GNUmedஎன்பது மருத்துவ ஆவணங்களை மின்னனுஆவணங்களாக பராமரித்திடஉதவிடும் ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் இது விண்டோ மேக் லினக்ஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இதுஉலகமுழுவதுமுள்ள நல்ல திறனுள்ள மருத்துவர்களும் நிரலாளர்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும் இது மருத்துவர்கள் மட்டுமல்லாது ,மருந்தாளுநர்கள் மருத்துவ உதவியாளர்கள் செவிலியர்கள் மனநல மருத்துவர்கள் போன்ற அனைத்து மருத்துவம் தொடர்பானவர்களுக்கும் தங்களுடைய பணியை எளிதாக்கிகொள்ள உதவகின்றது இதன்வாயிலாக மருத்துவம் தொடர்பாக பணிபுரியும் அனைவரும் தங்களிடம் வரும் நோயாளிகள் அவர்களுடைய நோய் அறிகுறிகள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் அறுவை சிகிச்சை தொடர்பான பரிந்துரைகள் ஆகிய அனைத்தையும் பதிவுசெய்துகொண்டு ஒவ்வொருமுறையும் நோயாளிகள் தங்களிடும் வரும்போதும்ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு அடுத்து செய்யவேண்டிய செயல்களை எளிதாக தீர்மாணிக்கமுடியும் இதனை ஒரு பெரிய மருத்தவமணையில்அல்லது மருத்துவ கல்லூரிகளில் அனைருக்கும் பயன்படுமாறான சேவையாளராகவும் நிறுவுகை செய்து அனைத்து மருத்துவம் தொடர்பானவர்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களான நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதியை செய்யலாம் அல்லது தனிப்பட்ட பயனாளர் கணினியில் மருத்துவம்தொடர்பான ஒரேயொருவர்கூட நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் மதிப்பு மிக்க நோயாளிகளின் அனைத்து தகவல்களையும் பிற்காப்புசெய்து கொண்டு தேவைப்படும்போதுமீட்டெடு்த்து பயன்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் wiki.gnumed.de எனும் இணைய தளமுகவரிக்குசெல்க