தமிழில் React – பயிலகம், கணியம் இணைந்து நடத்தும் இணையவழி இலவசப் பயிற்சி

பயிலகம், கணியம் இணைந்து React JS இலவச இணையவழிப் பயிற்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  வாரம் ஒரு வகுப்பு, ஒரு மணிநேரம் இவ்வகுப்பு நடத்தப்படும்.

பயிற்றுநர்: விஜயராகவன், பயிலகம்

நேரம்: ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி இந்திய நேரம்

பயிற்சியில் என்ன கற்றுக் கொடுக்கப்படும்?

HTML, CSS, JS அடிப்படைகளில் இருந்து React JS வரை கற்றுக் கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  கணினி அடிப்படைகள் தெரிந்த எவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கான முன்னேற்பாடு எதுவும் உண்டா?

பயிற்சி, லினக்ஸ் இயங்குதளத்தில் இருக்கும்.  எனவே, லினக்ஸ் நிறுவிய கணினி வைத்திருப்பது நலம்.

என்னிடம் லினக்ஸ் இல்லையே! என்ன செய்வது?

கவலை வேண்டாம்!  ஒரே ஒரு மணிநேர வேலை அது!  புதியவர்களுக்கு லினக்ஸ் மின்ட் நிறுவல் எளிதாக இருக்கும்.  அதில் சிக்கல் இருந்தால் forums.tamillinuxcommunity.org/ இல் கேட்டுக் கொள்ளலாம்.

எப்போது தொடங்கப் போகிறோம்?

வரும் சனிக்கிழமை [23.03.2024]யில் இருந்து.

எப்படிக் கலந்து கொள்வது?

கீழே உள்ள விண்ணப்பத்தில் உங்கள் தொடர்பு விவரங்களைப் பதிந்து வையுங்கள்.  வகுப்பு இணைப்புகள் பதிவோருக்குப் பகிரப்படும்.

டெலிகிராம் குழுவில் இணைய: t.me/+2Q_uTW7j9xtkMmVl

 

%d bloggers like this: