மொழிபெயர்ப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லேங்ஸ்கேப்(Langscape) நிறுவனம், பயிலகம், கணியம் ஆகியவற்றுடன் இணைந்து பைத்தான் ஜேங்கோ(DJango) பயிற்சிகளை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. பயிற்சி இணையவழி இரண்டு (கூடினால் மூன்று) வாரங்கள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள, பைத்தான் அடிப்படைகள் தெரிந்திருத்தல் கட்டாயம். ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரம் தவிர, ஓரிரு மணிநேரங்கள் பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.
பயிற்சி தொடங்கும் நாள்: பிப்ரவரி 11, 2021
நேரம்: பிற்பகல் 2 – 3.30 இந்திய நேரம்
பயிற்சியில் முன்பதிய: forms.gle/TN9kvfBNX18XwxxF7