நிகழ்வுக் குறிப்புகள் – சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் கணியம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவில் உத்தமம் சார்பில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் மற்றும் மின்ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிதல் எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் கணியம் அறக்கட்டளை சார்பாக திரு. செல்வமுரளி அவர்கள் கலந்துகொண்டு, தமிழில் கட்டற்ற மென்பொருள், கட்டற்ற மென்பொருளின் வழியாக தமிழ் கணிமை வளர்ந்தது, பிரபலமான மென்பொருள்களை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தது, தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் மற்றும்
தமிழ்க் கணிமைக்காக பல ஆண்டுகளாக உழைத்து வரும் தமிழா குழுவின் செயல்பாடுகள், மொழிப் பயன்பாடுகள் , மொசில்லா பயன்பாடுகள், மற்றும் கணியம் அறக்கட்டளை செய்து வரும் தொழில்நுட்ப பணிகள், பேச்சிலிருந்து ஒலியாக்கம் மற்றும் உரையிலிருந்து பேச்சாக்கம் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும், அதை எப்படி ஒலிப் புத்தகமாக மாற்றுவது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

பார்வையாளர்கள் சிலர் எழுத்தில் இருந்து பேச்சாக்கம் செய்யும் முறையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும், கணியம் அறக்கட்டளைக்கு எப்படி பங்கேற்பது என்றும், தமிழ் இணையம் சார்ந்த சந்தேகங்களையும் கேட்டனர்.

 

செல்வமுரளி அவர்களுக்கும், விழாக்குழுவினருக்கும் நன்றிகள் !

 

நிகழ்வில் காட்டப்பட்ட படவில்லைகள் இங்கே.

%d bloggers like this: