மென்பொருள் அறிஞர் திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் ‘தமிழ்ப்புலவர்‘ tamilpulavar.org/ எனும் மென்பொருள் தளத்தினை, தமிழ் உலகுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிக்கும் விழா, இசைப்புலவர் www.isaipulavar.in/ தளத்தின் மென்பொருள் தொடக்கவிழா , மற்றும் புத்தக வெளியீட்டுவிழா என அனைத்தும் ஒரே தமிழ்விழாவாக 10.01.2020 அன்று மாலை 04 .00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் நடந்தது.
நிகழ்வுக் குறிப்புகள் –
திரு இராமசாமி துரைப்பாண்டி அவர்களின் இசைப்புலவர் தளத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், இந்நாள் உலகத் தமிழ் இணையச் சங்கத்தின் தலைவருமான முனைவர்.ஐயா.திரு.பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.
அடுத்து, அன்னாரின் தமிழ்ப்புலவர் தளத்தின் மூலநிரல்கள் அனைத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக (open source) த.உதயச்சந்திரன் I.A.S (த.நா.தொல்லியல்துறை ஆணையர்) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து, திரு. ஆபிரஹாம்பண்டிதரின் பெயர்த்தி முனைவர்.திருமதி.அமுதாபாண்டியன் அவர்களின் “கருணாமிர்தசாகரம்” எனும் சுருக்கத் திரட்டு நூலினை இசைப்பேரறிஞர். முனைவர் அரிமளம் சு.பத்மநாபன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அந்நூலினைப் பெற்றுக்கொண்ட வணிக வரித்துறை இணை இயக்குனர் திரு.பா.தேவேந்திர பூபதி அவர்கள் சிறப்புரைஆற்றினார்.
தொடர்ந்து. அரிமளம் பத்மநாபன் ஐயா அவர்களுக்கு “தமிழிசைப் பேரறிஞர்” விருது வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஐயா. திரு.கணியன்பாலன் அவர்களின் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” எனும் புத்தகத்தினை திரு.கோ.பாலச்சந்திரன் I.A.S அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அதனைப் பெற்றுக்கொண்டு, தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.திரு.ஆழி செந்தில்நாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து திருப்பூர் சுகுணாதேவி அவர்களின் நன்றியுரையுடன் தமிழுக்கான தமிழ் விழா இனிதே நிறைவு பெற்றது.
நன்றி -திருப்பூர் சுகுணாதேவி –
இணைப்புகள் –
மூல நிரல் இணைப்புகள்
github.com/ramasamy-duraipandy/tamil-pulavar
github.com/ramasamy-duraipandy/tamil-unicode-fonts
எழுத்துருக்கள்
github.com/neechalkaran/neechalkaran.github.io/tree/master/tamilfonts/3ATM
oss.neechalkaran.com/tamilfonts