எளிய தமிழில் Car Electronics 20. பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

ஒருமித்த பழுது கண்டறியும் சேவைகள் (Unified Diagnostic Services – UDS) என்பது தானுந்துகளின் கட்டுப்பாட்டகங்களுக்கான (automotive ECU)  ISO 14229 என்ற பன்னாட்டுத் தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ள தொடர்பு நெறிமுறை ஆகும்.

Car-diagnostics-service-centre

பணிமனையில் பழுது கண்டறிந்து சரிசெய்தல்

முழுமையான பழுது கண்டறிதல்

நீங்கள் ஒரு பழைய கார் வாங்கப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாங்குவதற்கு முன்பு மேலோட்டமான ஆய்வு மூலம் அதன் செயல்பாட்டில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் கண்டறிய முடியாது. இம்மாதிரி வேலைகளுக்கு முழுமையான பழுது கண்டறிதல் தேவைப்படுகிறது. குறிப்பாக மின்னணு சாதனங்கள் பொருத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் இந்த நடைமுறை அவசியம். இதற்கு UDS பயன்படுகிறது.

UDS வைத்துத் தொலைநிலையாகப் பழுது கண்டறியும் செயல்முறைகளைத் தொடங்கவும் நிறுத்தவும் முடியும். பின்னர் இந்தச் செயல்முறைகளின் விளைவுகளையும் கேட்டுப் படிக்க முடியும். 

UDS எவ்வாறு OBD இலிருந்து மாறுபட்டது 

பொதுவாக உமிழ்வு கட்டுப்பாட்டில் OBD முக்கிய கவனம் செலுத்துகிறது, பழுது கண்டறியவும், ECU வில் உள்ள தரவுகளைப் படிப்பதற்கும், அமைவுகளை (settings) மாற்றி எழுதுவதற்குமான அணுகலில் UDS கவனம் செலுத்துகிறது.

மேலும் UDS சோதனை செய்யும் கருவிகள் கீழ்க்கண்ட நிலைகளில் மட்டுமே வேலை செய்ய முடியும். பற்றவைப்பு சுவிட்சைப் (ignition switch) போட வேண்டும். பொறி ஓடக்கூடாது. வண்டியும் ஓடாமல் நிற்க வேண்டும்.

ECU மென்பொருள் புதுப்பிப்பு

UDS நெறிமுறை ECU விலுள்ள மென்பொருள் புதுப்பிக்கும் செயல்பாட்டை ஆதரிக்கிறது. புதிய செயல்பாடுகளையும் தொகுதிகளையும் ECU வில் சேர்க்க இது அவசியம்.

UDS தகவல்களின் உள்ளடக்கம் தனியுரிமமாக உள்ளது

OBD தரநிலைப்படி பழுதுக் குறியீடு P0118 என்றால் பொறியின் வெப்ப ஆற்றி (Engine Coolant) சரியாக வேலை செய்யவில்லை என்று முன் கட்டுரையில் பார்த்தோம். எந்தக் கார் தயாரிப்பாளராக இருந்தாலும் இதேதான். ஆனால் UDS தகவல்களின் உள்ளடக்கம் தனியுரிமமாக உள்ளது. இது வாகன உற்பத்தியாளருக்கு மட்டுமே தெரியும்.

‘அடையாள எண் மூலம் தரவைப் படித்தல் (Read Data By Identifier)’ என்கிற சேவை மூலம் ECU விலிருந்து அளவுருத் தரவை எவ்வாறு கோருவது என்பதை UDS தரப்படுத்துகிறது. ஆனால் இன்ன பழுதுக் குறியீடு இருந்தால் இன்ன பழுது என்ற பட்டியலை இது குறிப்பிடவில்லை. இந்த வழியில் OBD இலிருந்து UDS வேறுபடுகிறது. 

 நன்றி

  1. Future of Diagnostics – KPIT

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஊர்தி இயங்குதளங்கள்

நிகழ் நேர இயங்கு தளம் (Real-time Operating System – RTOS). மொத்தைக் கருநிரலும் (monolithic kernel) நுண் கருநிரலும் (microkernel). பிளாக்பெரி கியூனிக்ஸ் (BlackBerry QNX). ஆன்டிராய்டு ஊர்தி இயங்குதளம் (Android Automotive OS – AAOS).

ashokramach@gmail.com

%d bloggers like this: