மின்னுருவாக்கத்திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (DIGITAL) செய்யவேண்டுமா?

  • உலகில் பேசப்படும் மொழிகளில் மிகப்பழமையான மொழியாகிய தமிழ்மொழியின் ஆய்வாதாரவளங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்க, அவற்றை மின்னுருவாக்கம் செய்து ஆவணப்படுத்த தமிழ் இணையக்கல்விக்கழகம் முடிவுசெய்துள்ளது.
  • ஆய்வாதாரவளங்கள் என்பன அச்சுப்புத்தகங்கள், இதழ்கள், குறுவெளியிடுகள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், பழைய நாணயங்கள், செப்பேடுகள், புகைப்படங்கள், கல்வெட்டுக்கள், ஒலி-ஒளி ஆவணங்கள், தொல்லியல் சின்னங்கள் முதலியன மட்டுமின்றி இன்னபிறவும் ஆகும்.
  • பொதுமக்கள் மேற்கண்ட அரிய ஆய்வாதாரவளங்களை வைத்திருப்பின் அவற்றைப் பற்றிய தகவல்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குத் தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றது.
  • ஆய்வாதாரவளங்களை மின்னுருவாக்கம் செய்தபின்னர் அவர்களிடமே அவை ஒப்படைக்கப்படும்.
  • பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், ஆதினங்கள், மடங்கள், பொதுமன்றங்கள், சங்கங்கள், திருக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் இன்னபிற இடங்களிலும் உள்ள மேற்கண்ட ஆய்வாதரவளங்களைப் பற்றிய தகவல்களைக் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கோ அல்லது ஆய்வுவளமையர்களின் செல்லிடப்பேசிக்கோ தகவல் அளிக்க விழைகின்றோம்.
  • ஆய்வாதாரவளங்களை அளிக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயர் நன்றியறிதலுடன் அந்த ஆய்வாதாரத்தின் மின்னுருவாக்கத்தில் இடம்பெறும்.
  • அறிவை மக்களிடம் கொண்டுசெல்லும் செயல்பாட்டின் அங்கமாக மட்டுமின்றி அறிவைப் பொதுமக்கள் அனைவருக்கும் எவ்வித குறுக்கீடுமின்றி கிடைப்பதற்கு இத்திட்டம் வழிவகுக்கும். எனவே பொதுமக்களும் நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

தகவல் அளிக்கவேண்டிய அலைபேசி எண்கள்:

திரு.இரா.சித்தானை
ஆய்வுவளமையர்
அலைபேசி எண் : +919444443035

(அச்சுப்புத்தகம், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், அரியகாகிதச்சுவடிகள், ஒளி-ஒலி ஆவணங்கள்)

%d bloggers like this: