18 பெறுகிறார்கள்.
படம்7
அடுத்து, குறிமுறைவரிகளில் API ஐ அமைக்க வேண்டும். அதனுடன், வினவலைக் கையாளவும் அதிலிருந்து பதிலைப் பெறவும் ChatGPT உடன் இணைப்பதற்கான செயலியை உருவாக்கிடவேண்டும் அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு.
import speech_recognition as sr
import math
import time
import serial
from espeak import espeak
import sys
import openai
import pygame
from gtts import gTTS
pygame.mixer.init()
#model_to_use=”text-davinci-003” # most capable
#model_to_use=”text-curie-001”
#model_to_use=”text-babbage-001”
model_to_use=”text-ada-001” # lowest token cost
r = sr.Recognizer()
openai.api_key=”******Your Key Here*******”
def chatGPT(query):
response = openai. Completion.create(
model-model_to_use,
prompt=query,
temperature=0,
max_tokens 1000
)
return str.strip(response[‘choices’][0][‘text’]), response[‘usage’][‘total_tokens’]
அதன் பிறகு, நாம் முக்கிய செயலியை உருவாக்கி, சிறிய நேர வளையத்தை உருவாக்கிடுவோம். இங்கே, தொடர்ந்து குரலைப் பிடிக்க NLP ஐப் பயன்படுத்தி கொள்கிறோம், மேலும் NLP மாதிரியைப் பயன்படுத்தி நாம் மேலே கூறியதைப் பிரித்தெடுத்து அதை வினவலாகச் சேமித்திடுக. பின்னர் இந்த வினவலை ChatGPTக்கு மாற்றி அதிலிருந்து பதிலைப் பெற்றிடுக அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு.
def main():
print(‘LED is ON while button is pressed (Ctrl-C for exit).’)
while True:
with sr.Microphone() as source:
r.adjust_for_ambient_noise (source)
print(“Say something!”)
audio r.listen(source)
print(“Recognizing Now….”)
command=str(r.recognize_google (audio))
print(“Google Speech Recognition thinks you said + command)
query=command
(res, usage) = chatGPT (query)
print(res)
tts gTTS(text=res, lang=’en’)
tts.save(“good.mp3”)
pygame.mixer.music.load(“good.mp3”)
pygame.mixer.music.play()
#espeak.synth(res)
if __name__ == ‘__main__’:
main()
இதற்குப் பிறகு, ChatGPT இலிருந்து பதிலை மனிதக் குரலாக மாற்ற NLP ஐப் பயன்படுத்திகொள்க, பின்னர் அந்தக் குரலை இயக்கிடுக. இந்த முழு செயலும் ஒரு சுழலில் தொடர்ந்து இயங்குகிறது, இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான உண்மையான உரையாடல் போன்று தோற்றமளிக்கிறது.
இந்த VoiceGPT மாதிரிகளைத் தனிப்பயனாக்குதலையும் , தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினையும் நமக்கு வழங்குகிறது. இது Ada, Davinci அல்லது Babbage போன்ற GPT மாதிரிகளில் இருந்து தேர்வு செய்ய நம்மை அனுமதிக்கிறது. இது Sphenix போன்ற இணையஇணைப்பில்லாது உரையாடல்-அங்கீகார சேவைகளுக்குத் தனிப்பயனாக்கக்கூடிய கட்டணமற்ற உரையாடல்-அங்கீகாரச் சேவையைப் பயன்படுத்திகொள்கிறது.
குரலின் GPT பரிசோதனை
VoiceGPT ஐச் பரிசோதிக்க, பைத்தானில் குறிமுறைவரிகளை இயக்கிடுக, அது நம்மிடம் கேள்வி கேட்க அல்லது உரையாடலைத் தொடங்கும். நாம் அதனிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்; அது நம்முடைய குரலை அடையாளம் கண்டு, வினவலை ChatGPTக்கு மாற்றி, பின்னர் மனிதக் குரலில் நமக்குப் பதிலளிக்கும்.
படம்8
Google Assistant, Alexa அல்லது Siri மூலம் பேசுவது போன்று இப்போது ChatGPT உடன் பேசலாம். VoiceGPT உடன் நம்முடைய உரையாடலை செய்து பயன்பெற்றிடுக!