F-droid என்றால் என்ன?

திறந்தநிலை பயன்பாடுகள் தொடர்பாக நான் கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததில் இருந்து, மிகவும் கவனித்த ஒரு விஷயம்! பொதுவாக கணிணிகளில் இயங்கக்கூடிய, திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பெரும்பாலும் கட்டுரைகளை பார்க்க முடியும்.

ஆனால், உண்மையில் நாம் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கூட ஒரு திறந்த நிலை தொழில்நுட்பம் தான்.

அதனால்தான், உலகம் எங்கும் இருக்கக்கூடிய எந்த ஒரு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். அதற்காக, அந்த நிறுவனங்கள் எந்தவித தொகையையும் செலுத்த வேண்டியது இருக்காது.

இருந்த போதிலும் google நிறுவனத்தின் கீழ் இயங்குவதால், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பெரும்பாலும் கூகுள் செயலிகளையே காண முடியும்.

இந்த கதைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் திறந்த நிலை பயன்பாடுகள் குறித்து பேசும்போது, அவற்றை தரவிறக்கம் செய்வதற்கு நமக்கு ஒரு கூகுள் பிளே ஸ்டோர் போன்ற ஆப் ஸ்டோர் தேவைப்படுகிறது.

அதற்காக இருக்கக்கூடிய சிறந்த தேர்வு தான் F-droid.

2010 ஆம் ஆண்டிலிருந்து கட்டற்ற திறந்த நிலை பயன்பாடுகளை, ஆண்ட்ராய்டுகாக வெளியிட்டு வரும் ஒரு ஆப் ஸ்டோர் தான் F-droid

சுமார் 3,800க்கும் அதிகமான செயலிகள் இங்கு காணப்படுகின்றன. கேட்பதற்கு மிகப்பெரிய எண்ணிக்கை போல தோன்றலாம். ஆனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கக்கூடிய செயல்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சத்திற்கு அதிகம்.

ஒப்பீட்டளவில் 3800 செயலிகள் என்பது குறைவாக தோன்றலாம். ஆனால், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அடிப்படை தேவையான செயல்கள் அனைத்தும் இங்கு உங்களுக்கு காண கிடைக்கும்.

மேலும், இங்கு உங்களுக்கு விளம்பரங்கள் கிடையாது.முழுக்க, முழுக்க செயலிகளின் கட்டற்ற நிரலாக்க குறியீடுகளை(open source code) உங்களால் பெற முடியும்.

இதைக் கொண்டு, செயலிகளை உங்களால் மேம்படுத்த முடியும். 

விக்கிபீடியா போன்ற செய்திகள் உங்களுக்கு கூகுள் பிளே ஸ்டோரிலும் காண கிடைக்கும். மேலும், F-droid ஸ்டோரிலும் காண கிடைக்கும்.

இத்தகைய ஒரு செய்தியை நீங்கள் நிறுவும்போது மீண்டும்,மீண்டும் தானாகவே ! தன்னை புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்கிறது F-droid.

மேலும், இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய செயலிகளில் பெரும்பாலும் கூகுள் பிளே ஸ்டோர் குறிக்கிடுவதில்லை.

ஆனால், இதில் சோகம் என்னவென்றால் உங்களால் google play store-ஐ கொண்டு f-droid ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது.

ஆனால், அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆனால், அதற்கு பின்புலம் அறியாத செய்திகளை நிறுவும் அமைப்பை(allowing unknown apk), உங்கள் மொபைல் போனில் நீங்கள் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்.

99% பாதுகாப்பான செயலிகளே F droid இல் காண கிடைக்கும்.

இருந்த போதிலும், 2021 ஆம் ஆண்டு குறிப்பிட்ட 30 செயலிகளில் வைரஸ் தாக்குதல்கள் இருந்ததாக f-droid கண்டறிந்திருந்தது.

நூற்றுக்கணக்கான,ஆயிரக்கணக்கான நிரல் ஆக்க கலைஞர்கள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி F droid க்கு பங்களிக்கிறார்கள்.

பெரும்பாலும், பைத்தான் மற்றும் ஜாவா நிரலாக்க மொழிகளில் வடிவமைக்கப்பட்ட செயலிகள் இங்கு காண கிடைக்கின்றன.

இனிமேலும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! இனிமேல் கணினி தேவையில்லை, உங்களுடைய சாதாரண ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கூட திறந்த நிலை அனுபவத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.

கீழே வழங்கப்பட்டுள்ள, அதிகாரப்பூர்வ இணையதளத்தின் இணைப்பை பயன்படுத்தி ஸ்டோரை இன்ஸ்டால் செய்யுங்கள்.

Official site : f-droid.org

மேற்படி, இந்த கட்டுரைகள் வழங்கப்பட்டுள்ள தகவல்களை விக்கிபீடியா மற்றும் f droid அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து சேகரித்திருக்கிறேன்.

Wikipedia article: en.wikipedia.org/wiki/F-Droid

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்பொழுது வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,

நாகர்கோவில் -02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

வலைதளம்: ssktamil.wordpress.com

%d bloggers like this: