தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா – 21 ஆகஸ்டு 2022 – அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்

image

 

முக்கியமான தலைவர்களின் படைப்புகளை அவர்களின் காலத்திற்கு பின்னர் நாட்டுடைமை ஆக்குவது – அதாவது பொதுவுடைமை ஆக்குவது – என்பது மிகவும் முக்கியமான செயல்.

அப்படியிருக்க, பொதுவுடைமை கட்சித் தோழர் ஜீவாவின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்.

ஆனால், அப்படி நாட்டுடைமையான பின்னரும் கூட ஜீவாவின் படைப்புகள் பெரிய அளவிலாக அச்சேற்றப்படவில்லை.

வரலாற்றில் ஆளும் வர்க்க கோட்பாடே ஆதிக்கம் செலுத்தும் என்று மார்க்ஸ் சொன்னதைப் போல, வரலாற்றினின்று ஜீவா எவ்வாறு மறைக்கப்பட்டாரோ அதேபோல் அவர் படைப்புகளும் மறைக்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காணும் முறையில் ஜீவாவின் நூல்களை மின்நூலாக்கம் செய்யும் பெரும் பணியை தாம்பரம் பகுதியை சேர்ந்த கணியம் அறக்கட்டளை செய்துள்ளனர்.

இதுவரை அவர்கள் வசம் கிடைத்த ஜீவாவின் ஆக்கங்களை மின்நூலாக்கியுள்ள அவர்கள் இன்னும் சில புத்தகங்களை தேடித் தொகுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

காண்க – jeeva.freetamilebooks.com/

தாம்பரம் அவ்வை நடுநிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கும் ஜீவா பிறந்தநாள் விழாவிற்கு அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

நாள் : 21.08.2022

நேரம் : காலை 10.00 – 12.30

இடம் : அவ்வை நடுநிலைப் பள்ளி, தாம்பரம்.

தோழர்களை அன்புடன் அழைக்கின்றோம்!

image

%d bloggers like this: