தமிழ் 99 விசைப்பொறி

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழில் தட்டச்சு செய்வதற்கான கணினி விசைப்பொறி வடிவம் தான் தமிழ் 99 கணினி விசைப்பொறி.

முன்பு, தமிழக அரசாங்கத்தால் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில், தமிழ் 99 விசைப்பொறி பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், தற்காலத்தில் வெளியாக கூடிய எந்த ஒரு கணிப்பொறியிலோ, மடிக்கணினியிலோ தமிழ் 99 விசைப்பொறி வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாக, தற்கால மாணவர்களுக்கு தமிழ் 99 விசைப்பொறி குறித்து அடிப்படை தகவல்கள் தெரிந்திருப்பதில்லை.

அடிப்படையில், நாம் ஆரம்பக் கல்வியில் பயின்று தமிழ் கூட்டெழுத்து முறையை தான் தமிழ் 99 விசைப்பொறி பயன்படுத்துகிறது

தமிழில் இருக்கக்கூடிய 247 எழுத்துக்களையும், மேலும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சில வடமொழி மற்றும் பிற மொழி எழுத்துக்களையும் ஒரே தட்டச்சுப் பொறியில் கொண்டு வந்து விட முடியாது.

அதனால், கூட்டெழுத்தில் இயங்கக்கூடிய 41 பொத்தான்களை மட்டுமே கொண்ட, கணிப்பொறி வடிவம் தான் தமிழ் 99 தட்டச்சு பொறி.

பெரும்பாலான நிறுவனங்கள், தமிழ் 99 தட்டச்பொறியை தயாரிப்பது இல்லை.

நான் தமிழ் 99 தட்டச்சு பொறி குறித்து தேடும்போது இணையத்தில் ஒரு நிறுவனத்தில் கூட சரியாக வாங்க முடியவில்லை.

வேறு வழி இல்லை! தமிழ் எழுத்துக்களை அச்சு எடுத்து ஸ்டிக்கர்கலாக மாற்றி என்னிடம் இருக்கக்கூடிய மடிக்கணினி பொத்தான்களில் ஒட்டலாம் என முடிவு செய்திருந்தேன்.

அப்பொழுதுதான் தெரிந்த ஒரு நபரின் உதவியோடு, நாகர்கோவிலில் இருக்கக்கூடிய ஒரு கணினி கடையில் முன்பதிவு செய்து tvs நிறுவனத்தில் இருந்து தமிழ்  99 தட்டச்சு பொறியை வாங்கினேன்.

நாம் சாதாரணமாக 500 ரூபாய்க்கு உள்ளாக நல்ல தட்டச்சுப் பொறிகளை வாங்கி விட முடியும்.ஆனால், இந்த தமிழ் 99 தட்டச்சு பொறியின் விலை சுமார் 1000 ரூபாய் வரை வருகிறது.

மேலும் அனைத்து இடங்களிலும் இந்த தட்டச்சு பொறி கிடைப்பதில்லை! என்பதை கடைக்காரர்களின் மூலமாக அறிய முடிகிறது.

முன்பதிவு செய்து சுமார் ஒரு வார காலத்திற்குப் பிறகு கிடைக்கிறது.

நான் தேடிப் பார்த்தபோது, ஒரு சில இணையதளங்களில் மட்டும் தமிழ் 99 தட்டச்சு பொறிகளை காண முடிந்தது. ஆனால், அந்த இணையதளங்களில் சரியான தொடர்பு வசதிகள் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் விசாரித்துப் பார்த்தபோது, டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து மட்டுமே தமிழ் 99 தட்டச்சு பொருள்கள் தயார் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஆகவே, தமிழை வளர்க்கத் துடிக்க கூடிய ஒவ்வொரு இளைஞனும் தமிழ் தட்டச்சுறியை வாங்க வேண்டும்.

நாம் மேற்படி முன்பதிவு செய்து வாங்கினால் தான்! வருங்காலத்தில் நிறுவனங்கள் தாமாக முன்வந்து இவற்றை தயாரிக்க தொடங்கும். அப்பொழுதுதான், நம்முடைய வருங்கால சந்ததிக்கு எட்டும் தூரத்தில் இந்த தமிழ் 99 தட்டச்சு பொறிகள் கிடைக்கும்.

இணைய உலகில் குண்டூசி முதல் கார் வரை இணையத்தில் வாங்கி விடலாம் எனும் சூழலில்! தமிழுக்கான தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தட்டச்சு பொறியை வாங்குவதற்கு நாம் இவ்வளவு தூரம் அலைக்கழிய வேண்டியிருக்கிறது.

நம்முடைய தமிழ் அறிவு பாட புத்தகத்தோடு சுருங்கி விட்டதுதான்! இதற்கு மிக முக்கியமான காரணம்.

நமக்கு முந்தைய சமூகங்கள் பிழை திருத்தம் செய்ய முடியாத தட்டச்சு கருவிகளை(old keyboards)பயன்படுத்தி புத்தகங்களை எழுதி,அச்சிட்டு, வெளியிட்டு! சமூகத்தில் தமிழ் குறித்த அறிவையும் , உலக தகவல்களையும் கொண்டு சேர்த்தனர்.

ஆனால், அனைத்து வசதிகளையும் வைத்துக்கொண்டு தமிழில் தட்டச்பொறியை வாங்குவதற்கு கூட நாம் தயாராக இல்லை.

நான் விசாரித்த வரையில், பெரும்பாலும் யாருக்கும் தமிழ் 99 விசைப்பொறி குறித்து தெரிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழ்99 தட்டச்சு பொறி குறித்த அறிவை மக்கள் இடையே பரப்ப வேண்டியது நம்முடைய கடமை தான்.

படித்த இளைஞர்கள் நிச்சயமாக ஒரு தமிழ் தட்டச்பொறியை வாங்க வேண்டும். தமிழில் தட்டச்சு செய்து பழக வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக தமிழ் 99 தட்டச்சுறியை பயன்படுத்தி வருகிறேன். முதலில் பயன்படுத்துவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

நாம் ஆரம்பக் கல்வியிலேயே விட்டுவிட்டு வந்த, கூட்டெழுத்து முறையின் அருமை இப்பொழுது புரிகிறது.

மேற்படி, இந்த தட்டச்சு பொறியை நீங்கள் வாங்க விரும்பினால்! நான் இணையதளத்தில் பார்த்து ஒரு நிறுவனத்தை குறித்த இணைப்பை கீழே தருகிறேன்.

oasisitstore.in/TVS-KEYBOARD-TAMIL-USB

ஆனால் அந்த நிறுவனத்தின் உண்மை தன்மையை என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

அல்லது நீங்கள் தட்டச்சு பொறியை நேரடியாக வாங்க விரும்பினால் சென்னையில் உள்ள tvs எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.

தட்டச்சு  அட்டைப்பெட்டியில் இருந்த முகவரியையும் இதனோடு இணைக்கிறேன்.

மேற்படி,இதனோடு எனக்கு  தட்டச்சு பொறி வாங்க உதவி செய்த,                 திரு.சபரீஷ் குமார் அவர்களுடைய மொபைல் எண்ணையும் இணைக்கிறேன்.அவர் அரசுத் துறையில் பணியாற்றி வருவதால் பெரும்பாலும் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள முயற்சிக்கவும்.

திரு.சபரிஷ் குமார் : +91 94872 08806

மேலும் தமிழ் 99 தட்டச்சு பொறியை எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ள விரும்பினால் கீழே வழங்கி இருக்கும் இணையதளத்தை பார்வையிடவும்.

blog.ravidreams.net/191/

கட்டுரையாளர் :-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி நாகர்கோவில் – 02)

இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com (நண்பர்களில் யாருக்காவது ஒலிம்பிக் போட்டிகள் குறித்து நான் எழுதி வரும் புத்தகத்தில் கட்டுரை எழுத விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.)

ssktamil.wordpress.com

%d bloggers like this: