சென்னை சாசென் மகளிர் கல்லூரியில் விக்கிப்பயிலரங்கு – நிகழ்வுக் குறிப்புகள்

சென்னை திநகர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி (Shri SS Shasun Jain College)தமிழ்த்துறையினர சார்பாக,அக்கல்லூரியின்110 மாணவிகளுக்கு, இரு அணியாகப் பிரித்து, இரண்டு நாட்கள் அணிக்கு 55 கல்லூரி மாணவிகளுக்கு, விக்கிமீடியத்திட்டங்கள் அறிமுகமும், விக்கிமூலப் பயிலரங்கும் 04.04.2022 முதல் 05.04.2022 வரை இனிதே நடந்தது.

 

உடன் ஒத்துழைக்கும், அக்கல்லூரி பேராசிரியைகள்

 

 

 

இப்பயிலரங்குக்கு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் இருந்து அருணும், மேலும், தமிழ் விக்கிமீடியர்களான தோழி சாலோம், யோசுவா, தகவலுழவனும் வந்திருந்த மாணவிகளுக்கு விளக்கமளித்து, விக்கிமூல நுட்பங்களை அறிமுகம் செய்தனர். இப்பயிலரங்கில் 1840 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஆங்கிலம், தமிழ் அகரமுதலி நூல் எடுத்துக்கொள்ளப்பட்டு ஏறத்தாழ முழுநூலம் பிழைத்திருத்தம் செய்து முடிக்கப்பட்டது. மாணவிகள் திரும்ப திரும்ப கற்கும் வகையில், நடத்தப்பட்ட நுட்பங்கள் படப்பதிவுகளாக விக்கிமூலத்திட்டப்பக்கத்தில் தரப்பட்டன. விரிவானச் செய்திகளை  விக்கிமூலம்:கல்லூரிகளுக்கான இணையவழிப் பயிலரங்கு-7  என்ற திட்டப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

%d bloggers like this: