பயர்பாக்ஸ் உலாவியில் வானிலை அறிவிப்பு

மோசில்லா(mozilla) நிறுவனம் தனது பயர்பாக்ஸ்(firefox) உலாவியில், பல சிறந்த மாறுதல்களை செய்து வருவதை நாம் அறிந்திருப்போம். அந்த வகையில் வானிலை தகவல்களை புதிய உலாவி(new tab)திரையில் காண்பதற்கான, புதிய தனிநபர் பயன்பாடை மோசில்லா(mozilla) ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய தாவலில்(new tab) முகப்பு படத்தை மாற்றுவதற்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும்,புதிய தாவல்(New tab)பக்கத்திலேயே, இனிமேல் உங்களால், வானிலை தொடர்பான தகவல்களையும் உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

பிரத்தியேகமான வானிலை இணையதளத்தை அணுகுவதே, செயலுக்கமான வழிமுறையாக இருந்தாலும், அனுதினமும் பலமுறை பார்க்கும்  புதிய தாவல்(new tab)திரையில் வானிலை தகவல்கள் இடம்பெறுவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

புதிய தாவலில்(new tab) வானிலையை அறிந்து கொள்ளும் வழிமுறை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்னும் முழுமையாக வரவில்லை. இருந்தபோதிலும், சில வழிமுறைகளின் மூலம், உங்களுடைய பயர் பாக்ஸ்(fire fox)பிரவுசரில் இதை பயன்படுத்த முடியும், அதற்கான வழிமுறைகளை காணலாம்.

ஆரம்ப நிலையில் உள்ள இந்த வானிலை சேவையை பெற, பயர்பாக்ஸின் பீட்டா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை.

சமீபத்திய மோசில்லா(mozilla) ஃபயர் ஃபாக்ஸ்(firefox) உலாவியில் 127 வது வெர்ஷனில்(127 version) பின்வருவனவற்றை செய்யுங்கள் .

1.புதிய தாவலில் about:config பகுதிக்கு செல்லவும்.
2. ‘எச்சரிக்கையை ஏற்று தொடரவும்'(accept risk and continue)

3.browser.newtabpage.activity-stream.system.showWeather என்பதை தேடவும்
4. மேற்கண்ட பகுதியை இரண்டு முறை கிளிக் செய்யவும்.

5. அவ்வளவுதான் மிகவும் எளிமையாக நிறுவி ஆகிவிட்டது.


இப்பொழுது, உங்களது புதிய தாவல் திரையின், வலது பக்க மூலையில், வானிலை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய நிரலை (widget ) பார்க்க முடியும்.

அதை கிளிக் செய்து, உங்களுக்கு ஏற்ற செல்சியஸ் பாகை(C°) அல்லது பேரன்ஹீட்(F) அளவீட்டில் வெப்பநிலையை அறிந்து கொள்ள முடியும்.

மேற்படி, இந்த வானிலை அறிவிப்பானது Accu weather இணையதளத்திலிருந்து பெறப்படுகிறது. மேலும்,அந்த நிரலை(widget) கிளிக் செய்யும்போது, உங்களை மேற்குறிப்பிட்ட வானிலை இணையதளத்திற்கு அழைத்து செல்கிறது.

ஆனால், இதில் குறிப்பிடப்படும் வானிலை தகவல்களின் துல்லியத்தன்மை கேள்விக்குரிய ஒன்றுதான். உங்கள் இடத்திற்கு ஏற்ப முடிவுகளில் துல்லியத்தன்மை மாறுபடலாம்.

மேலும், தானாகவே உங்கள் கணினி அல்லது மொபைலில் இருந்து, இருப்பிட தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது. இதனால் வானிலை வழங்கும் இடத்திற்கான தகவல்கள் தவறானதாக இருக்கலாம். குறிப்பாக, நீங்கள் விபிஎன்(VPN ) போன்றவற்றை பயன்படுத்தும் போது, வானிலை தகவல்கள் பிழையாக காட்டக்கூடும். மாறாக,நீங்களே இடத்தை தேர்வு செய்து கொள்வதற்கான வழிமுறை தற்போது வரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வானிலை அறிவிப்புகள் உங்களுக்கு தேவை இல்லை எனில் cog ஐ அழுத்தி, வானிலை அறிவிப்புகளை off செய்து கொள்ள முடியும்.

துல்லியத்தன்மை குறைபாடுகள் இருப்பினும், உங்கள் பயர் பாக்ஸ் உலாவியில்,புதிய தாவலில் (new tab) அதிக இடத்தை அடைக்காத, எளிமையான மற்றும் ஒரு அடிப்படையான பயன்பாடாக இந்த வானிலை முன்னறிவிப்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

Original link www.omgubuntu.co.uk/2024/06/firefox-127-weather-new-tab-feature

மொழிபெயர்த்தவர்:

ஶ்ரீ காளீஸ்வரர்.செ

இளங்கலை கல்லூரி மாணவர்

%d bloggers like this: