வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்

 

“கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்”

~ பாரதியின் பாடல் வரிகள்

“விற்கத் தெரியாதவன், வாழத் தெரியாதவன்”

~ “அங்காடி தெரு” படத்தில் வரும் வசனம்

வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வரிகள் இவை.

இந்த வர்த்தகத்தில் நடைபெறும் பரிமாற்று / பணமாற்று / பண்டமாற்று முறைகளின் தற்போதைய தேவை , வேகம். நல்ல தரம், விரைந்த சேவை இவை இரண்டுமே, இன்றைய தொழில் வளர்ச்சிக்குத் தாரக மந்திரங்கள்.

பொருளின் தரம் அது உங்க கையில் தான் இருக்கு. ஆனா வேகம்?!!.

பணிகளை விரைவாக முடிக்க அனைவரும் நாடுவது மென்பொருள் எனப்படும் “software”. இது எவ்வாறு உங்கள் தொழிலின் வேகத்துக்கு /வளர்ச்சிக்கு உதவும்?
பெரிய தொழிற்சாலைகளால் எவ்வாறு விரைவாக சேவை செய்ய முடிகிறது? ஆட்கள் பலம் / பண பலம் மட்டும் இல்லாமல்,  இங்கே  அறிவின்  பலம் மிக அதிகமாக  வேலை செய்கிறது. அது தான்  இந்த மென்பொருள்  எனப்படும் “software”. இன்றைய கணினி உலகில் பரிமாற்ற / வர்த்தக உலகிற்கு மென்பொருள்களின் (software) தேவை மிக மிக அவசியம்.
எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கக்கூடிய “Open Source Software” பல இருந்தும், அவை பற்றிய போதிய அறிவு இல்லாததே, இந்திய தொழில் முனைவோரின் முக்கிய குறைபாடு.

இது தான் குறைபாடு ? என்ன செய்யலாம் ?! இந்த கேள்விகளுக்கு விடை தேடுவதே, இந்தத் தொடரின் முக்கிய நோக்கம்.

அப்போ நாம என்னென்ன மென்பொருட்கள் இருக்குனு மட்டும் தான் பாக்க போறோமா ?.
“ஐஸ் கிரீம” கைல கொடுத்துட்டு எப்படி திங்கறதுன்னு சொல்லாம  போனா ?!!!.. அப்படி ஒரு தர்ம சங்கடமான நிலைக்கு போக மாட்டீங்க.
இந்த தொடரில் என்னென்ன “Open Source Softwares” இருக்கு , அதுல எது சிறந்தது ?, எதுக்கெல்லாம் (How to use) பயன்படுத்தலாம்?அதைப் பயன்படுத்தும் (Best Business Practices) சிறப்பான முறைகள் என்னென்ன? நிறுவுதல் (Installation) மற்றும் பராமரிப்பை (Maintenance) விரிவான முறையில் இந்த பகுதியில் நீங்கள் காணலாம்.

வலை / கணினி மூலம் வேகமான இந்த உலகில் வாடிக்கையாளரின் கேள்வி /குறைபாடுகளுக்கு விரைவாக பதில் தர வேண்டியது நமது கடமை.
இந்த வசதிகளை தரக்கூடிய  வாடிக்கையாளர் உதவி மென்பொருள்  “Open Source Help Desk” பற்றியும் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்

“A customer is the most important visitor on our premises. He is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so.”  – Mahatma Gandhi

காந்தியின் இந்த கூற்றை மெய்ப்பிக்க, வாடிக்கையாளர் ~ விற்பனையாளர் உறவு மேம்பட , வாடிக்கையாளரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்க பட வேண்டும், அதற்கு உதவுவது , வாடிக்கையாளர் உதவி மென்பொருள்  எனப்படும் “HelpDesk” மென்பொருள்.

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் வாடிக்கையாளர் உதவி மென்பொருட்கள் அதிகமாக இருந்தாலும், எல்லோராலும் விரும்பப்படுகிற வாடிக்கையாளர் உதவி மென்பொருட்கள் கீழே வருவன..

 

  1. OSTICKET
    வலை : www.osticket.com/
  2. Request Tracker
    வலை : bestpractical.com/rt/
  3. Help Desk Software
    வலை : freehelpdesk.org/
  4. OTRS (Open source Ticket Request System)
    வலை : otrs.org
  5. SiT – SiT Support Ticket System
    வலை :  sitracker.org

 

“தரமான ஒன்று இருந்தாலே போதுமே, அப்புறம் எதுக்கு இத்தனை” என்று கேக்குறீங்களா ?. உங்க கேள்வி நியாயமானது தான். ஒவ்வொன்றும் ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபடுகிறது. எவ்வாறு ? இதற்கான பதில், அடுத்த இதழில். தொடரும் …

 

சரன் சிங் (Saran Singh), ஒரு விவசாயின் மகன். கிராமத்து மண்வாசனையில் வளர்ந்து, நகரத்தில் பொட்டி தட்டுற வேலை. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பெருமையை உலகிற்கு சொல்லும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் “Software Developer”.

மின்னஞ்சல் : saran.saaos@gmail.com
வலை : www.saaos.com

%d bloggers like this: