சத்திரத்தான் 10,000 கட்டுரைகள் | விக்கிப்பீடியா நாயகர்கள்

By | June 22, 2025

தமிழ் விக்கிப்பீடியா வரலாற்றில் மற்றும் ஒரு சாதனையாக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்து இருக்கிறார், விக்கிப்பீடியா எழுத்தாளர் சத்திரத்தான் அவர்கள் .

உலக அளவில் தமிழின் பெருமையை கொண்டு செல்லும் நோக்கில், தன்னலம் கருதாத பல உள்ளங்கள் விக்கிபீடியா தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தகவல்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். திருத்திக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து சிறப்பித்து வந்திருக்கிறோம். திரு. பாலசுப்பிரமணியம், திரு.சத்திரத்தான், திரு.தாஹா புகாரி, எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, திரு.மூர்த்தி என பலர் குறித்தும் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

இந்த வரிசையில், திரு. மூர்த்தி அவர்கள் கடந்த வருடம் பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்திருந்தார். தற்போது, திரு.சத்திரத்தான் அவர்கள் பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். விக்கிபீடியா தளத்தில் பத்தாயிரம் கட்டுரைகள் எழுதுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. விக்கிப்பீடியா தளத்தில், ஒட்டுமொத்தமாக சுமார் ஒன்றரை லட்சம் கட்டுரைகள் வரை தமிழில் காணக் கிடைக்கின்றன. அவற்றின் தனிநபராக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்து விக்கிப்பீடியா நாயகராக உயர்ந்திருக்கிறார் சத்திரத்தான்.

அவர்களை பாராட்ட கீழிருக்கும் இணைப்பை பயன்படுத்துங்கள். Wikipedia சத்திரத்தான்

அன்னாரை கவுரவிப்பதில் கணியம் அறக்கட்டளை பெருமை கொள்கிறது. வாருங்கள்…… அனைவரும் சேர்ந்து விக்கிபீடியா எனும் கட்டற்ற கருவி கொண்டு தமிழின் பெருமைகளை மேலும் உலகறியச் செய்வோம்.

கட்டுரையாளர்:

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளம் அறிவியல் எழுத்தாளர்,

மின்மடல் : srikaleeswarar675@gmail.com

இணையம்: ssktamil.wordpress.com

Leave a Reply